Sunday, September 28, 2014

நவராத்திரி நாயகி - 7

திருமயிலை கற்பகாம்பாள் சரஸ்வதி அலங்காரம் 



சரஸ்வதி அலங்காரம்



அன்னையின் அருகாமை காட்சி 


அம்மனின் பின்னழகு 

ஒரு சடை வீணைகளால் ஆனதை கவனியுங்கள். 



ஊஞ்சல் மண்டபத்தில் இன்று காய்கறிகளால் அலங்காரம் 


கண்ணாடியில்  காய்கறி கோல பிரதிபிம்பம் 


 ஓலமிட்ட விநாயகர்  மற்றும்  சுந்தரரும் சேரமான் பெருமாளும்


திருவையாற்றில் சுந்தரர் பாட காவேரி வழிவிட்ட வரலாறு 

******************* 

 திருமயிலை வெள்ளீச்சுரம்  காமாக்ஷி அம்பாள்
 சரஸ்வதி அலங்காரம் 




சுக்கிராச்சாரியார்  (வெள்ளி) வழிபட்ட வெள்ளீஸ்வரர் 


பொம்மைக்கொலு 


அபிராமி அம்மை பதிகம் 

கைப்போது கொண்டு உன் பதப்போது தன்னிற்
கணப்போதும் அர்ச்சிக்கிலேன்

கண் போதினால் உன் முகப்போது தன்னையான்
கண்டு தரிசனை புரிகிலேன்

முப்போதில் ஒரு போதும் என்மனப் போதிலே
முன்னி உன் ஆலயத்தின்

முன் போதுவார் தமதுபின் போத நினைகிலேன்
மோசமே போதுகின்றேன்

மைப்போதகத்திற்கு நிகர் எனப்போதும் எரு
மைக்கடா மிசை ஏறியே

மாகோர காலன் வரும்போது தமியேன்
மனம் கலங்கித் தியங்கும் 

அப்போது வந்து உனது அருட்போது தந்தருள்!
ஆதிகடவூரின் வாழ்வே!

அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி!
அருள்வாமி! அபிராமியே! (10)

பொருள்:  கையில் மலர்களைக் கொண்டு உனது திருவடித்தாமரையில் ஒரு நொடிப்போது கூட அர்ச்சனை செய்யவில்லை. கண்களால் உன் தாமரை போன்ற திருமுகத்தை தரிசிக்கவில்லை.  மூன்று நேரங்களில் ஒரு நேரம் கூட என் உள்ளத்தில் உன்னை  நினைத்து , உன் ஆலயம் செல்லும் அன்பர்கள்  பின் செல்ல நினைக்கவில்லை. ைதனால் மோசமே போகின்றேன்.  கரிய யானை போன்ற எருமைக்கடா மீது ஏறி மகா கோரமான யமன் என் முன் வரும் போது வந்து நிற்கும் போது அடியேன் மனம் கலங்கி தவிக்கும் போது  நீ வந்து  உன் அருள் என்னும் மலரைத்தந்து அருள வேண்டும், ஆதி க்டவூரில் உறைபவளே!, அமுதீசர் இடப்பாகம் அக்லாதவளே!, திருக்கரங்களீல் கிளியை தாங்கியவளே! அனைவருக்கும் அருள் புரிபவளே! அபிராமை அன்னையே!் என்று வேண்டுகிறார் அபிராமி பட்டர்.  

இப்பாடலில் "போது" என்ற சொல்லை அரும்பு, மலர், காலம், பொழுது என்ற பல பொருட்களில் பயன் படுத்து தனது கவிதா விலாசத்தை காட்டுகின்றார் அபிராமி பட்டர், 


மிகையும் துரத்த வெம்பிணியும் துரத்தமத
வெகுளி மேலும் துரத்த

மிடியும் துரத்த நரைதிரையும் துரத்த நனி
வேதனைகளும் துரத்தப்

பகையும் துரத்த வஞ்சனையும் துரத்த முப்
பசி என்பதும் துரத்தப்

பாவம் துரத்த அதி மோகம் துரத்தமுழு
நாணும் துரத்த வெகுவாய்

நாவறண்டோடி இருகால் தளர்ந்திர்டும் என்னை
நமனும் துரத்துவானோ?

 அகில உலகங்களுக்கு ஆதார தெய்வமே
ஆதி கடவூரின் வாழ்வே! 

அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி!
அருள்வாமி! அபிராமியே! (11)

பொருள்:  துன்பம், கொடிய நோய், கோபம் மதம், வறுமை, மூப்பு, தளர்ச்சி, மிக்க வேதனைகள், பகை, சூழ்ச்சி, பெண்ணாசை, பொன்னாசை, மண்ணாசை, பாவம், மோகம், மலங்கள், ஊழ்வினை, வெட்கம் இவையெல்லாம் அடியேனை துரத்துகின்றன.  இதனால் நாக்கு வறண்டு, ஓதியோடிக் காலகளும் தளர்ந்து போயின. இந்நிலையில் எமனும் வந்து எனை துரத்துவானோ?  அவ்வாறு துரத்தினால் நீயே கதி! அனைத்து உலகங்களுக்கும் ஆதாரம் என்று சொல்லப்படும் கடவூரின் வாழ்வே!  அமுதீசர் இடப்பாகத்தை ஒரு போதும் அகலாதவளே! கிளியை  தனது இடக்கரத்தில் ஏந்தியிருப்பவளே!  அனைத்து உயிர்களுக்கும் அருள் புரிபவளே! அபிராமி அன்னையே!  என்று  உலக மக்கள் படும் அவஸ்தைகளை பட்டியல் இட்டு இவற்றிலிருந்து  காப்பாற்ற வேண்டுகிறார் அபிராமி பட்டர்.   


இந்த வருட நவராத்திரிப் பதிவுகள் இத்துடன் நிறைவேறுகின்றன.  வந்து தரிசித்த அனைவருக்கும் அம்மன் அருள் கிட்ட பிரார்த்த்ர்க்கின்றேன். 
  


3 comments:

கோமதி அரசு said...

திருமயிலை கற்பகாம்பாள் சரஸ்வதி அலங்காரம் மிக அழகு.
வீணை மாதிரி பின்னல் அழகு அருமை.
அபிராமி பதிகம், கொலு படங்கள் எல்லாம் அருமை.

கோமதி அரசு said...

உலக மக்கள் படும் அவஸ்தையை நீக்கி மக்கள் நலம் பெற வேண்டும்.நவராத்திரி நாயகி அருளால்.
வாழ்த்துக்கள்.

S.Muruganandam said...

பிண்ணூட்டங்களுக்கு மிக்க நன்றி கோமதி அம்மா.