அன்பர்கள் அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்
வளர் சிகையைப் பராபரமாய் வயங்கு விநாயகர் காக்க
வாய்த்த சென்னி அளவுபடா அதிக சவுந்தர தேக மதோற்கடர்தாம் அமர்ந்து
காக்க
காக்க
விளரற நெற்றியை என்றும் விளங்கிய காசிபர் காக்க
புருவந் தம்மைத் தளர்வின் மகோதரர் காக்க
தடவிழிகள் பாலசந்திரனார் காக்க
கவின் வளரும் அதரம் கசமுகர் காக்க
தாலங் கணக்கிரீடர் காக்க
அவில்சிபுகம் கிரிசைசுதர் காக்க
அனி வாக்கை விநாயகர்
தான் காக்க
அவர் நகை
துன்முகர்
காக்க
அள்ளெழிற் செங்செவி
பாசபாணி
காக்க
தவிர்தலுறாதிளங்கொடிபோல்
வளர்மணி நாசியைச்
சித்திதார்த்தர் காக்க
காமருபூமுகங் தன்னை குணேசர் அனி காக்க
வாமமுறும் இரு தோளும் வயங்கு கந்தபூர்வசர் தாம் மகிழ்ந்து காக்க
ஏமமுறு மணி முலை விக்கினவிநாசன் காக்க
இதயதன்னை தோமகலுங் கணநாதர் காக்க
வகட்டினைத் துலங் கேரம்பர் காக்க
பக்கமிரண்டையுங்
தராதரர்
காக்க
பிருடத்தை பாவம் நீக்கும்
விக்கினகரன் காக்க
தக்குய்ய தன்னை வக்கிரதுண்டர் காக்க
சகனத்தை அல்லல் உக்க கணபன் காக்க
ஊருமை மங்கள மூர்த்தி உவந்து
காக்க
தாழ்முழந்தாள் மகாபுத்தி காக்க
தாழ்முழந்தாள் மகாபுத்தி காக்க
இருபதம் ஏகதந்தர் காக்க
வாக்கரங்கி பிரப்பிரசாதனர் காக்க
முன் கையை வணங்குவார் நோய் ஆழ்தரச்செய் ஆசாபூரகர் காக்க
விரல் பதும அத்தர் காக்க
கேழ்கிளரும் நகங்கள் விநாயகர் காக்க
கிழக்கினிற் புத்தீசர் காக்க
அக்கினியில் சித்தீசர் காக்க
உமா புத்திரர் தென்னாசை காக்க
மிக்க நிருதியிற் கணேசுரர் காக்க
விக்கின வர்த்தனர் மேற்கென்னும் திக்கதனில் காக்க
திகழ் உதீசி தக்க நிதிபன் காக்க
வடகிழக்கில் ஈசநந்தனரே காக்க
ஏகதந்தர் பகல் முழுதும் காக்க
இரவினுங் சந்தி இரண்டன் மாட்டும் ஒகையின் விக்கினகிருது காக்க
இராக்கதர் பூதம் உறு வேதாளம் மோகினிப் பேய் இவையாதி உயிர் திறத்தால் வருதுயரும் முடிவிலாத வேகமுறு பிணி பலவும் விலக்கு பாசாங்குசர் தாம் விரைந்து காக்க
மதி ஞானம் தவ தானம் மானம் ஒளி புகழ் குலம் வண் சரீர முற்றும் பதிவான தன தானியங் கிரகம் மனைவி மைந்தர் பயில் நட்பாதிக் கதியாவும் கலந்து சர்வாயுதர் காக்க
மதி ஞானம் தவ தானம் மானம் ஒளி புகழ் குலம் வண் சரீர முற்றும் பதிவான தன தானியங் கிரகம் மனைவி மைந்தர் பயில் நட்பாதிக் கதியாவும் கலந்து சர்வாயுதர் காக்க
காமர் பவுத்திரர் முன்னான விதியாருங் சுற்றமெலாம் மயூரேசர்
எஞ்ஞான்றும் விரும்பிக் காக்க
எஞ்ஞான்றும் விரும்பிக் காக்க
வென்றி சீவிதங் கபிலர் காக்க
கரியாதி யெலாம் விகடர் காக்க
என்றிவ்வாறிதனை முக்காலமும் ஓதிடினும் பால் இடையூறொன்னும்
ஒன்றுறா முனிவர்காள் அறிமின்கள் யார் ஒருவர் ஓதினாலும்
மன்றவாங்
கவர் தேகம்
பிணியற வச்சிர தேகம் ஆகி மன்னும்.