மஹா சிவராத்திரியன்று அம்மனின் திருவிழாக்கள்
நாட்டுக்கல் பாளையம் அங்காள பரமேஸ்வரி
மஹா சிவராத்திரி என்பது பிறையணி, படர்சடை முடியிடை புனலுடை, மணிமிடற்றனாம், ஆதியும் அந்தமும் இல்லா சிவ பெருமானுக்கு எவ்வளவு உகந்ததோ அவ்வளவு அவரின் பாதியான அம்மைக்கும் உகந்தது. குறிப்பாக அங்காள பரமேஸ்வரிக்கும், மூங்கிலனை காமாக்ஷ’யம்மனுக்கும் மஹா சிவராத்திரி மிகவும் உகந்த திருவிழாவாகும். அந்த ஆதி சக்தி, கருணைக் கடலான அம்மை நம் துயர் துடைக்க எவ்வாறு இரங்கி வந்து இப்பூவுலகில் இந்த வடிவங்களில் குடி கொண்டாள் என்பதை பார்ப்போமா?
சிவ சக்தி
அங்காள பரமேஸ்வரி "உலக மாதவாய் ஏக நாயகியாய் உக்ர ரூபிணியாய் திருமேனி -காண்டு பக்தர்களுக்கு உண்டாகும் பலவித சங்கடங்களை போக்கவும் கோபத்தில் இட்ட பல சாபங்களை போக்கி வைப்பதின் பொருட்டும் சிவசக்தி தாண்டவமாயும், சூலம், கபாலம் பாசாங்குசம் கொண்டும் ருத்ர பூமியிலிருந்து ரௌத்ராம்சம் பெற்று எல்லா நலன்களையும் தருகின்ற அஷ்ட லக்ஷ்மியாயும் விளங்கும்" ஸ்ரீ அங்காள பரமேஸ்வரியின்" வரலாறு சிவபெருமான் செய்த எட்டு வீரச் செயல்களுள் ஒன்றான 'பிரமன் சிரம் கொய்த வீர செயலுடன் தொடர்புடையது। சிவ பெருமானுக்கு ஐந் தொழில் புரிவதை ஒட்டி தத்புருஷம், அகோரம், வாமதேவம், சத்தியோஜாதம், ஈசானம் என்று ஐந்து முகங்கள் உள்ளன.
சிவ சக்தி
அங்காள பரமேஸ்வரி "உலக மாதவாய் ஏக நாயகியாய் உக்ர ரூபிணியாய் திருமேனி -காண்டு பக்தர்களுக்கு உண்டாகும் பலவித சங்கடங்களை போக்கவும் கோபத்தில் இட்ட பல சாபங்களை போக்கி வைப்பதின் பொருட்டும் சிவசக்தி தாண்டவமாயும், சூலம், கபாலம் பாசாங்குசம் கொண்டும் ருத்ர பூமியிலிருந்து ரௌத்ராம்சம் பெற்று எல்லா நலன்களையும் தருகின்ற அஷ்ட லக்ஷ்மியாயும் விளங்கும்" ஸ்ரீ அங்காள பரமேஸ்வரியின்" வரலாறு சிவபெருமான் செய்த எட்டு வீரச் செயல்களுள் ஒன்றான 'பிரமன் சிரம் கொய்த வீர செயலுடன் தொடர்புடையது। சிவ பெருமானுக்கு ஐந் தொழில் புரிவதை ஒட்டி தத்புருஷம், அகோரம், வாமதேவம், சத்தியோஜாதம், ஈசானம் என்று ஐந்து முகங்கள் உள்ளன.
