இத்தொடரின் மற்ற பதிவுகள்:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
பதினெட்டாம் படிகளைக் கடந்தவுடன் ஐயனின் நடைமண்டபம் முதலில் கண்ணில் படுகின்றது. அதன் முகப்பில் தத்வமஸி என்ற வாசகம் மலையாளம் மற்றும் வட மொழியில் மிளிர்கின்றது. பதினெட்டு தத்துவங்களையும் கடந்து வருகின்ற நீயும் நானும் ஒன்றே என்ற ஜிவாத்மா மற்றும் பரமாத்மாவும் ஒன்றே என்ற அத்வைத தத்துவத்தை இம்மஹா வாக்கியம் உணர்த்துகின்றது. இம்மண்டபத்தின் சுவரில் ஐயனின் சரித்திரம் பித்தளை தகடுகளில் புடைப்பிச்சிற்பமாக மிளிர்வதைக் காண்கிறோம்.
40 வருடங்கள் பழமையான கொடிமரம் பழுதடைந்ததால். புதிய கொடிமரம் 2017ம் வருடம் நிறுவப்பட்டது. 9 கிலோ தங்கத்தில் இக்கொடி மரத்திற்கான தங்கக் கவசம் செய்யப்பட்டுள்ளது. அதன் மதிப்பு சுமார் அங்கு ஒரு நிமிடம் நின்று தங்கக் கொடி மரத்தையும் அதன் மேல் உள்ள குதிரை வாகனத்தையும் அவசியம் தரிசிக்க வேண்டும். ஏனென்றால் இக்குதிரை பரசுராமரால் முதலில் ஐயனுக்கு முன்னர் பிரதிஷ்டை செய்யப்பட்டதாம். தற்போது கொடி மரத்தின் உச்சியில் உள்ளது. அடுத்து நாம் தரிசிக்க வேண்டியது மணி. பதினெட்டாம் படியின் இருபக்கமும் உள்ள மணிகள். இவற்றில் இடது புறம் உள்ள மணியை அவசியம் தரிசிக்க வேண்டும் ஏனென்றால், இம்மணி பழைய ஐயனின் விக்கிரகத்தால் உருவானது. 1059களில் சில விஷமிகள் ஐயனின் சன்னிதானத்திற்கு தீயிட்டனர் அதில் ஐயனின் கல் விக்கிரகம் பழுதடைந்தது. பின்னர் புணருத்தாரணம் செய்யப்பட்டு பஞ்சலோக விக்கிரகம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. . 1970களில் மீண்டும் ஒருமுறை தீ விபத்து ஏற்பட்டபோது அவ்விக்கிரகமும் பழுதடைந்தது. அவ்வுலோகத்தில் இருந்து இம்மணி உருவாக்கப்பட்டதாம்.
அடுத்து நாம் பதினெட்டாம் படியின் வலப்பக்கத்தில் கன்னி மூல கணபதி சன்னிதிக்கு எதிராக உள்ள ஹோமகுண்டத்தை தரிசிக்கின்றோம். நம்முடைய ஆத்மாவாகிய நெய்யை ஐயனுக்கு அபிஷேகம் செய்வதற்காக எடுத்த பின் அதை தாங்கி வந்த நெய்த் தேங்காய்கள் இந்த ஹோமகுண்டத்தில் எரிகின்றன. ஜீவாத்மா பரமாத்மாவுடன் இணைந்த பின் கூடான உடல் பஞ்சபூதத்தில் இணைவதை இது குறிக்கின்றது.
