Wednesday, August 15, 2018

சொர்ணாம்பாள் ஆடிப்பூர உற்சவம் - 3

அன்பர்கள் அனைவருக்கும் சுதந்திரதின வாழ்த்துக்கள்.

ஆகம விதிகளின் படி அம்பாள் தனியாக  மாட வீதிகளில் எழுந்தருளி  அருள் பாலிப்பது ஆடிப்பூர உற்சவத்தின் போதுதான். சிவாலயங்களில் சோமாஸ்கந்த மூர்த்தியுடன் உள்ள அம்பாள் பிரம்மோற்சவ காலங்களில் பஞ்ச மூர்த்திகளில் ஒருவராக எழுந்தருளுவாள்.  இந்த அம்மன் விக்கிரகம் தவிர உள் புறப்பாடு கண்டருளும் அம்மன் விக்கிரகம் ஒன்றும் சிவாலயங்களில் உள்ளது. இவ்வம்பாளை “சுக்கிரவார அம்பாள்“ அல்லது "ஆடிப்பூர அம்பாள்" என்று அழைப்பர்.  

நாக வாகனத்தில் சொர்ணாம்பிகை

வெள்ளித்தேர், தங்கத்தேரில் தினமும் உள்புறப்பாடு, வெள்ளிக்கிழமைகளில் உள்புறப்பாடு, வராத்திரியில் கொலு வீற்றிருப்பது மற்றும் ஆடிப்பூர உற்சவத்தின் போது தனியாக மாட வீதிகளில் எழுந்தருளுபவள் இந்த ஆடிப்பூர அம்பாள்தான்.



திருவாரூர் கமலாம்பாள், திருநாகை நீலாயதாக்ஷி, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள். இராமேஸ்வரம் பர்வதவர்த்தினியம்மன் ஆகிய அம்மன்கள் ஆடிப்பூரத்தின் போது பத்து   நாள் பெருவிழா சிறப்பாக தேரோட்டத்துடன் சிறப்பாக டைபெறுகின்றது.


இவ்வாலயங்களைப் போலவே சென்னை கோடம்பாக்கம் பாரத்வாஜேஸ்வரர் ஆலயத்திலும் சொர்ணாம்பாள் பத்து நாள் ஆடிப்பூர உற்சவம் கண்டருளினாள். அவ்வுற்சவத்தின் அருட்காட்சிகள் இனி வரும் பதிவுகளில் இடம் பெறுகின்றன.

ஐந்தாம் திருநாள் அலங்காரம்


தினமும் காலை யாக சாலை பூஜை, மூலவர் அம்மனுக்கு யாகத்தில் பூசித்த புனித நீரினால் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், லலிதா சகஸ்ர நாம அர்ச்சனை. இரவு ஆடிப்பூர அம்பாள் மாட வீதி வாகன சேவை தந்தருளினாள். சிறப்பாக சென்ற வருடம் கண்ணாடிப் பல்லக்கு அம்பாளுக்கு சமர்பிக்கப்பட்டது. ஆடிப்பூரத்தன்று அம்பாள் அந்நூதன கண்ணாடிப் பல்லக்கில் எழுந்தருளி அருள் பாலிக்கின்றாள்.




பின்னலங்காரம்



ஐந்து குடைகளுடன் புறப்பாடு



கோபுர தரிசனம்





4 comments:

Anuprem said...

ஒவ்வொரு அலங்காரங்களும் மிக மிக அழகு...



கோமதி அரசு said...

திருவெண்காட்டிலும் ஆடிப்பூர அம்மனுக்கு கொடியேறி 10 நாள் திருவிழா நடக்கும்.
சொர்ணாம்பாள் ஆடிப்பூர உற்சவ படங்கள் அழகு.
நேரில் தரிசனம் செய்த உணர்வு.
நன்றி.

S.Muruganandam said...

மிக்க நன்றி அனுராதா அம்மா.

S.Muruganandam said...

தகவலுக்கு மிக்க நன்றி கோமதி அரசு அம்மா.