Thursday, September 25, 2014

நவராத்திரி நாயகி - 1

திருமயிலை கற்பகாம்பாள் அன்ன வாகனம்

வழக்கம் போல இந்த நவராத்திரி சமயத்தில் அன்னையின் அருட்கோலங்கள் கண்டு அருள் பெறுங்கள் அன்பர்களே. உடன் அபிராமி பட்டர் இயற்றிய பதிகங்கள் .   

கொலு மண்டபத்திற்கு எழுந்தருள 
இருக்கின்றாள்  கற்பகவல்லி

அன்னையின் அழகு  



ஊஞ்சல் மண்டபத்தில் திருக்கயிலாய காட்சி 


ருத்திராக்ஷம் மற்றும்  மலர் அலங்காரம் 





அலங்கார மண்டபத்திலிருந்து கொலு மண்டபத்திற்கு 
எழுந்தருளுகின்றாள் விரை மலர் குழல் வல்லி
 மரைமலர் பதவல்லி  விமலி கற்பகவல்லி 


அம்மனின் முதல் நாள் கொலு 
அன்ன வாகனம் 




ஆடும் மயிலாய் உருவெடுத்து இறைவன் தாள்
 நாடி அர்சித்த நாயகி 



அன்னையின் பின்னழகு 


அபிராமி அம்மை பதிகம்

காப்பு

தூய தமிழ் பாமாலை சூட்டுதற்கு மும்மதன் நால்
வாய் ஐங்கரன்தாள் வழுத்துவாம் - நேயர் நிதம்
எண்ணும் புகழ்க்கடவூர் எங்கள் அபிராமவல்லி
நண்ணும் பொற்பாதத்தில் நன்கு.

கலையாத கல்வியும் குறையாத வயதும் ஓர் 
கபடு வாராத நட்பும்

கன்றாத வளமையும் குன்றாத இளமையும் 
கழுபிணி இலாத உடலும்

சலியாத மனமும் அன்பகலாத மனைவியும்
தவறாத சந்தானமும் 

தாழாத கீர்தியும் மாறாத வார்த்தையும்
தடைகள் வாராத கொடையும்

தொலையாத நிதியமும் கோணாத கோலும் ஒரு
துன்பமில்லா வாழ்வும்

துய்ய நின் பாதத்தில் அன்பும் உதவிப் பெரிய 
தொண்டரொடு கூட்டு கண்டாய்

அலையாழி அறிதுயிலு மாயனது தங்கையே
ஆதிகடவூரின் வாழ்வே

அமுதீசர் ஒரு பாகம் அகலாத சுகபாணி
அருள்வாமி அபிராமியே!   (1)

பொருள்: திருக்கடவூரில் வாழ்கின்ற அபிராமி அம்மையே! கிளியை திருக்கரத்தில் ஏந்தியவளே! அருளைப் பொழிபவளே! அமிர்த கடேஸ்வரரின் வாம பாகம் அகலாமல் இருக்கும் அன்னையே!  பாற்கடலில் யோக நித்திரை கொள்ளூம் மாயன் திருமாலின் தங்கையே!  உன்னை வணங்கும் அன்பர்களுக்கு பதினாறு பேறுகளையும் வழங்கு அம்மா என்று வேண்டுகிறார் அபிராமி பட்டர். 


காரளக பந்தியும் பந்தியின் அலங்கலும்
கரிய புருவச் சிலைகளும்

கர்ண குண்டலுமு(ம்) மதிமுக மண்டலம் நுதற்
கத்தூரிப்பொட்டும் இட்டுக்

கூர் அணிந்திடுவிழியும் அமுத மொழியும் சிறிய 
கொவ்வையின் கனி அதரமும்

குமிழ் அனைய நாசியும் குந்தநிகர் தந்தமும்
கோடு சோடான களமும்

வார் அணிந்து இறுமாந்த வனமுலையும் மேகலையும்
மணி நூபுரப்பாதமும்

வந்து எனது முன்னின்று மந்தகாசமுமாக 
 வல்வினைகள் மாற்றுவாயே

ஆரமணி வானிலுறை தாரகைகள் போல நிறை 
ஆதிகடவூரின் வாழ்வே

அமுதீசர் ஒரு பாகம் அகலாத சுகபாணி
அருள்வாமி அபிராமியே!   (2)

