ஹரித்வார் கங்கா ஆரத்தி
கங்கா மாதா
நீரின்றி அமையாது உலகம் என்றார்
திருவள்ளுவப்பெருந்தகை. அந்த நீரை சுமந்து நாட்டை வளப்படுத்துபவை நதிகள். நம்
நாட்டில் பாயும் நதிகளில் முக்கியமானது கங்கை. இந்த கங்கா தேவிக்கு நன்றி
தெரிவிக்கும் விதமும் தினமும் காலையும் மாலையும் ஆரத்தி கங்கோத்ரி தொடங்கி ஹூப்ளி
வரை பல இடங்களில் நடை பெறுகின்றது. ஹரித்வாரில் ஹரி-கா-பௌரியிலும் தினமும்
காலையிலும் மாலையிலும் ஆரத்தி நடக்கின்றது.
ஹரித்வாரின் ஹரி-கா-பௌரி கட்டம்
ஆரத்தி மாலை 6 மணிக்குத்தான் என்பதால் சிறிது கடைகளின்
பக்கம் சென்றோம் ஹரி-ஹா-பௌரி கட்டத்தி வலது பக்கம் முழுவது நிறைய கடைகள் உள்ளன. இவற்றில் பல விதமான பொருட்கள் கிடைக்கின்றன. டேராடூனில்
பணி புரியும் எனது நண்பர் ஒருவர், ஹரித்வாரில் அரக்கு வலையள்கள் பிரபலம் வாங்கிக்கொண்டு
போய் வீட்டில் கொடு என்று கூறியிருந்தான். ஆகவே வளையல்களை பார்த்தோம் பல்வேறு வண்ணங்களில்,
பல்வே அளவுகளில், வண்ண வண்ண கற்கள் பதித்த
வளையள்கல் கிட்டுகின்றன. அவரவர்கள் வீட்டு அம்மணிகளுக்காக வளையல் வாங்கினோம். ஹரித்வரில்
கிடைக்கும் மற்றொரு பொருள் 3-D படங்கள் ஆகும்.
இப்படங்களில் பார்க்க ‘நாம் கண்கள் இரண்டையும் மூக்கின் நுனியை நோக்கி யோகா செய்பவர்கள்
செய்வது போல் நோக்கினால் முப்பரிமாணத்தில் சுவாமி உருவம் அருமையாக தெரியும். அந்த
படத்தை கூர்ந்து நோக்கும் போது முதலில் மங்கலாகத்தான் இருக்கும் சிறிது சிறிதாக இன்னும்
அதிகமாக மனதை செலுத்தினால் அப்படியே உருவம் நமக்கு படும், மனம் ஒன்றினால்தான் உருவத்தை
காண முடியும் உண்மையாக தியானம் செய்ய் உதவும்
இந்தப் படங்கள் விநாயகர் , யோகேஸ்வர சிவன், புலியில் அமர்ந்திருக்கும் அஷ்டபுஜ துர்கா,
இராதா கிருஷ்ணர், ஊஞ்சலாடும் கண்ணன் என்று பல்வேறு படங்கள் கிட்டுகின்றன. ஷாப்பிங்
முடித்து விட்டு கங்கை கரைக்கு வந்தோம்.