பின்னர் பக்தர்கள் கோவிலைச்சுற்றியுள்ள நடை மேடைகளில் ஏறி சன்னிதானத்தை வலம் வருகின்றனர் இவ்வாறு வலம் வரும் போது சன்னிதானத்தின் மூன்று தங்கச் கவசங்கள், நடை மேடையின் நான்கு கலசங்கள் ஐயன் மற்றும் கன்னி மூல கணபதி மற்றும் நாகராஜாவின் தங்கக்கூரைகளையும் அருமையாக தரிசிக்கின்றனர். பின்புறம் ஐயன் வன்புலி வாகனனாக அமர்ந்திருப்பதையும் அருமையாக தரிசிக்கலாம். பொதுவாக கேரள ஆலயங்களின் கருவறை (ஸ்ரீகோவில்) சதுரமாக பிரமிட் வடிவ கூரையுடனோ அல்லது வட்ட வடிவில் தொப்பிக்கூரையுடனோ அமைந்திருக்கும் ஆனால் ஐயப்பனின் ஸ்ரீகோவில் செவ்வக வடிவில் அமைந்திருப்பது ஒரு தனி சிறப்பு. . முன்புறம் ஐயப்பன் சன்னதியில் உள்ளது போன்ற புடைப்புச் சிற்பம் அமைத்துள்ளனர். மேலும் சன்னதியின் சுவர்களில் இரு புறமும் ஐயனின் சரித்திரம் தங்கத்தகடுகளில் சிற்பமாக அமைத்துள்ளதையும் காணலாம்.
ஐய்னை தரிசித்த பின் கற்பூர ஆழி வழிபாடு என்றொரு சடங்கை நடத்துகிறார்கள் ஐயப்ப பக்தர்கள். குங்குமம், விபூதி, மஞ்சள், மிளகு, பேரீச்சம்பழம், கல்கண்டு, காணிக்கைப் பணம் போன்றவற்றைத் தனித்தனி தட்டில் ஏந்தி ஊதுபத்தி கட்டைக் கொளுத்தி, அதைக் கையில் ஏந்தியவாறு ஒருவரும், பன்னீர் தெளித்துக்கொண்டே இன்னொருவரும், கூட்டமாக குருசாமி தலைமையில் சரணம் கூறிக்கொண்டே அங்கே கண்ணுக்குத் தென்படும் ஒவ்வொரு தெய்வத்தையும் பார்த்து வழிபட்டுக்கொண்டே கோவிலைச் சுற்றி வருவதுதான் இந்த கற்பூர ஆழிவழிபாடு என்பது! இப்படி வழிபடச் செல்லும் போது விபூதித் தட்டில் சூடம் எரிய எடுத்துச் செல்கிறார்கள்.
தை முதல் தினமாம் மகரஜோதி நாளான இன்று ஐயப்பனின் தரிசனம் பெறலாம் அன்பர்களே. சத்தியமான பொன்னு பதினெட்டாம் படிகளில் ஒரு பக்கம் புலியையும், யானையையும் நாம் காணலாம். படிகளில் ஏறும் போது சரண கோஷத்தையோ அல்லது படிப்பாடலையோ பாடிக்கொண்டு ஐயனை தரிசிக்கப்போகின்றோம் என்ற பரவசத்துடன் படி ஏறுகின்றனர். கூட்டம் அதிகமாக இருக்கும் போது பகதர் கூட்டமே தங்களை மேலே கொண்டு போய் சேர்த்து விடும். இருபக்கமும் காவல்துறையினர் நின்று கொண்டு பக்தர்கள் படியேற உதவுகின்றனர்.
பதினெட்டாம் படிகளைக் கடந்தவுடன் ஐயனின் நடைமண்டபம் முதலில் கண்ணில் படுகின்றது. அதன் முகப்பில் தத்வமஸி என்ற வாசகம் மலையாளம் மற்றும் வட மொழியில் மிளிர்கின்றது. பதினெட்டு தத்துவங்களையும் கடந்து வருகின்ற நீயும் நானும் ஒன்றே என்ற ஜிவாத்மா மற்றும் பரமாத்மாவும் ஒன்றே என்ற அத்வைத தத்துவத்தை இம்மஹா வாக்கியம் உணர்த்துகின்றது. இம்மண்டபத்தின் சுவரில் ஐயனின் சரித்திரம் பித்தளை தகடுகளில் புடைப்பிச்சிற்பமாக மிளிர்வதைக் காண்கிறோம்.
புதுக்கொடிமரம் நிறுவப்படுகின்றது.
