உ
ஓம் சக்தி
கமடேஸ்வர நாயகி அன்னை காளிகாம்பாள்
கடங்கள் புறப்பாடு
மூலவர் காளிகாம்பாள் பிரதான கடம்
காளிகாம்பாள் விமானம்
காய்கறிகளால் அலங்காரம்
அன்னையின் அற்புத குடமுழுக்கை காணும் பாக்கியம் கிட்டியது . 12 கால பூஜைக்குப்பின் பூர்ணாகுதியும், தீபாரதணையும் மற்றும் கடங்கள் புறப்பாடு பிறகு முதலில் கிழக்கு கோபுர கலச கும்பாபிஷேகம், ஐந்து நிமிடம் கழித்து மேற்கு கோபுர இராஜ கோபுர கலச கும்பாபிஷேகம், பின்னர் தங்க முலாம் பூசப்பெற்ற காளிகாம்பாள் விமான கலச கும்பாபிசஷேகம் ஆகாயம் முடிந்த பின் நிலத்தில் மூலவருக்கு மஹா அபிஷேகம் அடுத்து உற்சவர் பெரியம்மனுக்கு அபிஷேகம் அலங்காரம் தீபாரதனை மஹா அபிஷேகத்திற்குப்பின் அம்மன் தரிசனம் எல்லாம் அருமையாக கிட்டியது. அதை பகிர்ந்து கொள்ளவே இப்பதிவு. கூட்டம் அதிகமாக இருந்ததால் நெரிசலில் சில படங்கள் சரியாக வரவில்லை மன்னித்து விடவும். மேல் தளம் செல்லவும் முடியவில்லை. ஹெலிகாப்டர் வந்து மலர் தூவியது. கிரேன் மூலமாக வீடியோ எடுத்து தொலைக்காட்சி பெட்டிகள் வழியாக கோவிலின் உள்ளும் வெளியேயும் பல்வேறு இடங்களில் காண்பித்தனர். பிரகாரம் முழுவதும் காய்கறி மற்றும் பழங்களினால் நேர்த்தியாக அலங்காரம் செய்திருந்தனர். அவற்றில் சில காட்சிகளை கண்டு களியுங்கள் அன்பர்களே. பின்னர் காளிகாம்பாளுக்கு பல்லாண்டு பாடுங்கள் அன்னையின் அருள் பெறுங்கள்.
2 comments:
புகை படங்களுக்கு நன்றி
ஐயா
எல்லாம் அம்மன் அருள். அவளாக அழைத்து தரிசனமும் கொடுத்து பதிவிடவும் செய்தவள் அன்னை காளிகம்பாளே.
Post a Comment