Showing posts with label சாமுண்டா. Show all posts
Showing posts with label சாமுண்டா. Show all posts

Sunday, October 25, 2020

கோலாகல நவராத்திரி - 10

  சரஸ்வதி பூஜை 


அன்னைக்கு மிகவும் உகந்த மஹா வமி நாளும் நாம் சரஸ்வதி பூஜை ஆயுத பூஜை கொண்டாடும் நாளும் நவராத்திரியின் நிறை நாளும் ஆன இந்த ஒன்பதாம் நாள் அன்னையை பத்து வயது குழந்தையாக பாவித்து சுபத்ரா என்னும் கன்யாவாக வழிபடுகின்றோம்அன்னையை இவ்வாறு வழிபடுவதால் சர்வ மங்களம் உண்டாகும் . இன்றைய ஸ்லோகம்

ஸுபத்ரபணிச பக்தானாம் குருதே பூஜிதா ஸதா அபத்ர

நாசினீம் தேவீம் ஸுபத்ராம் பூஜயாம்யஹம் ||

(தன்னை பூஜை செய்பவர்களுக்கு மங்களைச் செய்து அமங்கலங்களை எந்த சக்தி நீக்குகிறதோ அந்த சுபத்திரையை வணங்குகிறேன்.)


                            

ஸித்திதாத்ரி துர்க்கா

நவராத்திரியின் ஒன்பதாம் நாளான இன்று நவதுர்க்கைகளில்  சித்திதார்த்தியாக வழிபடுகின்றோம்தியானம்யோகம்ஞானம் அனைத்துக்கும் உரியவளான சித்திதாத்ரி தேவி நவதுர்க்கையின் ஒன்பதாவது வடிவமாகக் காட்சி கொடுக்கிறாள்பிரம்மாவிஷ்ணுசிவபெருமான்தேவர்கள் போற்றிப் பூஜிக்கும் சித்திதாத்ரி தேவி மனிதனுக்கு பரமாத்மாவை அறிய வைக்கிறாள்சகல சௌபாக்கியங்களும் அள்ளிக் கொடுக்கும் சித்திதாத்ரி தேவி பக்தர்களுக்கு மோட்சத்தைக் கொடுக்கிறாள்கைலாயத்தில் சிவபெருமான் மஹா சக்தியை வழிபட்டு எல்ல ஸித்திகளையும் பெற்றார்அதற்கு நன்றிக் கடனாகத் தன்னுடய உடலில் பாதி பாகத்தை தேவிக்குக் கொடுத்தார்இதனால் சிவ பெருமனும், "அர்த்த நாரீஸ்வரர்என்று புகழைடைந்தார்இந்த அவதார ரூபத்தை எல்லாக் கடவுளரும்ரிக்ஷிமுனிகளும்சித்தர்களும்யோகிகளும்பக்தர்களும் வழிபடுகிறார்கள்.

                            

சித்தர்களுக்கும்ரிஷிமுனிவர்களுக்கும்அஷ்ட சித்திகளும் அளிக்க வல்லவள் இவள்அணிமாமகிமாகிரிமாலகிமாப்ராப்திபரகாம்யம்ஈஷித்வம்வாஷித்வம் என்னும் அட்டமாசித்திகளை அளிப்பதால் இவளுக்கு சித்தாத்ரி எனப் பெயர் ஏற்பட்டதுநினைத்த காரியங்களில் சித்தியடையவும் இவளை வழிபடலாம்.

ஸித்த கந்தர்வ யக்ஷாத்யைஅஸிரைரபி |

ஸேவ்யமாநா ஸதாபூயாத் ஸித்திதா ஸித்திதாயிநீ ||

(சித்தர்கள்கந்தர்வர்கள்யக்ஷர்கள்அசுரர்கள்தேவர் கூட்டங்கள் எப்போதும் வழிபடும் சித்திதாயினி துர்க்கா அடியேனது எல்லா செயல்களிலும் வெற்றியை வழங்கட்டும்.)


நிர்குணா யா ஸதா நித்யா வ்யாபிகா அவிக்ருதா சிவா |

யோக கம்யா அகிலாதாரா துரீயா யா  ஸம்ஸ்த்துதா ||

தஸ்யாஸ்து ஸாத்விகீ சக்தீ ராஜஸீ தாமஸீ ததா |

மஹாலக்ஷ்மிஸரஸ்வதீ மஹாகாளீதி  ஸ்திரிய: ||

தாஸாம் திஸ்ருணாம் சக்தீதாம் தேஹாங்கீகார லக்ஷணாத் || 

படைக்கும் பிரம்மாகாக்கும் மஹா விஷ்ணுசம்ஹாரிக்கும் சிவன் ஆகியோரின் சக்தியான மஹா சரஸ்வதிமஹா லக்ஷ்மிமஹா காளி ஆகிய மூன்று சக்திகள் மேலும் மூன்று தேவிகளாக பிரிந்து நவதுர்க்கைகள் ஆயினர்.



ஒன்பதாம் நாள்

நவமியன்று  -  சாமுண்டா

மலர்: தாமரை

நைவேத்தியம் : அக்கார வடிசல்

நிறம்: சாம்பல்

கோலம் : பூ கோலம்.

ராகம் : வசந்த ராகம்

ஸ்லோகம் :

ஓம்  கிருஷ்ண வர்ணாயை  வித்மஹே  சூல ஹஸ்தாய தீமஹி |

தன்னோ சாமுண்டா ப்ரசோதயாத் ||



அம்மன் அருள் பெருகும் . . . . .

