மலையரசன் பொற்பாவை உடனாய திருக்கயிலை நாதரின் மாப்பெருங்கருணையினால்
அன்பு மகளின் திருமணம் 08/06/2011 அன்று சென்னையில் இனிதாக நிறைவேறியது.
பிசிராந்தையாரும் கோப்பெருஞ் சோழனும் போல நேரில் காணாமலே நட்பு கொண்டிருந்தோம் நாம். ஆயினும் நேரில் சென்னை வந்து திருமண வரவேற்பில் கலந்து கொண்டு வாழ்த்தினார்கள் துளசி டீச்சரும் கோபால் ஐயாவும் வரவேற்பில் கலந்து கொண்டு வாழ்த்தினார்கள். சென்னை வரவேண்டியுள்ளது கல்யாணத்தையொட்டி வரு்கின்றோம் என்று கூறியபடி அப்படியே வந்து கௌரவித்த அவர்களுக்கு முதற்கண் மிக்க நன்றி. ( துளசி டீச்சர் தங்களை முழுதுமாக கவனிக்க முடியவில்லை மன்னிக்கவும்)
அடுத்து சீனா ஐயா நேரில் வரமுடியாவிட்டாலும் அருமையான ஒரு வாழ்த்து கவிதையும் அன்புடன் மதுரை மீனாக்ஷி அம்மனையும் அனுப்பி வைத்தார். அவருக்கும் மிக்க நன்றி.
அவர் அனுப்பிய கவிதை
அன்பும் அருளுமாய்
பண்பும் பயனுமாய்
தமிழும் குறளுமாய்
தரணி போற்ற வாழ்க!
பெற்றோர் மகிழ
பேறுகள் பெற்று
பெரிதும் வாழ்க!
உற்றார் உறவினர்
நட்பு அயலார்
அனைவரும் வாழ்த்த
அன்புடன் வாழ்க மணமக்கள்!
அன்புடன் சீனா
அவருடைய நடு இரவு வரை காத்திருந்து அமெரிக்காவிலிருந்து தொலைப்பேசியில் நேரில் பேசி வாழ்த்த்துக்கள் தெரிவித்த KRS ஐயா அவர்களுக்கும், மற்றும் மின்னஞ்சல் மூலமும், பதிவிலும் வந்து வாழ்த்திய குமரன், Logan, Gurusaami மற்றும் அனைத்து அன்பர்களுக்கும் அனந்த கோடி நன்றிகள்.
வானத்தையே காகிதமாக கொண்டும், கடல் நீர் முழுவதையும் மையாகக் கொண்டும் இமய மலையை எழுது கோலாக கொண்டும் எழுதினால்தான் நன்றியை உங்கள் அனைவருக்கும் கூறமுடியும்.
நன்றியுடன் அடியேனும் இல்லாளும்
7 comments:
தம்பதிகளுக்கு எங்கள் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்...
சகல சம்பத்துக்களுடன் நீடூழி வாழ்வாங்கு வாழ வாழ்த்துகிறோம்...
http://anubhudhi.blogspot.com/
மிக்க நன்றி குருசாமி ஐயா.
அன்பின் கைலாஷி
திருமணம் சிறப்பாக ந்டைபெற்றது குறித்து மிக்க மகிழ்ச்சி - துளசி கோபாலுடன் நேரில் வந்திருந்து வாழ்த்தியது மிக்க மகிழ்ச்சியினைத் தருகிறது. எப்படியாவது கலந்து கொள்ள வேண்டும் என நினைத்தேன். ஆனால் இயலவில்லை. வரிசையாக உறவின் திருமணங்கள் - 5, 6, 8 ஆகிய மூன்று நாட்களிலும் மூன்று திருமணங்கள். 8ம் நாள் மணமக்களை வாழ்த்திய போது அதே நேரத்தில் அங்கு சென்னையில் நடை பெற்ற திருமணத்தின் மணமக்களையும் மனதார வாழ்த்தினோம். நல்வாழ்த்துகள் கைலாஷி - நட்புடன் சீனா

திருமணம் இனிதே நிகழ்ந்தேறியது குறித்து மகிழ்ச்சி கைலாஷி ஐயா!
பதிவர்கள் சார்பாக துளசி டீச்சர் வந்தது மெத்தவும் மகிழ்ச்சி!
மகளுக்கும் மருமகனுக்கும் ஸ்பெஷல் வாழ்த்துக்கள்!:)
மணமக்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்!
மணமக்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்
Post a Comment