Sunday, October 6, 2013

ஆனந்த நவராத்திரி -2


 மீனாக்ஷி அலங்காரம்

 சண்டிகா


அன்னை சிவசக்தி ஐக்கிய ரூபிணியல்லவா எனவே விஜயதசமியன்று அர்த்தநாரீஸ்வரராகவோ அல்லது சிவபெருமானாகவோ அலங்காரம் செய்வார்கள். . 

                           இங்கு சிவலிங்க ரூபத்தில் அன்னைக்கு அலங்காரம்


                                                                             ஓம் சிவாயை நம:
                                                          ஓம்  சிவசக்தைக்ய ரூபிண்யை  நம:



முத்து மாரியம்மன் 

புல்லாங்குழல் நாயகி

ஸ்ரீ வைஷ்ணவ்யை  நம:
கோவிந்த ரூபிணி நம:
நாராயணி நமோஸ்துதே

அன்னை இங்கே கண்ணன் ரூபத்தில் புல்லாங்குழல் வாசிக்கும் கோலத்தில் அருளுகின்றாள்.

ஸ்ரீ மந்தர மாத்ருகா புஷ்ப மாலா ஸ்தவம் 

(ஸ்ரீ ஆதி சங்கர பகவத் பாதர் அருளியது)

ஆதி சங்கரரால் இயற்றப்பட்ட இந்த ஸ்தோத்திரதை பாராயணம்  செய்வது அம்பாளுக்கு நாம்  புரியும் மானசீகமாக பூஜை செய்வதாகும்.  இந்த ஸ்தோத்திரத்தில் மூன்று சிறப்புகள் உள்ளன. முதலாவது ஸ்ரீவித்யா உபாசகர்களுக்கு மிகவும் இன்றியமையாத ஸ்ரீ லலிதா மஹா த்ரிபுரஸுந்தரியின் பஞ்ச தசாக்ஷரி  மந்திரத்தின் பதினைந்து எழுத்துக்களை முதல் எழுத்தாகக் கொண்டு ஒவ்வொரு ஸ்லோகமும் அமைந்துள்ளது. ஆகவே இந்த ஸ்தோத்திரத்தை அம்மன் முன்னர் பாராயணம் செய்யும் போது மந்திரப்பூர்வமாக அன்னையை துதித்த பரிபூரண பலன் கிட்டுகின்றது. இரண்டாவது  சோடசோபசாரம் என்னும் பதினாறு உபசார முறைகளை அருமையாக ஆச்சார்யர் இந்த  ஸ்தோத்திரத்தில் விளக்கியுள்ளார். மூன்றாவது விஸ்தாரமாக பூஜை செய்ய முடியாதவர்களும் இந்த ஸ்தோத்திரத்தை படிப்பதன் மூலம் அவ்வாறு பூஜை செய்த பலனைப்  அன்னையின் அருளால் நிச்சயம் பெறுவர்.
இப்பதிவில் நான்காவது ஸ்லோகம் முதல் ஆறாவது ஸ்லோகம் வரை காணலாம் அன்பர்களே.