40 வருடங்கள் பழமையான கொடிமரம் பழுதடைந்ததால். புதிய கொடிமரம் 2017ம் வருடம் நிறுவப்பட்டது. 9 கிலோ தங்கத்தில் இக்கொடி மரத்திற்கான தங்கக் கவசம் செய்யப்பட்டுள்ளது. அதன் மதிப்பு சுமார் அங்கு ஒரு நிமிடம் நின்று தங்கக் கொடி மரத்தையும் அதன் மேல் உள்ள குதிரை வாகனத்தையும் அவசியம் தரிசிக்க வேண்டும். ஏனென்றால் இக்குதிரை பரசுராமரால் முதலில் ஐயனுக்கு முன்னர் பிரதிஷ்டை செய்யப்பட்டதாம். தற்போது கொடி மரத்தின் உச்சியில் உள்ளது. அடுத்து நாம் தரிசிக்க வேண்டியது மணி. பதினெட்டாம் படியின் இருபக்கமும் உள்ள மணிகள். இவற்றில் இடது புறம் உள்ள மணியை அவசியம் தரிசிக்க வேண்டும் ஏனென்றால், இம்மணி பழைய ஐயனின் விக்கிரகத்தால் உருவானது. 1059களில் சில விஷமிகள் ஐயனின் சன்னிதானத்திற்கு தீயிட்டனர் அதில் ஐயனின் கல் விக்கிரகம் பழுதடைந்தது. பின்னர் புணருத்தாரணம் செய்யப்பட்டு பஞ்சலோக விக்கிரகம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. . 1970களில் மீண்டும் ஒருமுறை தீ விபத்து ஏற்பட்டபோது அவ்விக்கிரகமும் பழுதடைந்தது. அவ்வுலோகத்தில் இருந்து இம்மணி உருவாக்கப்பட்டதாம்.
அடுத்து நாம் பதினெட்டாம் படியின் வலப்பக்கத்தில் கன்னி மூல கணபதி சன்னிதிக்கு எதிராக உள்ள ஹோமகுண்டத்தை தரிசிக்கின்றோம். நம்முடைய ஆத்மாவாகிய நெய்யை ஐயனுக்கு அபிஷேகம் செய்வதற்காக எடுத்த பின் அதை தாங்கி வந்த நெய்த் தேங்காய்கள் இந்த ஹோமகுண்டத்தில் எரிகின்றன. ஜீவாத்மா பரமாத்மாவுடன் இணைந்த பின் கூடான உடல் பஞ்சபூதத்தில் இணைவதை இது குறிக்கின்றது.
ஹோம குண்டம்
பின்னர் பக்தர்கள் கோவிலைச்சுற்றியுள்ள நடை மேடைகளில் ஏறி சன்னிதானத்தை வலம் வருகின்றனர் இவ்வாறு வலம் வரும் போது சன்னிதானத்தின் மூன்று தங்கச் கவசங்கள், நடை மேடையின் நான்கு கலசங்கள் ஐயன் மற்றும் கன்னி மூல கணபதி மற்றும் நாகராஜாவின் தங்கக்கூரைகளையும் அருமையாக தரிசிக்கின்றனர். பின்புறம் ஐயன் வன்புலி வாகனனாக அமர்ந்திருப்பதையும் அருமையாக தரிசிக்கலாம். பொதுவாக கேரள ஆலயங்களின் கருவறை (ஸ்ரீகோவில்) சதுரமாக பிரமிட் வடிவ கூரையுடனோ அல்லது வட்ட வடிவில் தொப்பிக்கூரையுடனோ அமைந்திருக்கும் ஆனால் ஐயப்பனின் ஸ்ரீகோவில் செவ்வக வடிவில் அமைந்திருப்பது ஒரு தனி சிறப்பு. . முன்புறம் ஐயப்பன் சன்னதியில் உள்ளது போன்ற புடைப்புச் சிற்பம் அமைத்துள்ளனர். மேலும் சன்னதியின் சுவர்களில் இரு புறமும் ஐயனின் சரித்திரம் தங்கத்தகடுகளில் சிற்பமாக அமைத்துள்ளதையும் காணலாம்.