பொருள்: வானத்தில் உள்ள நட்சத்திரங்கள் போல பிரகாசிக்கும் மணி மாலைகள் பூண்ட அபிராமி அம்மையே! அமிர்த கடேஸ்வரரின் வாம பாகம்  அகலாதவளே!. கிளியைத் திருக்கரத்தில் எந்தியவளே! அருளை வழங்கும் அபிராமியே!  மேகம் போன்ற கரிய கூந்தல், அதில் மலர் மாலைகள், வில் போன்ற கரிய புருவங்கள், காதுகளில் விளங்கும் குண்டலங்கள், அழகிய திருமுகத்தில் கஸ்தூரிப்பொட்டு,  அமுத மொழி, கொவ்வைப்பஜம் போன்ற இதழ்கள், குமிழம்பூ போன்ற நாசி,  சங்கு போன்ற கழுத்து, தளராத திருத்தனங்கள்,  மெல்லிய இடையில் மேகலை , திருப்பாதங்களில் நூபுரங்களுடன் அடியேன் முன் புன்னகையுடன்  தோன்றி    என் கொடிய வினைகளை அகற்றி ஆட்கொள்ள வேண்டும் என்று வேண்டுகிறார் அபிராமி பட்டர். 



அம்மன் அருள் தொடரும். . . . .. ... 



Monday, July 28, 2014

மாசி கடலாட்டு திருவிழா - 3

சைதை காரணீஸ்வரர் கிராத வேடம்


இந்த வருடம் மாசி பௌர்ணமி திதி முதல் நாள் அன்றும் மக நட்சத்திரம் மறு நாளும் வந்தது இது வரை தாங்கள் பார்த்த தீர்த்தவாரி நிகழ்ச்சிகள் பௌர்ணமியன்று நடந்தது இப்பதிவில்  சென்னை சைதாப்பேட்டையின் இரு  ஆலயங்களின் மாசி மக அருட்காட்சிகள் ஆகும். 



காரணீஸ்வரர் மாசி மகத்தன்று கிராத வேடத்தில் எழுந்தருளி அருள் பாலிக்கின்றர். அது என்ன கிராதக வேடம் என்று யோசிக்கின்றிர்களா? அர்ச்சுனனுக்கு பாசுபதஸ்திரத்தை வழங்கிட சிவபருமான் வேடுவ வேடம் கொண்டும் உமையம்மை உடன் வேடுவச்சி கோலம் வருவதுதான் இந்த கிராதக வேடம். சிவபெருமானது 25 மூர்த்தங்களுள் கிராத மூர்த்தமும் ஒன்று. 

இதையே மாணிக்க வாசகர் தமது போற்றித் திருஅகவலில் 

கிராத வேடமொடு கிஞ்சுக வாயவள்
விராவு கொங்கை நல் தடம் படிந்தும்

பொருள்:  ( அர்ச்சுனனுக்கு  பாசுபதாஸ்திரம் அருள) வேடுவ உருவம் கொண்டு கையில் பினாகம் ஏந்தி முள் முருக்க மலர்  போன்ற சிவந்த உதடுகளை உடைய உமையம்மையுடன் எழுந்தருளினார் என்று பாடுகின்றார். 

கிராதன் என்றால்   ஈவு இரக்கம் இல்லாமல் சிறிது கூட இல்லாமல் கொலை செய்யும் வேடன் என்று பொருள். இங்கு சிவபெருமான் அர்ச்சுனனுக்கு அருள் இந்த் கொலையே செய்யும் வேடுவர் வேடம் தாங்கி உமையம்மையை வேடுவச்சி ஆக்கி அர்ச்சுனன் ஒற்றைக் காலில் நின்று தவம் செய்யும் இடத்திற்கு வருகின்றார் நான்கு வேதங்களையே நாய்களாககி கூட்டிக்கொண்டு வருகின்றார். 