இந்த நான்காவது ஸ்லோகம் அன்னைக்கு அபிஷேகம் செய்வதை விளக்குகின்றது.
லக்ஷ்யே யோகி-ஜனஸ்ய ரக்ஷித-ஜகஜ்-
 ஜாலே விசாலேக்ஷணே
ப்ராலேயாம்பு-படீர-குங்கும-லஸத்-
 கர்ப்பூர-மிச்ரோதகை:  |
கோக்ஷீரைரபி நாலிகேர-ஸலிலை:
 சுத்தோதகைர்- மந்த்ரிதை:
ஸ்நாநம் தேவி தியா மயைத-தகிலம்
 ஸந்துஷ்டயே கல்பதாம் ||
க்ஷ்யே ! யோகி-ஜநஸ்ய ரக்ஷித-ஜகத்-
 ஜாலே! விசால ஈக்ஷணே!
ப்ராலேய-அம்பு-படீர-குங்கும-லஸத்-
 கற்பூர மிச்ர-உதகை:  |
கோக்ஷீரை: அபி நாலிகேர-ஸலிலை:
 சுத்த-உதகை: மந்த்ரிதை:
ஸ்நாநம் தேவி!   தியா மயா-ஏதத்
 அகிலம் ஸந்துஷ்டயே கல்பதாம் II       4.
ஹே தேவி, யோகிகளின்   இலக்கானவளே. உலகத்தைக் காப்பவளே. விரிந்து பரந்த திருவிழியுடையவளே!  பன்னீரும், சந்தனமும், குங்குமப்பூவும் பச்சைக்கற்பூரமும் கலந்த நீராலும், பசும்பால், இளநீர், மந்திரித்த சுத்த ஜலம் இவற்றாலும் மனதளவில் அபிஷேகம் செய்கிறேன். இவையெல்லாம் உன் மகிழ்ச்சி உண்டாக்கட்டும்.
ப்ரேலாயாம்பு: - பன்னீர், படீர - சந்தனம்
இந்த ஐந்தாவது ஸ்லோகம் அம்பிகைக்கு வஸ்திரம் சார்த்துவதை விளக்குகின்றது.
ஹ்ரீங்காராங்கித-மந்த்ர-லக்ஷித-தநோ
 ஹேமாசலாத் ஸஞ்சிதை:
ரத்னை-ருஜ்வல-முத்தரீய-ஸகிதம்
 கௌஸும்ப-வர்ணாம்சுகம்  |
முக்தா-ஸந்ததி-யக்ஞஸூத்ர-மமலம்
 ஸௌவர்ண-தந்தூத்பவம்
தத்தம் தேவி தியா மயைத-தகிலம்
 ஸந்துஷ்டயே கல்பதாம்   ||
ஹ்ரீம்கார-அங்கித-மந்த்ர-லக்ஷித-தநோ!
 ஹேம-அசலாத் ஸஞ்சிதை:
ரத்நை உஜ்ஜ்வலம் -உத்தரீய-ஸஹிதம்
 கௌஸும்ப வர்ண அம்சுகம் I
முக்தா-ஸந்ததி-யஜ்ஞஸூத்ரம்-அமலம்
 ஸெளவர்ண தந்து-உத்பவம்
தத்தம் தேவி தியா மயா-ஏதத்- அகிலம்
 ஸந்துஷ்டயே கல்பதாம் II       5.
ஹ்ரீங்காரத்தை உள்ளடக்கிய மந்திரத்தின் பொருளானவளே! பொன் மலையிலிருந்து சேகரித்த ரத்தினங்கள் இழைத்ததும், உத்தரீயத்துடன் கூடியதுமான இளஞ்சிவப்பு நிற துகிலையும்,  பொன் சரடுடன் கூடிய முத்துமணி கோவையான தூய யஞ்ஞோப வீதத்தையும் அன்னையே தங்களுக்கு ஸமர்ப்பிக்கிறேன். இவை உமக்கு சந்தோஷத்தை உண்டு பண்ணட்டும்.
இந்த ஆறாவது ஸ்லோகம் அம்பாளுக்கு பலவித ஆபரணங்கள் அணிவிப்பதை விளக்குகின்றது
ஹம்ஸைரபி-யதிலோபனீய-கமனே
 ஹாராவலீ-முஜ்வலாம்
ஹிந்தோல-த்யுதிஹீர-பூரிததரே
 ஹேமாங்க்தே கங்கணே  |
மஞ்ஜீரௌ மணிகுண்டலே மகுடப்-
 யர்த்தேந்து-சூடாமணிம்
நாஸா-மௌகதிக-மங்குலீய-கடகௌ
 காஞ்சீமபி ஸ்வீகுரு  ||
ம்ஸை: அபி-அதி-லோபநீய-கமனே
 ஹாராவலீம்- உஜ்ஜ்வலாம்
ஹிந்தோல த்யுதி-ஹீர-பூரித-தரே
 ஹேம-அங்கதே கங்கணே |
மஞ்ஜீரௌ மணி-குண்டலே மகுடம்-
 அபி-அர்த இந்து- சூடாமணிம்
நாஸா-மௌக்திகம் அங்குலீய
 கடகௌ காஞ்சீம்-அபி  ஸ்வீகுரு   II  6.
ஹே தேவி!. ராஜ அன்னங்களே உன் நடைப்பழக ஏங்கி விரும்புகின்றனவே  ஒளிரும் ஹாரத்தையும், அசைந்தாடும் பிரகாசமுள்ள வைரங்கள் பதித்த தங்க தோள்வளைகளையும், கை வளையல்களையும், சதங்கைகளையும், குண்டலங்களையும் கிரீடம், அரைவட்டப் பிறைச் சந்திர சிகை ஆபரணம், முத்து மூக்குத்தி, மோதிரம், கடகம், ஒட்டியாணம் ஆகிய ஆபரணங்களால் உன்னை அலங்கரிக்கின்றோம் இவற்றையெல்லாம் ஸ்வீகரித்துக்கொள்.       