வள்ளி தேவ சேனா சமேத முருகர்
ஆதிகாலத்தில் படைக்கும் கடவுள் பிரம்ம தேவருக்கும் ஐந்து முகங்கள் இருந்தன। ஒரு தடவை சிவ பெருமான் பிரம்ம லோகம் சென்ற போது பிரம்ம தேவர் அவரை எதிர் கொண்டு அழைத்தார்,அவரது நான்கு தலைகள் சிவனை பணிய ஐந்தாவது தலையோ நாம் படைக்கும் தொழிலை செய்கின்றோம் என்ற ஆணவத்தால் பணியாமல் இருந்தது. அதனால் கோபம் கொண்ட சிவ பிரான் ,பிரம்மாவின் அந்த ஒரு சிரத்தை கொய்து எடுக்க அந்த சிரம் பரமனுடைய கரத்திலேயே தங்கி விட்டது. (ஒரு சமயம் சிவ பெருமான் தேசாந்திரம் சென்றிருந்த போது பிரம்ம தேவர் அங்கு வர ஐந்து தலையைக் கண்ட அம்மை தவறாக தன் கணவர் என்று எண்ணி பாத பூஜை செய்ய அச்சமயம் அங்கு வந்த சிவ பெருமான் கோபம் கொண்டு பிரம்மனுடைய தலையை கொய்ததாகவும் கதை வழங்கப்படுகின்றது.) அதனால் ஏற்பட்ட பிரமஹத்தி தோஷத்தாலும். பிரமன் இட்ட சாபத்தாலும் அவர் அச்சிரத்துடன் கபாலியாக பித்து பிடித்து அலைந்தார். கபாலம் எப்போது நிறைகின்றதோ அப்போது தான் அந்த கபாலம் அவரது கையை விட்டு அகலும் என்பதால் பிக்ஷ‘டணராக பிச்சை எடுத்து அலைந்த கணவரின் துன்பத்தை சகிக்க முடியாத பார்வதிக்கும், பித்து பிடித்தது, அழகுக்கு ஒருவரும் ஒவ்வாத வல்லியான அம்மையின் உருவமும் கொடூரமாக மாறியது . அவ்வாறு அம்மை அலைந்த போது தாயின் துன்பத்தை துடைக்க சிவ பெருமான் வந்து அம்மையின் நிலையை மாற்ற நடக்க அம்மையும் பின் தொடருகின்றாள், மலையனு‘ர் ஏரியை சிவன் கடந்து விட மாதா நடுவிலேயே மயங்கி நிற்க, சிவபெருமானாகப்பட்டவர், "அங்கு ஆழம் பெண்ணே" என்று அழைக்க அதுவே பின்பு மறுவி "அங்காளம்மன்" ஆனது என்பர்। பின்னர் ஒரு "மஹா சிவராத்திரி" நன்னாளில் ருத்ரனான சிவ பெருமானுடன் 12 ஊர் மயானமான மேல் மலையனு-ரில் அங்காள பரமேஸ்வரி அண்ணனாகிய திருமாலின் ஆலோசனைப்படி சோறு இறைக்க அதை சாப்பிட அந்த பிரம்ம கபாலம் இறங்க அம்மை அதை தன் காலில் அழுத்தி அங்கேயே கோவில் கொண்டு விட, பிரம்ம கபாலமும் நீங்கி சிவபெருமானின் சாபமும் தீர்ந்தது। எனவே சிவ பெருமானிம் பிரம்ம ஹத்தி தோஷமும், பிக்ஷ‘டணராக பலி தேர்ந்து அலைந்ததும் நீங்கிய நாள் ஆகியதால் மஹா சிவராத்திரி என் தாய்க்கு மிகவும் உகந்த நாளாகும்। அன்று எல்லா அங்காளம்மன் ஆலயங்களிலும் இந்நிகழ்ச்சி' மயான கொள்ளையாகவோ (மயான சூறை )' அல்லது 'முக கப்பரை' எடுத்துச் சென்று மயான பூஜை நிகழ்ச்சியாகவோ மிக சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது।
ரிஷப வாகனத்தில் சேவை சாதிக்கும் அன்னை அங்காள பரமேஸ்வரி
அங்காள பரமேஸ்வரி அம்மன் கஜலக்ஷ்மி அலங்காரம்
கம்பா நதி ஐதீகம் - அங்காளம்மன் சிவ பூஜை செய்யும் அலங்காரம்
இப்பதிவில் உள்ள புகைப்படங்கள், சென்னை நுங்கம்பாக்கம் லேக் ஏரியா, அங்காள பரமேஸ்வரி ஆலயத்தின் பத்து நாள் சிவராத்திரி பெருவிழாவின் ஐந்தாம் நாள் பஞ்ச மூர்த்திகள் சேவையின் படங்கள். இத்திருக்கோவிலில் 07-03-08 மாலை ஆறு மணிக்கு மயான கொள்ளை உற்சவம் நடைபெறவுள்ளது.