கங்கையில் மிதக்கும் தீபங்கள்
தினமும் காலையில் நடக்கும் ஆரத்தி பிறந்த நாள் நல்லதாக
அமைய வேண்டும் என்று இறைவனை வேண்டுவதற்காக நடக்கின்றது மாலை ஆரத்தி குளிர் காலத்தில் 6 மணிக்கும், வெயில் காலத்தில் 6.30 மணிக்கும் நடைபெறுகின்றது மாலை 4 மணிக்கே பக்தர்கள் கங்கையின் இரு கரையிலும்
கூடத்தொடங்குகின்றனர். முதலில் வருபவர்கள் 5 ரூபாய்க்கு கிடைக்கும் பிளாஸ்டிக் பேப்பரை
போட்டு ஆரத்தியை நன்றாகக் கண்ணுறுவதற்கா அமர்ந்து
இருக்கின்றனர். கரையில் கஙகா மாதாவின் வெள்ளி உற்சவ மூர்த்திகள் பல்லக்கில் வைத்து
கங்கை கரைக்கு பக்தர்களால் கொண்டு வரப்ப்ட்டு பூஜைகள் நடக்கின்றன. நேரமாக நேரமாக இருட்டிக்
கொண்டும் வருகின்றது பக்தர்கள் கூட்டமும் அதிகமாகிக் கொண்டே வருகின்றது. கூட்டத்தை
ஒழுங்குபடுத்துபவர்கள் ஆரத்திக்கு நன்கொடை தாருங்கள் என்று மைக்கில் விளம்பரம் செய்து
பணம் வசூலிக்கின்றனர். இருட்டானவுடன் ஆரத்தி துவங்குகின்றது எல்லா கோவில்களில் இருந்தும் அலங்கார தீபங்கள் ஆரத்தியாக
விஷ்ணுவின் பாதத்திற்கு / கங்கை நதிக்கு.. காட்டப்படுகின்றது சுமார் 11 அலங்கார தீபங்களினால்
ஆரத்தி ந்டைபெறுகின்றது. முதலில் தூபம் காட்டப்படுகின்றது பின்னர் தீபம் . ஆரத்தி ஸ்பீக்கரிகளில் மிதந்து நம் காதுகளில்
விழுகின்றது. ஆரத்திற்கு தகுந்தவாறு பண்டாக்கள் கொழுந்து விட்டு எரியும் அலங்கார தீபத்தை
ஆட்டுகின்றனர். அதன் ஒளி கங்கை ஆற்றின் நீரில் பிர்திபலிக்கின்ரது பகதர்கள் பக்தி பூர்வமாக எழுந்து கங்கா மய்யாவிற்கு
ஜே என்று பக்தி கோஷமிடுகின்றனர். பல பெண்கள் தொன்னையில் பூக்கள் நிரப்பி அதில் விளக்கேற்றி
அதை கங்கையில் மிதக்க விடுகின்றனர். இருட்டு
நேரத்தில் ஒளிக் கப்பல்கள் மிதந்து நீரோட்டத்திற்கு
தக்கவாறு செல்லும் அழகைப் பார்ப்பதே ஒரு இனிமையான தெய்வீக அனுபவம். உண்மையில் ஹரித்வாரில் கங்கா ஆரத்தி பார்க்க
வேண்டிய ஒன்று என்பதில் ஐயமில்லை. தாங்களும் சமயம் கிடைத்தால் அவசியம் கங்கா ஆரத்தியை
சென்று தரிசனம் செய்யுங்கள்.
கங்கா மய்யா
கங்கா மய்யாவிற்கு ஆரத்தி
ஆரத்தி முடிந்தவுடன் பக்தர்கள் எல்லாம் கலைந்து சென்றனர்.
பின்னர் நாங்கள் அனைவரும் கங்கா தீர்தத்தை சேகரித்துக்கொண்டு ரிஷிகேஷ் வந்து சேர்ந்தோம்.
அடுத்த நாள் காலை அதிகாலை எழுந்து திருக்கோவலூர் மடத்திற்கு அருகில் உள்ள ஸ்நான கட்டத்திற்கு
சென்று கங்கையில் நீராடினோம். ஹரித்வாரை விட ரிஷிகேஷில் கூட்டமும் குறைவு, நீரின் வேகமும்
குறைவு மற்றும் தண்ணீர் தெளிவாகவும் உள்ளது.