                                                                                                     அம்மன் அலங்காரங்களும், ஸ்தோத்திரமும் தொடரும்...........


Saturday, October 5, 2013

ஆனந்த நவராத்திரி -1

அம்மன் அலங்காரங்கள் 

முதற்கண் அன்பர்கள் அனைவருக்கும் இனிய நவராத்திரி  நல் வணக்கங்கள்.

வழக்கம் போல் இந்த வருடமும்

பத்து நாட்கள் பத்து வித அலங்காரம் 
அன்னை முத்துமணி மண்டபத்தில் அமர்ந்திருந்தாள்  -

 என்றபடி அன்னை இந்த நவராத்திரி  இரவில்  அளிக்கும் கொலுக் காட்சிகளை கண்டு அவள் அருள் பெறுங்கள்.

 அத்துடன் ஆதி சங்கர பகவத் பாதாள் இயற்றிய  "ஸ்ரீ மந்தர-மாத்ருகா- புஷ்பமாலா-ஸ்தவம்"  என்னும் ஸ்தோத்திரத்தை படித்து மானசீகமாக அன்னைக்கு பூஜை செய்யுங்கள்.

 (அடியேன் முறையாக சமஸ்கிருதம் பயின்றவன் அல்ல, ஆச்சாரியரின் அற்புத ஸ்தோத்திரத்தால் ஈர்க்கப்பட்டு, பல இடங்களில் படித்த அதன் விளக்கத்தை தமிழில் அடியேனின் சிற்றறிவிற்கு எட்டிய வரையில் கொடுக்க முயற்சி செய்துள்ளேன், குற்றம் ஏதுமிருந்தால், அன்புடன்  சுட்டிக் காட்டுங்கள் பிழையை சரி செய்ய ஏதுவாக இருக்கும் .)   


சென்னை அசோக் நகர் கருமாரி த்ரிபுரசுந்தரி ஆலயத்தில் நடைபெற்ற ஒரு கோடி லலிதா சகஸ்ரநாம அர்ச்சனை வைபவத்தின் போது நடைபெற்ற சண்டி ஹோமத்தின் போது அமைக்கப் பெற்ற சண்டி தேவி. 


எந்தக்கோவில்? எந்த அம்பாள்? எடுத்தவர் யார்? என்றெல்லாம் தெரியவில்லை. ஒரு புகைப்பட நிலையத்தில் பார்த்தவை.  அம்மனின் படங்களைப் பார்த்த போது நவராத்திரி அலங்காரப்படங்களாக உள்ளனவே என்று அவர்களிடம் கேட்டு வாங்கின படங்கள் இவை. 

எடுத்தவர் யாராக இருந்தாலும் அவர்களுக்கு அனந்த கோடி நன்றிகள் உங்கள் மூலமாக அன்னையின் இந்த அற்புத தரிசனத்தை இந்த நவராத்திரி சமயத்தில்  அன்பர்களுடன் பகிர்ந்து கொள்ள  ஒரு வாய்ப்பு கிட்டியுள்ளது.