சன்னிதானத்தின் பின்புறத்தோற்றம்
பின்னர் கீழிறங்கி வந்து ஐயனை தரிசிக்கின்றனர். அதிக பக்தர்கள் தரிசிக்க ஏதுவாக மூன்று வரிசைகளில் பக்தர்களை தரிசனம் செய்ய அனுமதிக்கின்றனர். முதல் வரிசை மற்றும் இரண்டாம் வரிசையில் இரு முடி தாங்கியவர்களும் கடைசி வரிசையில் இருமுடி இல்லாதவர்கள் ஐயனை தரிசனம் செய்யலாம். முதல் வரிசையில் செல்வது உத்தமம், ஏனென்றால் ஐயனை அருமையாக தரிசிக்க முடியும். சன்னிதானத்தின் இருபுறமும் துவாரபாலகர்கள் தங்க கவசத்தில் மின்னுகின்றனர். அவர்களிடன் அனுமதி பெற்றுக்கொண்டபின் ஐயனை தரிசிக்கின்றோம்.
ஐயனைத் துதிக்கையிலே தன்னையே மறந்திடுவார் என்பதற்கேற்ப தன்னை மறந்து கண்ணீர் மல்க பரவசத்துடன் பக்தர்கள் கோடி சூரிய லாவண்யத்துடன் சன்னிதானத்தின் உள்ளே ஐயனை தரிசனம் செய்கின்றனர். கடுமையாக விரதம் வந்ததன் பலனைப் பெறுகின்றனர். கூட்டம் அதிகமாக இருக்கும் காலங்களில் ஒரு நிமிடம் மட்டுமே தரிசனம் கிட்டுகின்றது. சில சுவாமிகள் சரியாக ஐயனை தரிசிக்க முடியவில்லை என்று கூறும் போது நாம் ஐயனைப் பார்ப்பது முக்கியமல்ல இருமுடியுடன் ஐயன் நம்மை தன் அருட்பார்வையுடன் பார்க்கின்றான் என்பதை உணருங்கள் என்று கூறுவார்.
தாமரை பீடத்தில் யோக கோலத்தில் கால்களை குந்தாளமிட்டு அமர்ந்த கோலத்தில் அருள் பாலிக்கின்றார். கால்களைச்சுற்றி யோக நரசிம்மருக்கு உள்ளது போல யோக பட்டம். கலியுக வரதனாக நாம் எல்லோரும் உய்ய ஐயன் தவம் செய்து கொண்டிருக்கிறார். திருக்கரத்தில் தகப்பனார் தக்ஷிணாமூர்த்தியைப் போல சின் முத்திரை, ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலங்களையும் விடுத்தால் ஜீவாத்மாவாகிய நீ ப்ரமாத்வாகிய என்னுடன் இணையலாம் என்று தத்துவமஸி என்ற மஹாவாக்கியத்தை முத்திரையாகக் காட்டியவண்ணம் அருட்காட்சி தருகின்றார். சிரசு ஜடாமுடி, இடதிருக்கரம் அம்பாளின் இடக்கரத்தை போல அமைந்துள்ளது. கண்களை மூடிக்கொண்டு தியானம் செய்தால் இடது திருக்கரம் சிவலிங்கத்தின் ஆவுடையார் போல உள்ளதால் சிவலிங்க ரூபமாகவும் ஐயனைக் காணலாம் என்று குருசாமி அவர்கள் கூறுவார்கள். ஆபரணங்கள் அவரது திருமார்பு, திருக்கரங்கள் மற்றும் திருப்பாதங்களை அலங்கரிக்கின்றன. திருமுகத்தில் கோடி மன்மத லாவண்யம், கோடி சூரியப்பிரகாசம் திருக்கண்களால் அருள் பொழிந்து நம்மை நோக்குகின்றார். அந்நொடியில் நமது அனைத்து துயரங்களும் விலகுகின்றது பேருவகையை அடிகின்றோம். ஹரிஹர புத்ரன் என்பதற்கிணங்க சிவ அம்சங்களும், விஷ்ணு அம்சங்களுடனும் ஐயன் அருள் பாலிக்கின்றார்.