அதே சமயம் துரியோதனால் அர்ச்சுனனைக் கொல்ல அனுப்பப்பட்ட   மூகாசுரன் பன்றி வடிவம் எடுத்து அர்ச்சுனை தன் கோரைப் பற்களால் கொல்ல பாய்ந்து ஓடி வருகின்றான். இருவரும் ஒரே நேரத்தில் அம்பு எய்கின்றனர். மூகாசுரன் மாண்டான். ஆனால் வேடுவனுக்கும் அர்ச்சுனனுக்கும் சர்ச்சை துவங்குகின்றது. முதலில் விற்போர்  இருவரும் சரமாரியாக அம்புகளை  விடுத்து   போரிடுகின்றனர்.  இதையே அன்பர்கள் "விஜயன் வில்லால் அடித்தான், சாக்கியன் கல்லால் அடித்தான்"   என்று கொண்டாடுகின்றனர். வேடுவனாக வந்த சிவபெருமான் அர்ச்சனுடைய காண்டீபத்தை உடைக்க பின்னர் இருவருக்கும் மல்யுத்தம் துவங்குகின்றது. தன் திருமேனி ஸ்பரிசம் அர்ச்சுனனுக்கு கிடைக்க அந்த பரமகருணாமூர்த்தி செய்த திருவிளையாடல் இது. 

பின்னர் சிவபெருமான் உண்மைக் கோலம் காட்டி அவனை காக்கவே தான் இவ்வடிவத்தில் வந்ததை உணர்த்தி பாசுபதாஸ்திரத்தையும்  வழங்குகிறார்.    




காரணீஸ்வரத்தில் மாசி மகத்தன்று காலை சுமார் பத்து மணி அளவில் சந்திரசேகரர் சன்னதி தெருவில் உள்ள செங்குந்த விநாயகர் கோவிலுக்கு எழுந்த்ருளுகிறார். அங்கு சுவாமிக்கும் அம்பாளுக்கும் அபிஷேகம் நடைபெறுன்றது. பின்னர் இரவு சுவாமி கிராத மூர்த்தி  வேடத்தில் அருட்காட்சி தந்து வீதி உலா வருகின்றார்.   


”கொத்தலர் குழலியோடு விசயர்க்கு நல்கு
 குணமாய வேட விகிர்தன் ”


 என்று  திருஞான சம்பந்தர் போற்றிய வேட உருவைக் கண்டு களியுங்கள்.


அடுத்து தாங்கள் காண்பது செங்குந்த கோட்ட சிவசுப்பிரமணிய சுவாமியின் மயில்வாகன சேவை ஆகும்.  இந்த அலங்காரத்தின் சிறப்பு என்னவென்று தெரிந்து கொள்ள அடுத்த படங்களைப் பாருங்கள்.






ஆம் அன்று ஓம் என்னும் பிரணவத்திற்கு பொருள் தெரியவில்லை என்பதால் நான்முகனைக் குட்டி சிறையில் அடைத்து அந்த மெய்ப்பொருளை  தகப்பனுக்கே உபதேசம் செய்த தகப்பன்சுவாமி இங்கே ஓம் என்னும் பிரணவத்தின் இதையே ஓம்கார சொருபமாக  பச்சை மயில் வாகனத்தில் எழுந்தருளி அருள் பாலிக்கின்றார்.  

ஆமாம் பிரணவத்தின் பொருள்தான் என்ன? "ப்ர" என்றால் விசேஷமானது. "நவம்" என்றால் புதுமை என்றும் ஒரு பொருள். அதாவது சிந்திக்க, சிந்திக்க - அனுபவிக்க அனுபவிக்க புத்தம் புதிய  சிறப்பான உண்மைகளை உணர்த்துவது பிரணவம் . என்றும் வாடாமல், காலத்தால் தேயாமல் எப்போதும் புதுமையாகவே இருக்கும் ஆன்மதத்துவம்தான் பிரணவம் என்பார் வாரியார் சுவாமிகள். 