 சரஸ்வதி அலங்காரம்

 சாரதாம்பாள் அலங்காரம்

உற்சவர் சரஸ்வதி அலங்காரம்


ஸ்ரீ மந்தர மாத்ருகா புஷ்ப மாலா ஸ்தவம் 

(ஸ்ரீ ஆதி சங்கர பகவத் பாதர் அருளியது)

ஆதி சங்கரரால் இயற்றப்பட்ட இந்த ஸ்தோத்திரதை பாராயணம்  செய்வது அம்பாளுக்கு நாம்  புரியும் மானசீகமாக பூஜை செய்வதாகும்.  இந்த ஸ்தோத்திரத்தில் மூன்று சிறப்புகள் உள்ளன. முதலாவது ஸ்ரீவித்யா உபாசகர்களுக்கு மிகவும் இன்றியமையாத ஸ்ரீ லலிதா மஹா த்ரிபுரஸுந்தரியின் பஞ்ச தசாக்ஷரி  மந்திரத்தின் பதினைந்து எழுத்துக்களை முதல் எழுத்தாகக் கொண்டு ஒவ்வொரு ஸ்லோகமும் அமைந்துள்ளது. ஆகவே இந்த ஸ்தோத்திரத்தை அம்மன் முன்னர் பாராயணம் செய்யும் போது மந்திரப்பூர்வமாக அன்னையை துதித்த பரிபூரண பலன் கிட்டுகின்றது. இரண்டாவது  சோடசோபசாரம் என்னும் பதினாறு உபசார முறைகளை அருமையாக ஆச்சார்யர் இந்த  ஸ்தோத்திரத்தில் விளக்கியுள்ளார். மூன்றாவது விஸ்தாரமாக பூஜை செய்ய முடியாதவர்களும் இந்த ஸ்தோத்திரத்தை படிப்பதன் மூலம் அவ்வாறு பூஜை செய்த பலனைப்  அன்னையின் அருளால் நிச்சயம் பெறுவர்.

இந்த ஸ்தோத்திரத்தின் முதல் ஸ்லோகத்தினால் அன்னை  ஆவாஹனம் செய்யப்பட்டு (வரவேற்கப்பட்டு) மானசீக தியானத்தின் மூலம் ஆசனம் அளிக்கப்படுகின்றாள்.

கல்லோலோல்லஸிதாம்ருதாப்தி லஹரீ-
 மத்யே விராஜன்-மணி
த்வீபே கல்பக-வாடிகா-பரிவ்ருதே
 காதம்பவாட்யுஜ்ஜ்வலே |
ரத்னஸ்தம்ப-ஸஹஸ்ர-நிர்மித-ஸபா-
 மத்யே விமானோத்தமே
சிந்தாரத்ன-விநிர்மிதம் ஜனனி தே
 ஸிம்ஹாஸனம் பாவயே ||

ல்லோல- உல்லஸித அம்ருத- அப்தி  லஹரீ-
 மத்யே விராஜன்-மணி-
த்வீபே கல்பக வாடிகா பரிவ்ருதே
 காதம்ப-வாட்-உஜ்ஜ்வலே  |
ரத்ன-ஸ்தம்ப-ஸஹஸ்ர-நிர்மித-ஸபா-மத்யே விமான
 உத்தமே சிந்தா-ரத்ன விநிர்மிதம் ஜனனி தே
ஸிம்ஹாஸனம் பாவயே   ||   1.
அலை பொங்கும் அமிர்தக்கடலின் அலைகளின் நடுவே விளங்கும் மணித்வீபத்தில், கற்பகச்சோலை சூழ்ந்த கதம்ப வனம் விளங்குகிறது. அவ்வனத்தில் ஆயிரக்கணக்கில் இரத்தினத் தூண்கள் அமைந்த சபையின் நடுவில் சீரிய விமானத்தின் கீழே சிந்தாமணியால் வடித்த சிம்மாசனத்தை ஹே தாயே! மனதிற் பாவிக்கிறேன். ( அன்னையே வந்து அமர்ந்து எங்களின் மானசீக பூஜை ஏற்று அருள் புரிவாயாக)