ஓம் அடியேன் அறிந்தும் அறியாமலும், தெரிந்தும் தெரியாமலும் செய்த சகல குற்றங்களையும் பொறுத்து காத்து இரக்ஷித்து, நல்ல வழி காட்டி, நேர் வழிக்கு கொண்டு போய், நல்லபடியாக வாழ வைக்க வேண்டும். காசி, இராமேஸ்வரம், பாண்டி, மலையாளம் அடக்கி ஆளும் வில்லன், வில்லாளி வீரன், வீரமணி கண்டன், ஸ்ரீஸத்தியமான பொன்னு பதினெட்டாம்படி மேல் வாழும் ஓம் ஸ்ரீஹரிஹர ஸுதன், கலியுக வரதன், ஆனந்த சித்தன், ஐயன் ஐயப்ப சுவாமியே சரணம் ஐயப்பா என்று சரணமடைகிறோம். அதற்குள் காவலர்கள் நம்மைப் பிடித்து இழுத்து விடுகின்றனர்.
ஐயனை தரிசித்த பேரானந்தத்தில் அடுத்து கன்னி மூலை கணபதியை தரிக்கின்றோம். கணபதி சன்னதியின் முகப்பில் அஷ்ட கணபதிகளின் புடைப்பு சிற்பங்கள் தங்கத்தில் அமைந்துள்ளன. ஸ்ரீகோவிலின் பிரமிட் கூரையும் தங்க ஓடுகளால் வேயப்பட்டுள்ளன. . எந்த வித விக்னங்களும் இல்லாமல் பெரிய பாதையில் வந்து ஐயனை தரிசிக்க உதவிய கணபதிக்கு நன்றி கூறி பின்னர் நாகராஜா சன்னதிக்கு செல்கின்றோம். மூன்றாம் வரும் மணிகண்டன்கள் அம்மணியை கணபதி சன்னதியில் கட்டுகின்றனர். அம்மணியை எடுத்துச் சென்று வீட்டில் வைத்து பூசை செய்தால் குழநதை பாக்கியம் கிட்டும் என்பதால் மனிக்காக பக்தர் கூட்டம் கணபதி சன்னதிக்கருகில் காத்தி நிற்கின்றனர். மணியைக் கட்டக்கூட விவுவதில்லை கையில் இருந்தே பிடுங்கிச் செல்கின்றனர்.
கர்நாடகத்தில் சுப்பிரமணியரை நாக வடிவில்தான் வழிபடுகின்றனர் அது போல இங்கும் நாகராக, ஐயனின் சகோதரர் முருகரை வணங்குகின்றோம் என்று ஒரு ஐதீகம் உண்டு . இச்சிறு கோவிலின் முகப்பிலும் நாகங்களின் தங்க புடைப்புச் சிற்பம், கூரை தங்க ஓடுகளால் வேயப்பட்டுள்ளது. சகோதரர்களை வணங்கிய பின் அடுத்து மாளிகைப்புறத்து மஞ்சம்மாவை தரிசிக்க செல்கின்றோம்.
மஞ்சமாதா சன்னதி
ஐயப்பனின் தரிசனம் முடிந்ததும் கீழே இறங்காமல் மஞ்சமாதா கோவில் செல்வதற்கு நடைமேடை அமைத்திருக்கிறார்கள். ஐயப்பன் மகிஷியை வதம் செய்த போது தத்தனின் சாபத்தால் மகிஷியாக மாறிய லீலாவதி ஐயனின் திருவடிபட்டவுடன் அவள் செய்த பாவமெல்லாம் விலகி ஞானம் பெற்றாள். அத்துடன் அவள் மேனியிலிருந்து பேரோளி ஒன்று தோன்றி, அதனின்றும் அழகிய ஒரு மங்கை வெளிப்பட்டாள். அவளே மஞ்ச மாதா ஆவாள்.
ஸ்ரீஐயப்பனைக் கண்ட மஞ்ச மாதா காதல் கொண்டாள். தன்னை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என வற்புறுத்தினாள்.ஐயனோ தான் ஓர் நித்திய பிரம்மச்சாரி எனவும் திருமணம் செய்துகொள்ளும் விருப்பம் இல்லை எனவும் தெரிவித்தார்.. தொடர்ந்தும் அவள் வற்புறுத்தி வரவே ஐயப்பன் இதனின்றும் தப்பித்துக் கொள்ள ஓர் உபாயம் செய்தார். கன்னி ஐயப்பமார்களின் தாற்பரியம், மஞ்ச மாதா! ஒவ்வோர் ஆண்டும் கார்த்திகை முதல் நாள் என்னை வழிபட அடியவர்கள் வருவார்கள். எந்த வருடம் புதிதாக பக்தர்கள் யாரும் வரவில்லையோ, அந்தத் தருணத்தில் உன்னைக் கணட்டாயம் திருமணம் செய்து கொள்வேன் என்றார் ஐயன்.
