Showing posts with label அற்புத ஓவியங்கள். Show all posts
Showing posts with label அற்புத ஓவியங்கள். Show all posts

Monday, November 14, 2011

அகத்தீஸ்வரர் பிரம்மோற்சவம் -18 (200வது பதிவு)


இப்பதிவு அகத்தீஸ்வரர் பிரம்மோற்சவத்தின் நிறைவுப்பதிவு. அதே சமயம் அடியேனின் சைவ சமய நடராஜர் வலைப்பூவின் 200வது பதிவு. இப்பதிவில் சென்னை நுங்கம்பாக்கம் அகிலாண்டேஸ்வரி உடனாய அகத்தீஸ்வரரின் தக்ஷிணாயண புண்ய கால பிரம்மோற்சவத்தின் நிறைவு நிகழ்ச்சியான அன்னையும் ஐயனும் ஏகாந்தமாக புஷ்ப பல்லக்கில் உலா வரும் அழகைக் காண்கின்றீர்கள். முதலில் பஞ்ச மூர்த்திகளை தரிசனம் செய்து விட்டு வாருங்கள்.




ஐந்து கரத்தன் , ஆனை முகன்


அன்னை அகிலாண்டேஸ்வரி


அகத்தீஸ்வரர் பாகம் பிரியா அம்மையுடன்

வள்ளி தெய்வானை உடனாய திருமுருகன்

சண்டிகேஸ்வரர்


புஷ்ப பல்லக்கின் முகப்பு

புஷ்ப பல்லக்கில் ஏகாந்தமாக அம்மையப்பர்


இத்திருக்கோவிலில் அடியேனுக்கு பிடித்தது அலங்கார மண்டபத்தில் வரையப்பட்டிருக்கும் ஒவியங்கள். பழம் பெரும் கோவில்களில் எல்லாம் பழைய ஒவியங்கள் சரிவர பராமரிப்பில்லாமல் அழிந்து வரும்காலத்தில் புதிதாக இயற்கை வண்ணத்திலே அற்புதமாக வரையப்பட்டிருக்கும் ஓவியங்களை ஒவ்வொரு பதிவிலும் பதிவிட்டிருக்கின்றேன். இன்றைய ஒவியங்கள் பெரியவை இல்லை என்றாலும் மண்டபத்தின் ஒவ்வொரு தூணிலும், குறுக்கு விட்டத்திலும்(beam) கூட ஒரு சிவ திருவிளையாடளை வரைந்திருக்கும் நேர்த்தியைக் கண்டு இரசியுங்கள்.
குறுக்கு விட்டத்தில் வரைந்திருக்கும் பாற்கடலை கடையும் ஓவியம்

மற்றும்

ஐயன் பிக்ஷாடணராக வரும் போது முனி பத்தினிகள் தன்னிலை இழக்கும் ஒவியம்



குறுக்கு விட்டத்தில் பாண்டிய மன்னன் மாணிக்கவாசகரை பிழை பொறுத்து அருளும்படி வேண்டும் ஓவியம் ( தூணில் நாகம் சிவபூஜை செய்யும் காட்சியையும் காண்கின்றீர்கள்)



தூணில் மயில் உருவில் அன்னை
சிவபெருமானை பூஜிக்கும் ஓவியம்


தூணில் கருங்குருவி சிவபெருமானை பூஜிக்கும் கோலம்

**********************

இனி 200வது பதிவில் இதுவரை வந்து தரிசித்த அனைவருக்கும் நன்றிகள். குறிப்பாக Sankar Guruswamy ஐயா அவர்களுக்கு விடாமல் ஒவ்வொரு பதிவையும் வந்து தரிசித்து பின்னூட்டமும் இட்டு உற்சாகப்படுத்தியதற்கு அனந்த கோடி நன்றிகள்.

2006 ஜூன்மாதம் திருக்கயிலாய யாத்திரை பற்றிய பதிவுடன், திரு. சிவமுருகன் அவர்கள் வழிகாட்ட இந்த சேவையை துவக்கினேண், பின்னர் 2007 ஜூலையில் இந்த வலைப்பூவைத்தொடங்கினேன், முதலில் நடராஜரைப் பற்றியும் அவரது ஆருத்ராதரிசனத்தையும் பற்றி எழ்தினேன் பின்னர் மஹா சிவராத்திரி, சென்னை, மேற்கு சைதாபேட்டை காரணீஸ்வரம் பிரம்மோற்சவ பதிவுகள், சென்னை சூளைமேடு பாரத்வாஜேஸ்வரம் பிரம்மோற்சவ பதிவுகள், காரைக்கால் மாங்கனித்திருவிழா, பஞ்ச சபைகள், கந்தன் கருணை என்ற பெயரில் கந்த சஷ்டிப்பதிவுகள், கார்த்திகை சோமவார விரதம் மற்றும் சங்காபிஷேகம் பற்றிய பதிவுகள், எங்கள் குலதெய்வம் அங்காள பரமேஸ்வரியிம் கும்பாபிஷேகப் பதிவுகள், தெப்போற்சவம் , அன்னாபிஷேகம், திருமயிலை கபாலீச்சுரம் பற்றிய பல பதிவுகள், அம்மனின் நவராத்திரி அலங்காரங்கள், சென்னை கந்த கோட்டம் முத்துக்குமார சுவாமி தைப்பூச பிரம்மோற்சவம் பற்றிய பதிவுகள் மற்றும் சென்னை நுங்கம்பாக்கம் அகத்தீஸ்வரர் பிரம்மோற்சவம் பற்றிய பதிவுகள் என்று இன்றி வரை 200 பதிவுகள் நிறைவடைந்து விட்டன.

இவ்வளவு பதிவுகள் இட காரணமாக இருந்த பல்வேறு அன்பர்களுக்கு ஆயிரம் கோடி நன்றிகள். குறிப்பாக, குமரன், கவிநயா, இரவிசங்கர், TRS, முருகனருள் VKS, மதுரையம்பதி, சீனா , expatguru, கீதா சாம்பசிவம், துளசி கோபால், அபி அப்பா, Kalyanji, சுப்பு தாத்தா, ஜீவா, ஜீவி, ஆயில்யன், Logan, கோவி.கண்ணன், Sivanarul, Jayashree, Sundar, Sangkavi, Ramachandran, Sankarguru மற்றும் ananymous ஆக வந்து பின்னூட்டமிட்ட அன்பர்கள் மற்றும் வந்து தரிசித்து சென்ற அன்பர்கள் அனைவருக்கும் நன்றிகள். இனி வரும் காலத்திலும் வந்து தரிசனம் செய்து செல்லுமாறு வேண்டிக்கொள்கிறேன்.

அன்பன்
கைலாஷி