 



Saturday, October 8, 2016

நவராத்திரி அம்மன் தரிசனம் -6

இன்று சஷ்டியன்று தான் வங்காளத்திலே மஹா கைலாசத்திலிருந்து, பூலோகத்திற்கு துர்க்கா தேவி இறங்கி வந்து அருள் பாலிக்கும் துர்க்கா பூஜை தொடங்குகின்றது.

***********************


கருமாரி திரிபுரசுந்தரி
சாமுண்டா அலங்காரம்


நவராத்திரியின் ஆறாம் நாள் அன்னையை, அங்காள ஈஸ்வரியை, ஸ்ரீ வித்யா பீஜாக்ஷர ரூபிணியாக சாம்பரி என்ற பெயரில் வழிபடுகின்றோம்.
*************

புலியூர் சொர்ணாம்பிகை 
சுவாசினி கோலம் 


நவராத்திரியின் ஆறாம் நாள் அன்னையை ஏழு வயது குழந்தையாக பாவித்து சண்டிகா என்னும் கன்யாவாக வழிபடுகின்றோம். அன்னையை இவ்வாறு வழிபடுவதால் துன்பம் நீங்கும். இன்றைய ஸ்லோகம்

சண்டிகாம் சண்ட ரூபாஞ்ச சண்டமுண்ட விநாசினீம் தாம்
சண்ட பாபஹரிணீம் சண்டிகாம் பூஜயாம்யஹம் ||

(சண்ட முண்டர்களை அழித்து மகா பாதகங்களை எந்த சக்தி நிவர்த்தி செய்கிறதோ அந்த சண்டிகையாகிய சக்தியை வணங்குகிறேன்.) 

*******************





காத்யாயினி துர்க்கா

நவராத்திரியின் ஆறாம் நாள் அன்னை நவதுர்கைகளில் அன்னையை காத்யாயன முனிவரின் தவத்திற்கு இணங்கி அவரின் மகளாக அவதரித்த காத்யாயினியாக வழிபடுகின்றோம். அன்னை மும்மூர்த்திகள் மற்றும் சகல தேவர்களின் காந்தியால் உருவானாள். கோகுலத்து கோபியர்கள் கண்ணனை அடைய இவளையே தெய்வமாய் வழிபட்டு விரதம் இருந்தனர் என்பார்கள். கன்னியர் மனம் மகிழும்படியாக கணவனை அளித்துக் கல்யாணப் பேறு அளிப்பாள் இவள் என்று கூறுவார்கள்.

சந்த்ர ஹாஸோஜ்வலகரா சார்துல வர வாஹநா |
காத்யாயநீ சுபம் தத்யாத் தேவீ தாநவ காதிநீ ||

(திருக்கரத்தில் சந்திரஹாச வாளை ஏந்தி சிம்மவாகனத்தில் பவனி வந்து தேவர்களைக் காக்கும் காத்யாயினி அடியேனுக்கு எல்லா சுபங்களையும் வழங்கட்டும்.)

*****************************


பிரஹத் சுந்தர குஜாம்பாள்
கௌமாரி அலங்காரம் 


ஸ்ரீ கற்பகவல்லியம்மன் பதிகம் 

கமலனை அழைத்து எனது பழவினைகள் யாவையும் கட்டறுத்தின்று முதலாய், காலணூகாமலொரு பேய்கள் தொடராமல் வெங்கலி வந்தடுத்திடாமல்

நமது கொத்தடியனென்றெழுதித் திருத்தென்றி தாளட்டி பண்ணூவானோ, நமனுமதி கெட்டு வந்தணுகுவானோ, பிணிகள் நாடுமோ, கலி அண்டுமோ,

இமையளவில் அணுவை மலையாக்குவாய் அணுவாக்குவாய் மலைதனை இமைப்பில் அணுவாக்கவல்லாய், என்னை ரக்ஷிப்பதொரு பாரமோ, சும்மா இருப்பது அழகல்லவம்மா,

விமல சற்குருபரனிடத்தினில் வளரமுதமே, விரி பொழில் திருமயிலைவாழ் விரைமலர்க் குழல்வல்லி மரைமலர்ப்பதவல்லி விமலி கற்பகவல்லியே! (6)

பொருள்: கமல மலரில் வீற்றிருக்கும் பிரம்மதேவனை அழைத்து என்னுடைய பழைய வினைகள் எல்லாவற்றையும் அழித்து இன்று   முதல் யமபயம் இல்லாமல், ஆசை என்னும் பேய்கள் தொடராமல், கலியின் துன்பம் அணுகாமல் என்னுடைய  அடியவன் இவன்,  எனது கொத்தடிமை என்று   எழுதி முதலில் எழுதிய எழுத்தை மற்றுவானோ? அதற்குப்பின் எமன் என்னை அணுகுவானோ? பிணிகள் என்னை பற்றாது, கலியின் கொடுமையும் குறையும்.  கண் சிமிட்டும்   நேரத்தில் அணுவை மலையாகவும், மலையை அணுவாகவும் மாற்றவல்ல அம்மா கற்பகவல்லியே! என்னை பாதுகாப்பது உனக்கு ஒரு பாராமா? ஒன்றும் செய்யாமல் சும்மா இருப்பது உனக்கு அழகல்ல அம்மா இன்றே அருள் புரிவாய். தூய சத்குருவான  சிவபெருமானிடத்தில் இடப்பாகம் கொண்ட  அமுதானவளே! சோலைகள் நிறைந்த  திருமயிலையில் கோயில் கொண்ட மணம் வீசும் மலர்களை அணிந்த சடையாளே! தாமரை மலர் பதத்தாளே!  பரிசுத்தமானவளே!  கற்பகவல்லியே!   


முந்தைய பதிவு                                                                                                                                  அடுத்த பதிவு   




                                                                                                                                                அம்மன் அருள் தொடரும். . . . .. ...