அதற்கு மஞ்ச மாதா ஐயனே புதிதாக வரும் கன்னி ஐயப்பமார்களை எவ்வாறு அடையாளம் கண்டு கொள்வது என வினாவினாள். அதற்கு ஐயப்பன், பெண்ணே, ஒவ்வொருவரும் கையில் சரம் ஒன்றை ஏந்தி வந்து சரங்குத்தி என்ற இடத்தில் சரம் குத்துவார்கள். எந்த ஆண்டில் சரம் ஏதும் குத்தவில்லையோ அந்த வருடம் கன்னி ஐயப்பமார்கள் யாரும் வரவில்லை என அறிந்து கொள்ளலாம் என்றார் ஐயப்பன். இதன் அடிப்படையில் தான் மஞ்ச மாதாவை சரங்குத்தி வரை எடுத்து செய்கின்றார்.
ஐயப்பன் நித்திய பிரமச்சாரியாகவே இருக்கத் திருவுள்ளம் கொண்டிருப்பதால்தான் ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரக் கணக்கான கன்னி ஐயப்பமார்கள் வந்த படியே இருக்கிறார்கள். ஒவ்வொரு குருசாமியும் ஒரு கன்னி ஐயப்பரையாவது மலைக்கு நிச்சயம் அழைத்துச் செல்ல வேண்டும் என்ற நியதி இதனால்தான் ஏற்பட்டது. ஐயப்பன் மஞ்ச மாதாவை நோக்கி ‘மஞ்சமாதாவே, உன் சந்நிதியில் மஞ்சள் பொடியுடன் ரவிக்கைத்துணியை வைத்து விளங்கும் கன்னி பெண்களுக்கு திருமணம் கைகூடும் என்று வரம் நல்கினார்.
மஞ்சமாதாவுக்கு மாளிகைபுரத்து அம்மன் என்று பெயரும் உண்டு. சபரிமலை பதினெட்டாம் படியிலிருந்து பார்த்தால் வட கிழக்குப்புறமாக மஞ்ச மாதாவிற்கும் தனியாக ஒரு கோயில் உண்டு. இக்கோயிலின் கதவுகள் எப்போதுமே திறக்கப்படுவது இல்லையாம். ஸ்ரீ ஐயப்ப சுவாமியின் ஆலயத்தில் அன்னை ஆதிபரா சக்தியின் அம்சமாக வீற்றிருக்கும் மஞ்சமாதாவை வழிபட்டால் மாங்கல்ய பாக்கியமும் மாங்கல்ய பலமும் கிடைக்கும். அன்னை மஹா காளி, மஹா லக்ஷ்மி, மஹா சரஸ்வதி அம்சமாக விளங்குகின்றாள், நின்ற கோலத்தில் சதுர் புஜங்களுடன் சங்கு சக்கரம் தாங்கி, அபய வரத கரங்களுடன் சிரசில் பிறையுடன் எழிலாக அருள் பாலிக்கின்றாள். இவளது சன்னதியில் தேங்காய் உடைப்பதில்லை சன்னதி சுற்றி உருட்டிக்கொண்டு வந்து சேர்க்கின்றனர் கன்னி சாமிகள். அம்மன் கன்னி சுவாமிகள் வரக்கூடாது என்று காதிருப்பதால் கன்னி சாமியாக வந்ததற்கு மன்னிப்பு கேட்கும் விதமாக இவ்வாறு தேங்காயை உருட்டுகின்றனர் என்பர்.
அன்னையின் ஸ்ரீகோவில் சுவற்றில் அஷ்ட லக்ஷ்மிகளும் அருள் பாலிக்கின்றனர். கூரைக்கு தங்க ஓடு வேய்ந்துள்ளனர். அம்மனின் பிரசாதமாக மஞ்சள் வழங்குகின்றனர். அம்மனுக்கு வேண்டிய பூசைப் பொருட்களையும் பக்தர்கள் இருமுடியில் சுமந்து வருகின்றனர். அவற்றுள் மஞ்சள்பொடியும், இரவிக்கைத்துணியும் முக்கியமானது. அம்மனுக்கு சமர்ப்பிக்கப்பட்ட இத்துணியை கல்லாப் பெட்டியில் வைக்க செல்வம் பெருகும் என்பது பலர் கண்ட உண்மை. அதைப்போலவே இத்துணியை பெறும் கன்னிப்பெண்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்..