இந்த வருட யாத்திரை மிகவும் திருப்தியாக நடந்து முடிந்ததால் மிக்க மன திருப்தியுடன்
அந்த இறைவனுக்கு நன்றி சொல்லி விட்டு டெல்லிக்குப்
புறப்பட்டோம். வரும் வழியில் காலை உணவை உட்கொண்டு
அருகில் உள்ள ஒரு கரும்பு தோட்டத்தில் வெல்லம் தயாரித்துக்கொண்டிருந்தனர். அங்கு சென்று
கரும்பு சாறு எவ்வாறு இரசாயனம் சேர்க்கப்பட்டு காய்ச்சப்படுவதால் வெல்லமாக மாறுகின்றது
என்பதை கண்டோம். பின்னர் தில்லி வந்து சேர்ந்து தமிழ் நாடு பவனில் சென்று மாலை சிற்றுண்டி உட்கொண்டு வசந்த்குஞ்சில் உள்ள
பெஜாவர் மடத்தில் தங்கினோம். மதத்தில் அருமையான ஒரு கிருஷ்னர் கோயில் உள்ளது எண்கோண
வடிவ கோயில் நடுநாயகமாக உடுப்பி கிருஷ்ணர்,
மற்ற பக்கங்களில் துர்கா மாதா, சிவலிங்கம், சீதா இராமர் என்று அனைத்து தெவ்ய மூர்த்தங்களும்
அருமையாக பட்டுப்பீதாம்பரங்களாலும், நவரத்தின அணிகலன்களாலும் அலங்கரிக்கப்பட்டு ரம்மியமாக
உள்ளது. கோயிலின் உள்ளே நுழைந்தாலே மனதில் அப்படியொரு அமைதி ஏற்படுகின்றது. அம்ர்ந்து
தியானம் செய்ய ஏற்ற சூழ்நிழலை அருமையாக உள்ளது.
டில்லி திரும்பும் வழியில்
மறு நாள் காலை எழுந்து சாந்தினி சௌக் சென்று சிறிது
பொருட்கள் வாங்கிக்கொண்டு ஆந்திர பவன் மதிய உணவிற்காக வந்தோம். சரியான கூட்டம் டோக்கன்
கொடுத்து உட்கார வைத்து விட்டனர். சுமார் அரை
மணி நேரம் காக்க வேண்டி வந்தது. ஆனால் சாப்பாது அருமையாக இருந்தது. மாலை பின்னர் Spicejetல் கிளம்பு நாங்கள் சென்னை
வந்து சேர்ந்தோம். எல்லா இடங்களிலும் தங்குவதற்கு ஏற்பாடு செய்த தேஷ்பாண்டே அவர்கள் தனது குடும்பத்தினருடன் செல்லும் போது விமானம் மூலம்
பெங்களூர் சுகமாக சென்று சேர்ந்தனர்.
Spicejetல் சென்னை திரும்புகின்றோம்
(தேவராஜன், அனுப் தேஷ்பாண்டே, தனுஷ்கோடி)
ரவி, வைத்திய லிங்கம், முருகானந்தம்
இவ்வாறாக எல்லை இல்லா கருணாமூர்த்தியின் அருளால் நான்கு தலங்களுக்கும் சென்று அருமையான தரிசனம் பெற்றோம். இத்துடன் இந்த யாத்திரை முடிவுற்றதா?
*
*
*
*
* I
*
*
*
*
*
*
* I
*
*
*
இல்லை அடுத்த வருடம் ஒரு நாள் தனுஷ்கோடி அவர்கள் தொலைப்பேசியில் அழைத்து , தேஷ்பாண்டே
அவர்கள் இந்தத் தடவை ஹேம்குண்ட் சாஹிப், பூக்களின் சமவெளி, பத்ரிநாத் செல்லலாம் என்றி
கூறுகின்றார் தாங்களும் வருகின்றீர்களா? என்று கேட்ட போது மறுக்க முடியவில்லை. அக்டோபர்
மாதம் வேறு ஒரு யாத்திரைக்கு முதலிலேயே திட்டமிட்டு டிக்கெட் எல்லாம் வாங்கி வைத்திருந்தும் இந்த யாத்திரைக்கு ஒப்புக்கொண்டேன்.
இந்த மூன்றாம் வரிட உஆத்திரையும் அருமையாக முடிந்தது இந்த வருடம் எதிர்பாராத விதமாக
பஞ்ச் பத்ரிநாதர்களையும் தரிசனம் செய்யும் பக்கியம் கிட்டியது. சிறிது இடைவெளிக்குப்பிறகு
அந்த அனுபவங்களையும் தங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்,. இது வரை வந்து யாத்திரையில்
பங்கு கொண்ட அன்புள்ளங்கள் அனைவருக்கும் அனந்த கோடி நன்றிகள்.