Showing posts with label நந்தி தேவர். Show all posts
Showing posts with label நந்தி தேவர். Show all posts

Sunday, November 13, 2011

அகத்தீஸ்வரர் பிரம்மோற்சவம் -17

சிவமயம்

திருசிற்றம்பலம்

தென்னாடுடைய சிவனே! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!



அருள்மிகு அகிலாண்டேஸ்வரி உடனுறை அகத்தீஸ்வரர் பிரம்மோற்சவத்தில் மிக முக்கிய நிகழ்ச்சியான அம்மையப்பர் திருக்கல்யாணம் முடிந்த பின் ஐயன் திருக்கயிலாய வாகனத்திலும், அம்பாள் வெள்ளி ரிஷப வாகனத்திலும், விநாயகர் மூஞ்சூறு வாகனத்திலும், முருகர் மயில் வாகனத்திலும், சண்டிகேஸ்வரர் சிறிய ரிஷப வாகனத்திலும் எழுந்தருளி அருள் பாலிக்கும் அற்புத காட்சியை கண்டு மகிழுங்கள்



மூஞ்சூறு வாகனத்தில் விநாயகர்


திருக்கயிலாய வாகனத்தில் ஐயன்


இராவணனுடைய ஒரு தலை அவன் வீணையில் இருப்பதைப் பாருங்கள். தான் என்ற அகந்தையால் திருக்கயிலை நாதரை தரிசிக்க செல்லும் போது ஐயனின் முதற்தொண்டராம் நந்தி தேவரைப் பார்த்து குரங்கைப்போல உள்ளாய் என்று கூற, அந்த குரங்காலேயே உன்னுடைய இலங்கைப் பட்டினமும். உன் குலமும், நீயும் அழிவாய் என்று சாபம் பெற்றவன். மேலும் திருக்கயிலையை மலையையே தூக்கி அடாத செயல் புரிந்த இவனுக்கும் ஐயன் அருள் புரிந்து சந்திரஹாசம் என்ற வாளையும் கொடுத்த கருணாமூர்த்தியல்லவா சிவபெருமான்.




வெள்ளி ரிஷப வாகனத்தில் அம்பாள்




மயில் வாகனத்தில் முருகர்



சிறிய ரிஷப வாகனத்தில் சண்டிகேஸ்வரர்