மீனாக்ஷி அலங்காரம்
சண்டிகா
அன்னை சிவசக்தி ஐக்கிய ரூபிணியல்லவா எனவே விஜயதசமியன்று அர்த்தநாரீஸ்வரராகவோ அல்லது சிவபெருமானாகவோ அலங்காரம் செய்வார்கள். .
இங்கு சிவலிங்க ரூபத்தில் அன்னைக்கு அலங்காரம்
ஓம் சிவாயை நம:
ஓம் சிவசக்தைக்ய ரூபிண்யை நம:
முத்து மாரியம்மன்
புல்லாங்குழல் நாயகி
ஸ்ரீ வைஷ்ணவ்யை நம:
கோவிந்த ரூபிணி நம:
நாராயணி நமோஸ்துதே
அன்னை இங்கே கண்ணன் ரூபத்தில் புல்லாங்குழல் வாசிக்கும் கோலத்தில் அருளுகின்றாள்.
ஸ்ரீ மந்தர மாத்ருகா புஷ்ப மாலா ஸ்தவம்
(ஸ்ரீ ஆதி சங்கர பகவத் பாதர் அருளியது)
ஆதி சங்கரரால் இயற்றப்பட்ட இந்த ஸ்தோத்திரதை பாராயணம் செய்வது அம்பாளுக்கு நாம் புரியும் மானசீகமாக பூஜை செய்வதாகும். இந்த ஸ்தோத்திரத்தில் மூன்று சிறப்புகள் உள்ளன. முதலாவது ஸ்ரீவித்யா உபாசகர்களுக்கு மிகவும் இன்றியமையாத ஸ்ரீ லலிதா மஹா த்ரிபுரஸுந்தரியின் பஞ்ச தசாக்ஷரி மந்திரத்தின் பதினைந்து எழுத்துக்களை முதல் எழுத்தாகக் கொண்டு ஒவ்வொரு ஸ்லோகமும் அமைந்துள்ளது. ஆகவே இந்த ஸ்தோத்திரத்தை அம்மன் முன்னர் பாராயணம் செய்யும் போது மந்திரப்பூர்வமாக அன்னையை துதித்த பரிபூரண பலன் கிட்டுகின்றது. இரண்டாவது சோடசோபசாரம் என்னும் பதினாறு உபசார முறைகளை அருமையாக ஆச்சார்யர் இந்த ஸ்தோத்திரத்தில் விளக்கியுள்ளார். மூன்றாவது விஸ்தாரமாக பூஜை செய்ய முடியாதவர்களும் இந்த ஸ்தோத்திரத்தை படிப்பதன் மூலம் அவ்வாறு பூஜை செய்த பலனைப் அன்னையின் அருளால் நிச்சயம் பெறுவர்.
இப்பதிவில் நான்காவது ஸ்லோகம் முதல் ஆறாவது ஸ்லோகம் வரை காணலாம் அன்பர்களே.
இப்பதிவில் நான்காவது ஸ்லோகம் முதல் ஆறாவது ஸ்லோகம் வரை காணலாம் அன்பர்களே.
இந்த நான்காவது ஸ்லோகம் அன்னைக்கு அபிஷேகம் செய்வதை விளக்குகின்றது.
லக்ஷ்யே யோகி-ஜனஸ்ய ரக்ஷித-ஜகஜ்-
ஜாலே விசாலேக்ஷணே
ப்ராலேயாம்பு-படீர-குங்கும-லஸத்-
கர்ப்பூர-மிச்ரோதகை: |
கோக்ஷீரைரபி நாலிகேர-ஸலிலை:
சுத்தோதகைர்- மந்த்ரிதை:
ஸ்நாநம் தேவி தியா மயைத-தகிலம்
ஸந்துஷ்டயே கல்பதாம் ||
லக்ஷ்யே ! யோகி-ஜநஸ்ய ரக்ஷித-ஜகத்-
ஜாலே! விசால ஈக்ஷணே!
ப்ராலேய-அம்பு-படீர-குங்கும-லஸத்-
கற்பூர மிச்ர-உதகை: |
கோக்ஷீரை: அபி நாலிகேர-ஸலிலை:
சுத்த-உதகை: மந்த்ரிதை:
ஸ்நாநம் தேவி! தியா மயா-ஏதத்
அகிலம் ஸந்துஷ்டயே கல்பதாம் II 4.
ஹே தேவி, யோகிகளின் இலக்கானவளே. உலகத்தைக் காப்பவளே. விரிந்து பரந்த திருவிழியுடையவளே!
