Showing posts with label திருக்கயிலாயம் மானசரோவர் தரிசனம்.. Show all posts
Showing posts with label திருக்கயிலாயம் மானசரோவர் தரிசனம்.. Show all posts

Wednesday, December 25, 2013

அடியேனது இரண்டாம் புத்தகம்


மிக்க நன்றி அன்பர்களே

அடியேன் இந்த வலைப்பூக்களில் பதிந்து வரும் செய்திகளை  தொகுத்து புத்தகமாக வெளியிடுகின்றேன்.  "திருக்கயிலாயம் மானசரோவர் தரிசனம்"  என்ற தலைப்பில் முதல் புத்தகம் வெளியானது.





 2007ம் ஆண்டில் முதலில் பதிப்பும்  பின்னர் 2011ம் ஆண்டில் இரண்டால் பதிப்பு வெளியிடப்பட்டது. 


தற்போது "சிவபெருமானுக்குரிய அஷ்டமஹா விரதங்கள்"  என்ற  தலைப்பில் இரண்டாவது புத்தகம் பிரசுரிக்கப்பட்டுள்ளது. இந்நூலில் ஸ்கந்த புராணத்தில் கூறப்பட்டுள்ள சிவபெருமானுக்குரிய  அஷ்ட மஹா விரதங்கள்  எவை, அவற்றை எப்போது அனுஷ்டிக்க வேண்டும், எப்படி அனுஷ்டிக்கலாம். இந்த விரதங்களை ஒட்டி எந்தெந்த திருக்கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. அந்த கோவில்களின்  இதர சிறப்புகள்  மற்றும் அந்த  சிவசக்தி  தலங்களின் வரலாறு மற்றும் பதிகங்கள்,  ஸ்தோத்திரங்கள் இப்புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன.




இந்நூல் விரதங்கள், திருவிழாக்கள்,மற்றும் திருக்கோவில்கள் என்று மூன்றும் கலந்த முக்கனியாக தித்திக்கின்றது. இப்புத்தகத்ததையும் பிரசுத்தவர்கள்  பிரேமா பிரசுத்தினர், கோடம்பாக்கம் சென்னை. 460 பக்கம் கொண்ட இந்த நூலில் பல அரிய கருத்துக்கள் இடம்பெற்றுள்ளன.  புத்தகம் வேண்டும் அன்பர்கள் அடியேனுக்கு muruganandams@rediffmail.comல்   மின்னஞ்சல் செய்யலாம்.  அடியேன் இது வரை வந்து அடியேனது பதிவுகளை படித்து  ஊக்கமளித்த அன்பர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன்.