மாளிகைபுரத்திற்கு என்று தனியாக மேல்சாந்தி ஒருவர் இருக்கிறார். மஞ்சமாதா கோவில் பூஜைகள் போன்றவற்றை இவர்தான் செய்கிறார். சபரிமலையில் நடத்தப்படும் முக்கியப் பூஜைகளில் ஒன்று பகவதி பூஜை. இதற்கு ரூபாய் நூற்றி ஒன்றை மஞ்சமாதா கோவிலில் உள்ள தேவஸ்தானம் கவுண்டரில் கட்டி ரசீது பெற வேண்டும். இப்பூஜையை மேற்குறிப்பிட்ட மேல்சாந்திதான் நடத்தி கொடுப்பார்.
அம்மனுக்கு காவலாக கொச்சு கடுத்த சுவாமி வில்லுடன் எழுந்தருளியுள்ளார். பிறகு அங்கிருந்து மணிமண்டபம் செல்ல வேண்டும். இந்த மணிமண்டபம் ரொம்ப அழகானது. இங்கே தான் மகரவிளக்கன்று வரும் திருவாபரணப் பெட்டியை இறக்கி வைப்பார்கள். ஜோதி தரிசனத்திற்கு பிறகு சபரிமலை வரும் பந்தள ராஜ பரம்பரை மன்னரும் அவர் குடும்பத்தாரும் இங்குதான் தங்குவார்கள். இந்த மஞ்சமாதா கோவிலில் மணிமண்டபத்திற்கு அருகில் நாகராஜா, அதற்கு அருகில் நவக்கிரகங்கள் உள்ளன. வலது பக்கம் சுவரை அடுத்து காட்டுத் தேவதைகள், நாகயட்சி அமைந்துள்ளன. இவற்றுக்கு மஞ்சள் தூவி வழிபடுவது வழக்கமாக உள்ளது.
மஞ்ச மாதா மேற் கரங்களில் சங்கு சக்கரம் தாங்கி துர்கை அம்சமாகவும், அதே சமயம் லலிதா அம்சமாகவும் அருள் பாலிக்கின்றாள். எனவே அம்மனுக்கு லலிதா சகஸ்ரநாமம் மற்றும் லலிதா த்ரிசதி கூறி வழிபடுவது மிகவும் சிறப்பு. மணி மண்டபத்தின் ஈசான மூலையில் அமர்ந்து பாராயணம் செய்கின்றனர் பல பக்தர்கள். மஞ்சமாதா கோவில் அருகே உள்ள மணிமண்டபத்தின் எதிரிலே சின்ன வாத்தியம் என்ற இசைக்கருவியைப் புள்ளுவன்கள் என்கிற வாத்தியக்காரர்கள் இசைக்கக் காணலாம். சிறுதொகையை அவர்களுக்குப் பக்தர்கள் அன்பளிப்பாக கொடுத்து வாசிக்கச் சொல்கிறார்கள். அந்த இசை கேட்டு அங்கே இருக்கும் சகல தெய்வங்களும் அருளாசி வழங்கி ஆசிர்வதிப்பதாக நம்பப்படுகிறது. மேலும் அம்மனுக்கு பல பக்தர்கள் வெடி வழிபாடும் ‘செய்கின்றனர்.