பன்னீரும், சந்தனமும், குங்குமப்பூவும் பச்சைக்கற்பூரமும் கலந்த நீராலும், பசும்பால், இளநீர், மந்திரித்த சுத்த ஜலம் இவற்றாலும் மனதளவில் அபிஷேகம் செய்கிறேன். இவையெல்லாம் உன் மகிழ்ச்சி
உண்டாக்கட்டும்.
ப்ரேலாயாம்பு: - பன்னீர், படீர - சந்தனம்
இந்த ஐந்தாவது ஸ்லோகம் அம்பிகைக்கு வஸ்திரம் சார்த்துவதை விளக்குகின்றது.
ஹ்ரீங்காராங்கித-மந்த்ர-லக்ஷித-தநோ
ஹேமாசலாத் ஸஞ்சிதை:
ரத்னை-ருஜ்வல-முத்தரீய-ஸகிதம்
கௌஸும்ப-வர்ணாம்சுகம் |
முக்தா-ஸந்ததி-யக்ஞஸூத்ர-மமலம்
ஸௌவர்ண-தந்தூத்பவம்
தத்தம் தேவி தியா மயைத-தகிலம்
ஸந்துஷ்டயே கல்பதாம் ||
ஹ்ரீம்கார-அங்கித-மந்த்ர-லக்ஷித-தநோ!
ஹேம-அசலாத் ஸஞ்சிதை:
ரத்நை உஜ்ஜ்வலம் -உத்தரீய-ஸஹிதம்
கௌஸும்ப வர்ண அம்சுகம் I
முக்தா-ஸந்ததி-யஜ்ஞஸூத்ரம்-அமலம்
ஸெளவர்ண தந்து-உத்பவம்
தத்தம் தேவி தியா மயா-ஏதத்- அகிலம்
ஸந்துஷ்டயே கல்பதாம் II 5.
ஹ்ரீங்காரத்தை உள்ளடக்கிய மந்திரத்தின் பொருளானவளே! பொன் மலையிலிருந்து சேகரித்த ரத்தினங்கள் இழைத்ததும், உத்தரீயத்துடன் கூடியதுமான
இளஞ்சிவப்பு நிற துகிலையும், பொன் சரடுடன் கூடிய முத்துமணி கோவையான தூய யஞ்ஞோப வீதத்தையும் அன்னையே தங்களுக்கு ஸமர்ப்பிக்கிறேன். இவை உமக்கு சந்தோஷத்தை உண்டு பண்ணட்டும்.
இந்த ஆறாவது ஸ்லோகம் அம்பாளுக்கு பலவித ஆபரணங்கள் அணிவிப்பதை விளக்குகின்றது
ஹம்ஸைரபி-யதிலோபனீய-கமனே
ஹாராவலீ-முஜ்வலாம்
ஹிந்தோல-த்யுதிஹீர-பூரிததரே
ஹேமாங்க்தே கங்கணே |
மஞ்ஜீரௌ மணிகுண்டலே மகுடப்-
யர்த்தேந்து-சூடாமணிம்
நாஸா-மௌகதிக-மங்குலீய-கடகௌ
காஞ்சீமபி ஸ்வீகுரு ||
ஹம்ஸை: அபி-அதி-லோபநீய-கமனே
ஹாராவலீம்- உஜ்ஜ்வலாம்
ஹிந்தோல த்யுதி-ஹீர-பூரித-தரே
ஹேம-அங்கதே கங்கணே |
மஞ்ஜீரௌ மணி-குண்டலே மகுடம்-
அபி-அர்த இந்து- சூடாமணிம்
நாஸா-மௌக்திகம் அங்குலீய
கடகௌ காஞ்சீம்-அபி ஸ்வீகுரு II 6.
ஹே தேவி!. ராஜ அன்னங்களே உன் நடைப்பழக ஏங்கி விரும்புகின்றனவே ஒளிரும் ஹாரத்தையும், அசைந்தாடும் பிரகாசமுள்ள வைரங்கள் பதித்த தங்க தோள்வளைகளையும், கை வளையல்களையும், சதங்கைகளையும், குண்டலங்களையும் கிரீடம், அரைவட்டப்
பிறைச் சந்திர சிகை ஆபரணம், முத்து மூக்குத்தி, மோதிரம், கடகம், ஒட்டியாணம் ஆகிய ஆபரணங்களால் உன்னை அலங்கரிக்கின்றோம் இவற்றையெல்லாம் ஸ்வீகரித்துக்கொள்.
அம்மன் அலங்காரங்களும், ஸ்தோத்திரமும் தொடரும்...........
அம்மன் அலங்காரங்களும், ஸ்தோத்திரமும் தொடரும்...........
No comments:
Post a Comment