 பொருள்: காதம்பவாடீ- கதம்பமரச் சோலை

அன்னை வந்து அமர்ந்தவுடன்  அவளது திருக்கோலத்தை வர்ணித்து நம் மனத்தில் இருத்தும்  தியானமே இந்த இரண்டாவது ஸ்லோகம்.
ஏணாங்கானல-பானுமண்டல-லஸச்
 ச்ரீசக்ர-மத்யே ஸ்திதாம்
காலார்க்க-த்யுதி-பாஸுராம் கரதலை: 
 பாசாங்குசௌ பிப்ரதீம் |
சாபம்பாணமபி ப்ரஸன்னவதனாம்
 கௌஸும்ப-வஸ்த்ரான்விதாம்
தாம் த்வாம் சந்த்ர கலாவதம்ஸ-மகுடாம்
சாருஸ்மிதாம் பாவயே ||  
ணாங்க-அநல- பானு-மண்டல-லஸத்-
 ஸ்ரீசக்ர-மத்யே ஸ்திதாம்
பால-அர்க-த்யுதி-பாஸுராம் கர-தலை:
 பாச அங்குசௌ  பிப்ரதீம் |
சாபம் பாணம்-அபி ப்ரஸன்ன-வதனாம்
கௌஸும்ப-வஸ்த்ர-அந்விதாம்
 தாம் த்வாம் சந்த்ரகலா-வதம்ஸ மகுடாம்
 சாரு-ஸ்மிதாம் பாவயே II         2.
சந்திரன், அக்னி, சூர்ய மண்டலங்கள் விளங்கும் ஸ்ரீசக்ரத்தின் நடுவில் வீற்றிருப்பவளும், இளம் சூரியன் போன்று ஒளிர்பவளும், திருக்கரங்களில் பாசம், அங்குசம், வில், அம்பு, இவற்றை தரித்தரிப்பவளும், மகிழ்ச்சி பொங்கும் முகத்துடன், காவிவஸ்திரம் அணிந்தவளும், சந்திரபிறை அலங்கரிக்கும் கிரீடம் அணிந்தவளும், அழகிய புன்னகை தவழும்  முக மண்டலத்துடன் கூடிய  உன்னை மனதில் காண்கிறேன்.
ஏணாங்க: - சந்திரன்

நாம் பூஜையின் போது செய்யும் மற்ற உபசாரங்களை மானசீகமாக செய்வது போல  மற்ற ஸ்லோகங்கள் அமைந்துள்ளன.
இந்த மூன்றாவது ஸ்லோகம்  ஆசமநம் அளிப்பதை விளக்குகின்றது.
ஈசானாதிபதம் சிவைகபலகம்
ரத்னாஸனம் தே சுபம்
பாத்யம் குங்கும-சந்தனாதி-பரிதை-
ரர்க்யம் ஸரத்னாக்ஷதை |
சுத்தை-ராசமனீயகம் தவ ஜலைர்-
பக்த்யா மயா கல்பிதம்
காருண்யாம்ருத-வாரிதே ததகிலம்
ஸந்துஷ்டயே கல்பதாம்  ||
சாந-ஆதி- பதம் சிவ-ஏக-பலகம்
  ரத்ன ssசனம் தே சுபம்
பாத்யம் குங்கும சந்தனாதி-பரிதை:
 அர்க்யம் -ரத்ன-அக்ஷதை: I
சுத்தை: ஆசமநீயகம் தவஜலை:
 பக்த்யா மயா கல்பிதம்
காருண்ய அம்ருத வாரிதே தத் அகிலம்
 ஸந்துஷ்டயே கல்பதாம் II        3.
ஈசானன், பிரம்மா, விஷ்ணு, ருத்ரன் முதலியவர்களை கால்களாகவும், சதாசிவன் ஒருவனையே பலகையாகவும் கொண்ட  நல்ல இரத்தினமய சிம்மாசனம், ஹே அன்னையே! உனது மகிழ்ச்சிக்காக அமையட்டும். குங்குமம், சந்தனம் இவை கலந்த பாத்தியமும்,( திருப்பாதத்தில்) ரத்தினமாகிய அக்ஷதையுடன் அர்க்யமும் (திருக்கரங்களில்), சுத்த ஜலத்தால் ஆசமநீயகமும் (திருமுடியில்) நான் பக்தியுடன் சமர்ப்பிக்கிறேன். ஹே கருணைக் கடலேஇவையெல்லாம் உனக்கு மகிழ்ச்சியை உண்டாக்கட்டும்.
ஈசானாதிபதம்-  ஈசானன் முதலியவர்களை கால்களாகவும், 
சிவைக பலகம்- சதாசிவன் ஒருவனையே பலகையாகவும் கொண்ட (இரத்தின சிம்மாசனத்தில்)

அம்மன் அலங்காரங்களும், ஸ்தோத்திரமும் தொடரும்...........