ஐய்னை தரிசித்த பின் கற்பூர ஆழி வழிபாடு என்றொரு சடங்கை நடத்துகிறார்கள் ஐயப்ப பக்தர்கள். குங்குமம், விபூதி, மஞ்சள், மிளகு, பேரீச்சம்பழம், கல்கண்டு, காணிக்கைப் பணம் போன்றவற்றைத் தனித்தனி தட்டில் ஏந்தி ஊதுபத்தி கட்டைக் கொளுத்தி, அதைக் கையில் ஏந்தியவாறு ஒருவரும், பன்னீர் தெளித்துக்கொண்டே இன்னொருவரும், கூட்டமாக குருசாமி தலைமையில் சரணம் கூறிக்கொண்டே அங்கே கண்ணுக்குத் தென்படும் ஒவ்வொரு தெய்வத்தையும் பார்த்து வழிபட்டுக்கொண்டே கோவிலைச் சுற்றி வருவதுதான் இந்த கற்பூர ஆழிவழிபாடு என்பது! இப்படி வழிபடச் செல்லும் போது விபூதித் தட்டில் சூடம் எரிய எடுத்துச் செல்கிறார்கள்.
கூட்டமாகக் குருசுவாமி தலைமையில் செல்பவர்கள் ஐயப்பனின் சன்னதி சென்று, கொடிமரத்துக்கு அப்பால் நின்று சூடம் தீபாராதனை காட்டி ஐயப்பனை மனதார வணங்கி விட்டு உண்டியலில் காணிக்கைப் பணத்தைப் போடுகின்றனர். பின்னர் கன்னி மூல கணபதியையும், அதன் பின் நாகராஜாவையும் வணங்கி விட்டு சரணம் கூறியபடி 18-ஆம் படிக்கு வருகின்றனர்.
அங்கு கருத்தசாமி, கருப்பண்ணசாமி, 18 படிகளுக்கு தீபராதனை செய்து பின்பு வாபர் சன்னதி சென்று வணங்கி விட்டு மஞ்சமாதா சன்னதிக்கும் சென்று வணங்கி விட்டு தங்களது தங்குமிடத்திற்குத் திரும்பி வந்து குருசாமி காலில் விழுந்து வணங்கி ஆசி பெற்றுக் கொள்வார்கள்.
சுவாமி ஐயப்பன் சன்னிதானத்திற்கும் மஞ்சள் மாதா சன்னிதானத்திற்கும் இடையில் பஸ்ம குளம் அமைத்துள்ளது. இக்குளத்தில் மூழ்கி எழுந்தால் புண்ணியம் உண்டாகும். நீராடினால் தீராத நோய்கள் தீருமாம் நற்பலன் கிட்டுகின்றது. .இவ்வாறு தரிசனத்தை முடித்துக்கொண்டு திரும்பும் முன் தேங்காய் உடைத்து சன்னிதான தரிசனத்தை நிறைவு செய்கின்றனர். பின்னர் பக்தர்கள் பொதுவாக சுப்பிரமண்னியப் பாதை வழியாக கீழிறங்கி பம்பா கணபதி அடைந்து அவரை வணங்கி பம்பை ஆற்றைக் கடந்து தங்கள் இல்லம் அடைந்து அது வரை தங்கள் குடுத்தினருக்கு துணையாக இருந்த ஐயனின் காவல் தெய்வங்களுக்கு நன்று கூறும் விதமாக தேங்காய் உடைத்து இருமுடிப்பையை சுவாமி முன் வைத்து வணங்கி, மலையிலிருந்து கொண்டு வந்த அரிசி மற்றும் நெய்யைக்கொண்டு பொங்கல் சமைத்து அதை சுவாமிக்கு படைக்கின்றனர். அடுத்த வருடமும் தரிசனம் தர வேண்டுமென்று ஐயனை வேண்டி மாலையை கழற்றி விரதத்தை முடிக்கின்றனர்.
இப்பதிவுடன் இவ்வருட யாத்திரை நிறைவு பெறுகின்றது. கார்த்திகை முதல் நாள் துவங்கிய பதிவுகள் தை முதல் நாள் வரை நீண்டன என்றாலும் இன்னும் பல செய்திகள் எழுத சமயம் கிட்டவில்லை. அவனருளால் எப்போது சமயம் கிட்டுகின்றதோ அப்போது இன்னும் பல செய்திகளை பகிர்ந்து கொள்கிறேன் அபர்களே. உடன் வந்து தரிசித்த அன்பர்கள் அனைவருக்கும் ஐயன் அருள் புரிய வேண்டுகிறேன்.
குருசாமி திருவடிகளே சரணம்
சுவாமியே சரணம் பொன் ஐயப்பா