அங்காள பரமேஸ்வரியுடன் இணைந்த மற்றுமொரு வரலாறு, தன் பக்தர்களை காப்பதற்காக அம்மை வல்லாள கண்டணை வதம் செய்த வரலாறு ஆகும். திருவண்ணாமலையை ஆண்டு வந்த வள்ளாள கண்டன் மிகவும் கொடுமைக்காரனாக இருந்தான். தன் குடி மக்களை எல்லாம் கசக்கி பிழிந்து வேலை வாங்கி அவர்களுக்கு தகுந்த கூலி தராமலும், அவர்களை மிகவும் கொடுமை படுத்துபவனாகவும் இருந்தான். அவன் ஏழு சுற்று கோட்டை அமைத்து அதற்கு இரண்டு கொடும் புலிகளை காவலாகவும் இட்டு தன் அரண்மணையை அக்கோட்டையில் அமைத்து கொண்டு ஆட்சி செய்து வந்தான். அவனுடைய கொடுமை தாங்காமல் மக்கள் எல்லாரும் அங்காள அம்மனை வந்து வேண்டி நிற்க, அம்மையும் மனமிரங்கி, 'பேச்சியுடன் ' சென்று, அவனுடைய ஏழு சுற்று கோட்டையை அழித்து நிர்மூலமாக்கி, அங்கே ஆமணக்கு விதை விதைத்து, வள்ளாளனையும் வதம் செய்து, அவனுக்கு மகன் பிறந்தால் மிகவும் கொடுமையானவானாகவே இருப்பான் குடி மக்கள் அனைவருக்கும் துன்பம் என்பதால், நிறை மாத கர்ப்பிணியாக இருந்த அவன் மனைவியை வெறும் வயிறாக்கி, தன் மக்களை என் தாய் காப்பாற்றினாள். கோட்டை வாயிலிலே காவலாக இருந்த இரு புலிகளையும் கொன்று, அவைகளுடைய எலும்புகளை, அவற்றின் நரம்புகளை வைத்து கட்டி, தோலை பக்கங்களில் சேர்த்து இரண்டு புலிகளுக்கு இரண்டு அடுக்குடன் கூடிய " பம்பை " என்ற வாத்தியத்தியத்தை எம் அன்னையே உருவாக்கி அந்த புலிகளின் பல்லினாலேயே அந்த வாத்தியத்தை வாசித்து தன் வெற்றியை அறிவித்தாள் என்பது ஐதீகம். எனவேதான் பம்பை அங்காள பரமேஸ்வரிக்கு மிகவும் பிரியமான வாத்தியம். அம்மையின் விசேஷங்கள் அனைத்திலும் பம்பை கட்டாயம் ஒலிக்கும். மஹா சிவராத்திரி பண்டிகையின் போது இந்நிகழ்ச்சி 'பரி வேட்டை' சிலவிடங்களில் இந்நிகழ்ச்சியே மயான கொள்ளை நிகழ்ச்சியாக கொண்டாடப்படுகிறது। இவ்வாறு நம்மை உய்விக்க வந்த பார்வதி தேவியின் அம்சமாம் அங்காள பரமேஸ்வரியை இந்த மஹா சிவராத்திரி நன்னாளில் நாமும் வழி பட்டு நன்மைஅடைவோமாக।
சண்டிகேஸ்வரர்
இப்பதிவில் உள்ள புகைப்படங்கள், சென்னை நுங்கம்பாக்கம் லேக் ஏரியா, அங்காள பரமேஸ்வரி ஆலயத்தின் பத்து நாள் சிவராத்திரி பெருவிழாவின் ஐந்தாம் நாள் பஞ்ச மூர்த்திகள் சேவையின் படங்கள். இத்திருக்கோவிலில் 07-03-08 மாலை ஆறு மணிக்கு மயான கொள்ளை உற்சவம் நடைபெறவுள்ளது.
3 comments:
Excellent pictures and info. Thank you for posting this. I really enjoyed this.
Ramya
Thanak you very much. Let Angala Parameswari bless you.
visit
http://shivasevagan.blogspot.com
http://pattamuthu.blogspot.com
http://saivism.webs.com
Post a Comment