 மிக்க  நன்றி

கோமதி அரசு அம்மா


Tuesday, June 17, 2014

மாசி கடலாட்டு திருவிழா - 2

மாசி மாதம் முழுமதியும் மக நட்சத்திரமும் இணைந்து வரும் நன்னாளில் மாசி கடலாட்டு, தீர்த்த வாரி, தீர்த்தம் கொடுத்தல், மாசி மகம் என்றெல்லாம் அழைக்கப்படும் இத்திருவிழா தமிழகமெங்கும் வெகு விமர்சையாக நடைபெறுகின்றது. கன்னியாகுமரி முதல் சென்னை வரை கடற்கரையோரம் அமைந்த திருக்கோவில்களின் அனைத்து உற்சவ மூர்த்திகளும் கடலுக்கு எழுந்தருளி தீர்த்தவாரி கண்டருளுகின்றனர். ஆற்றங்கரையில் அமைந்த திருக்கோவில்களின் மூர்த்திகள் ஆற்றுக்கு எழுந்தருளி தீர்த்தம் கொடுக்கின்றனர். மற்றும் பல் வேறு திருக்குளங்கள் முதலான நீர் நிலைகளில் மாசி மக தீர்த்தம் கொடுத்தல் சிறப்பாக நடைபெறுகின்றது. கும்பகோணத்தில் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு கொண்டாடப்படும் மஹாமகமும் இந்த மாசிமக விழாதான்.


திருமயிலை திருவட்டீஸ்வரர்
 வெள்ளி ரிஷப வாகனத்தில்


* * * * * * * * * *


திருமயிலை மல்லீஸ்வரர்


                                        * * * * * * * * * *



திருமயிலை வீரபத்திரர்

தக்ஷன்


                                          * * * * * * * * * *


சிந்தாதிரிப்பேட்டை முத்துக்குமரன்


முத்துக்குமரன் திருத்தேரில் 




                                        * * * * * * * * * *


அங்காளபரமேஸ்வரி அம்மன் 
                                    
                                         * * * * * * * * * *     


* * * * * * * * * *





* * * * * * * * * *






கொள்ளாபுரி அம்மன் சூரிய பிரபையில்


அம்மனின் பின்னழகு 


ஸ்நான மூர்த்தி அம்மன்

* * * * * * * * * *



திருமயிலை ஏகாம்பரேஸ்வரர்




                                                                                                                   மாசிக் கடலாட்டு தொடரும் >>>>>>> 



Wednesday, June 11, 2014

மாசி கடலாட்டு திருவிழா - 1

இந்த வருடம் சென்னைக் கடற்கரையில் நடைபெற்ற மாசி மக தீர்த்தவாரியில் கலந்து கொண்ட சுவாமிகளின் தொகுப்பு இப்பதிவு. 


முதலில் நாம் காண்பது திருமயிலை கபாலீஸ்வரரின்    தீர்த்தவாரி.


கடற்கரைக்கு  கடலாட்டு காண வரும் கபாலீஸ்வரர்





இந்த வரும் சைவ தெய்வ திருமூர்த்தங்களும், வைணவ திருமூர்த்தகளும் ஒரே இடத்தில் கடலாட்டு கண்டருளினர்.


பஞ்ச பர்வ உற்சவம் கண்டருளும் சந்திரசேகர சுவாமியாக  மாசி பௌர்ணமியன்று கபாலீஸ்வரர் கடற்கரைக்கு எழுந்தருளினார்.

கடல் வாழ் உயிரினங்களுக்கும் 
அருள் பாலிக்கின்றார் கபாலீஸ்வரர் 



அஸ்திர தேவர்

அஸ்திர தேவர் கடலாடி தீர்த்தம் தருகின்றார். 

அப்போது உடன் கடலாடும் பக்தர்கள்

கடலாடிய பின்


கடற்கரையில் பல்வேறு
 திரவியங்களால்   அபிஷேகம்


பின்னர் நைவேத்யமாக வெள்ளரிக்காய் படைக்கப்படுகின்றது. அனைவருக்கும் பிரசாதம் வழங்கிய பின்  கபாலீஸ்வரர் திருக்கோவிலுக்கு எழுந்தருளுகின்றார்.

மாசி மக தீர்த்தவாரி பற்றி தெரிந்து கொள்ள இங்கே செல்லுங்கள்


அம்மையின் ஞானப்பலுண்ட ஆளுடையப்பிள்ளை திருஞான சம்பந்தர் திருமயிலையின்  மாசி கடலாட்டைப் பற்றி பாடிய பதிகம் 

மடலார்ந்த தெங்கின் மயிலையார் மாசிக்
கடலாட்டுக் கண்டான் கபாலீச் சரமமர்ந்தான்
அடலானே றூரு மடிக ளடிபரவி
நடமாடல் காணாதே போதியோ பூம்பாவாய்


கபாலீச்சரம் அமர்ந்தான் கடலாட்டு 
காணும் அற்புத காட்சி

பொருள்: பூம்பாவாய்! மடல்கள் நிறைந்த தென்னை மரங்கள் நிறைந்த மயிலாப்பூரில் மாசி மக நாளில் கடலாட்டுக் கண்ட களிப்பொடு கபாலீச்சரம் என்னும் கோயிலில் எழுந்தருளியிருப்பவனும், வலிமை பொருந்திய ஆனேற்றில் ஊர்ந்து வருபவனும் ஆகிய இறைவன் புகழ் பரவி அப்பெருமானது நடனமாடும் காட்சியைக் காணாது செல்வது முறையோ? என்று அம்மையின் ஞானப்பாலுண்ட ஆளுடையப்பிள்ளையாம் திருஞானசம்பந்தர் திருமயிலையில் எலும்பை பெண்ணாக்கிய அற்புதம் செய்த போது பாடிய இப்பதிகத்தில் கபாலீஸ்வரப் பெருமானின் பல்வேறு திருவிழாக்களில் மாசி கடலாட்டு விழாவை காணாமல் போகலாமா? என்று வினவுகிறார். 

மாசிக் கடலாட்டு தொடரும் >>>>>>> 

Monday, March 24, 2014

பக்தி இலக்கிய பொக்கிஷம்






அடியேனது இரண்டாவது புத்தகம்     சிவபெருமானுக்குரிய அஷ்ட மஹா விரதங்கள்     என்ற நூல் சமீபத்தில் வெளியானது.  இந்நூலைப் பற்றி தமிழ் நாளிதழ்களில் வந்த மதிப்புரைகள் தங்கள் பார்வைக்காக.


பக்தி இலக்கிய பொக்கிஷம் என்று சிறப்பித்த 
தினமலர் நாளிதழுக்கு
 மிக்க நன்றி . 




மிக விரிவாக  சிவபெருமானை வழிபடத்தேவையான அனைத்தும் ஒரே நூலில் அமைத்துத் தந்திருப்பது சிறப்பு என்று  அடையாளம் காட்டிய  தினமணி நாளிதழுக்கும் மிக்க நன்றி.   




விரதங்களின் மகிமை, தோன்றிய விதம், இந்த விரத நாட்கலில் கோவில்களில் நடைபெறும் விழாக்கள் என்று ஆசிரியரின் பார்வை பரவியிருக்கின்றது என்று துல்லியமாக கூறிய தினத்தந்தி நாளிதழுக்கும் மிக்க நன்றி. 



இப்புத்தகம் பற்றிய மதிப்புரையை தங்கள்  வலைப்பூவில்  பதிவிட்ட ஆன்மீகக்கடல் (http://www.aanmigakkadal.com/) வலைப்பூவினருக்கும் மிக்க நன்றி.  மேலே உள்ள சுட்டியை அழுத்தினால் மதிப்புரையைப் படிக்கலாம்.

புத்தகம் வேண்டும் அன்பர்கள் அடியேனுக்கு muruganandams@rediffmail.comல்    மின்னஞ்சல் செய்யலாம். 


Thursday, February 13, 2014

ஐயா அமர்நாத் பனி லிங்கம் தரிசிக்க ஆசையா?


ஆடி ஆவணி மாதங்களில் வளரும் அமர்நாத் பனி லிங்கத்தை தரிசிக்க விரும்பும் அன்பர்கள் இவ்வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளவும்.




Dinamlar news       

புதுடில்லி: இந்தாண்டிற்கான அமர்நாத்கோவில் புனித பயண முன்பதிவு மார்ச் ஒன்றாம தேதி துவங்க உள்ளது. இத்தகவலலை கோவில் நிர்வாக குழு அதிகாரி நவீன் கே சவுத்ரி தெரிவித்துள்ளார். முன்னதாக கோவில் நிர்வாக குழு தலைவர் என்.என். வோர தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டதில் எடுக்கப்பட்ட முடிவின்படி மார்ச் ஒன்றாம் தேதி முன்பதிவு துவங்கப்பட உள்ளது. மேலும் நாடு முழுவதும் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளை மற்றும் எஸ் பேங்க் கிளைகள் மூலமும் முன்பதிவு செய்துகொள்ளலாம். வரும் ஜூன் மாதம் 28-ம் தேதி முன்பதிவு செய்தவர்களுக்கான யாத்திரை துவங்குகிறது. யாத்திரை வரும் ஆகஸ்ட் மாதம 10-ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. யாத்திரைக்கு விண்ணப்பிப்பவர்கள் அனைவரும் உடல் ஆரோக்கியம் குறித்த விண்ப்பத்தை இணைக்க வேண்டும். இதற்கான படிவத்தை கோவிலின் இணையதளம் மூலமும் பெற்றுக் கொள்ளலாம் என அவர் தெரிவித்துள்ளார்.கடந்த ஆண்டுக்கான யாத்திரை முன்பதிவு மார்ச் மாதம் 18-ம் தேதி நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. 

Wednesday, January 1, 2014

ஆரமுதே பள்ளியெழுந்தருள்



திருசிற்றம்பலம்

திருப்பள்ளியெழுச்சி # 10 

ஆரமுதே பள்ளியெழுந்தருள்








" புவனியிற் போய்ப்பிற வாமையின் நாள்நாம்
போக்குகின்றோம் அவமே இந்தப்பூமி
சிவனுய்யக் கொள்கின்ற வாறென்று " நோக்கித்
திருப்பெருந் துறையுறை வாய்! திருமாலாம்
அவன்விருப் பெய்தவும் மலரவன் ஆசைப்
படவும்நின் அலர்ந்தமெய்க் கருணையும் நீயும்
அவனியிற் புகுந்தெம்மை ஆட்கொள்ள வல்லாய்;
ஆரமு தே; பள்ளி எழுந்தருளாயே.........(10)



பொருள்:திருப்பெருந்துறையில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானே! எங்கும் நிறைந்த அமுதமே! எம்பெருமானே! நீவிர் உயிர்களுக்கெல்லாம் ஈடேற்றம் வழங்கி ஏற்றுக் கொள்வது, இந்த மண்ணுலகத்தின் வழியாகவே என்னும் உண்மையை உணர்ந்த திருமாலும் நான்முகனும், தாங்களும் இந்த மண்ணுலகத்தில் போய் பிறக்காததால் வாழ்நாளையெல்லாம் வீணாகக் கழிக்கின்றோம் என்று ஏங்குகின்றனர்.

இப்படி திருமால் விரும்பும்படியும், நான்முகன் ஆசைப்படும்படியாகவும் உன் மலர்ந்த மெய்க் கருணையும் நீயுமாக இம்மண்ணுலகத்திற்கு வந்து எங்களை ஆட்கொள்ள வல்லவனே!  அன்பர்களுக்கு தெவிட்டாத ஆரமுதமானவனே! பள்ளியிலிருந்து எழுந்தருள்வாயாக!

திருசிற்றம்பலம்

திருப்பள்ளியெழுச்சி முற்றியது


குறையேதும் இருந்தால் அது அடியேனுடையது நிறைகள் அனைத்தும் மாணிக்கவாசகரின் திருவடிகளில் சமர்ப்பணம்.



**********