Wednesday, December 27, 2017

சுவாமியே சரணம் ஐயப்பா -16

கரிமலை ஏற்றம் கடினம்!  கடினம்! . . . 

கரிமலை ஏற்றம் கடினம் கடினம் 
கருணைக் கடலும் துணை வருவான்
கரிமலை இறக்கம் கண்டவுடனே
திருநதி பம்பை அடைந்திடுவார்.

சுவாமியே ஐயப்போ ஐயப்போ சுவாமியே

இப்பதிவுகளையும்  காணலாமே   :        4  5  6  7  8  9  10  11  12  13  14  15  17   18   19   20   21 


கரிமலை ஏற்றம் கடினம் கடினம் என்று ஏன் பாடினார்கள் தெரியுமா? . பெருவழிப்பாதையில் உயரமான மலை மட்டுமல்ல மிகவும்  செங்குத்தாகவும் இம்மலை அமைந்துள்ளது.   எனவே மலையேற்றம் மிகவும் கடினமாகவே உள்ளது. மெல்ல மெல்லத்தான் ஏற வேண்தும். கருணைக்கடவுளான ஐயப்பனும் உடன் வருகின்றார். கரி மலை ஏற்றம் ஐந்து கி.மீ தூரம் இறக்கமும் அதே தூரம்தான்.


அலகு குத்திக்கொண்டு வரும் ஒரு பக்தர் 

இங்குள்ள மலையின் மண் கருப்பு நிறத்தில் இருக்கும். இதனால், இந்த மலைக்கு "கருமலை' என்ற பெயர் இருந்து "கரிமலை' என மாறிவிட்டது என்பர். இம்மலையில் மூலிகைச் செடிகள் அதிகம் இருப்பதால், இம்மலையைக் கடந்தவுடனேயே தீராத நோய்களும் தீர்ந்து விடும் என்பது ஐதீகம்




                                                                                  பிரம்மாண்ட மரங்கள்   



நமது பிரம்மச்சரிய விரதத்தை சோதிக்கின்ற மலை கரிமலையாகும். கரிமலையில் ஏறும் போது நாம் செய்த தவறுகள் எல்லாம் தானாகவே வெளி வரும் ஐயனின் அருளினால் மட்டுமே கடினமான் இம்மலையை ஏற மற்றும் இறங்க முடியும். எந்த விக்னங்களும் வராமல் இருக்க கணபதியை வேண்டிக்கொண்டு மலையேற வேண்டும். கரிமலையில் சரண கோஷத்தைத் தவிர மற்ற எந்த தேவையில்லாத பேச்சுக்களையும் பேசக்கூடாது.  


அடர்ந்த கானகம் 


அடர்ந்த கானகம் இடையே ஒற்றை வழிப்பாதைமுப்புரி நூல் போல மூன்று பிரிவாக உள்ளது பாதைஉயர் பகுதி பாறைகள் அதிகம்  குதித்து குதித்து செல்லும் வகையில் உள்ளது. அதில் இளைஞர்கள் செல்ல ஏற்றது.  கீழ்ப்பகுதியில் நடக்கும் போது சிறிது தவறினால்  கரணம் தப்பினால் மரணம் என்பது போல கிடு கிடு பள்ளத்தில் மரங்களுக்குக்கிடையில் விழ வேண்டியதான் எனவே அதில் செல்லாமல்  நடுவில் செல்வது உத்தமம்.  இம்மலையில் பாறைகளில் அதிகம் ஏறிச்செல்லவேண்டும் மேலும் பல சுவாமிகள் தங்களை முந்திச் செல்ல முயல்வார்கள்அவர்களுக்கு பாதை விட்டு விலகி நிற்கும் போதும் மலையின் பக்கம் நிற்பது நல்லதுகரிமலையேற்றத்திற்கு சுமார் 3 மணி நேரம்  ஆகும்.


              
                                                   வழியிலெல்லாம் வேர்கள் தடுக்குகின்றன... 

உச்சியை நெருங்கும் சமயத்தில் பல பக்தர்கள் மலை ஏறி வரும் சுவாமிகளுக்கு விசிறி வீசுகின்றனர், குளுகோஸ் அளிக்கின்றனர். கரி மலை உச்சியில்  கரிமலை நாதர் மற்றும் கரிமலை பகவதி எழுந்து அருள் பாலிக்கின்றனர். சுவாமி தனது திவ்ய அஸ்திரத்தினால் உருவாக்கிய கிணறும் உள்ளது.. ஐயப்பன் இங்குதான் உதயணன் என்ற கொள்ளைக்காரனை வென்றதாகவும் சொல்லப்ப்படுகின்றது.  அகில பாரத சேவா சங்கத்தினர் கரிமலை உச்சியிலும் அன்னதானம் செய்கின்றனர்அதிகமான விரிகள் உச்சியில் இல்லை என்பதால் சிறிது ஓய்வெடுத்துக் கொண்டு இறக்கத்தைத் தொடங்க வேண்டும் என்பதால் கரிவிலாந்தோடிலிருந்து இருள் நேரத்தில் புறப்படாமல் இருப்பது நல்லது. ஏனென்றால் கரிமலை இறக்கமும், ஏற்றம் போலவே அவ்வளவு கடினமானது.



கரி மலையேற்றம் கடினம் கடினம் சற்று ஓய்வெடுங்கள் என்று கூறும் கடைக்காரர் 


இறக்கத்தில் விரிகள் கிடையாது. இடை இடையே நீர் வாய்வதால் பல இடங்களில் வழுக்கும் பாறைகள்தடுக்கும் மர வேர்கள்பெரிய பெரிய பாறைகள் அனைத்தையும் கவனித்துக்கொண்ட செங்குத்தான  மலையில் இறங்க வேண்டும்மேலும் இரவு நேரத்தில் பாதை மாறி விட்டால் கானகத்திற்குள் மாட்டிக்கொள்ள வேண்டியிருக்கும்.  ஆகவே இரவு நேரங்களில் மலையேற வேண்டும் அதுவும் குறிப்பாக கரிமலை ஏற வேண்டாம்.



கரிமலை மஞ்சள் பொடி  கோட்டை நாயகி
வனதுர்க்கை 


கரிமலை இறக்கம் 


இவ்வனம் விலங்குகளுக்கு உரியது. அவைகளுக்கு துன்பம் தரக்கூடாது என்பதற்காகவும் இரவில் பயணம் செய்யாதிருப்பது ல்லது.  இது வரை பெரிய பாதையில் பக்தர்களுக்கு வன விலங்குகளால் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாமல் இருக்க காரணம், பெரிய பாதையை திறப்பதற்கு முன்னால் செய்யப்படும் பூசையாகும். அது போலவே வனதேவதைகளுக்கும் பூசை டைபெறுகின்றது.  மகரஜோதிக்குப்பின் மாளிகைப்புரத்தம்மனின் சன்னதியில்  வன தேவதைகளுக்காஅ சிறப்பு குருதி பூசையும்  டைபெறுகின்றது.  இங்குள்ளவர்கள் யானைகளை ஐயப்பன் வாகனமாக கருதி, அவைகள் பக்தர்கள் வரும் காலத்தில் வந்து துன்பம் தராமல் இருந்ததற்காக  விரியை காலி செய்து கொண்டு செல்லும் போது தர்பூசணிப்பழம், வாழைப்பழ சீப்புகள் ஆகியவற்றை யானைகளுக்காக விட்டு செல்கின்றனர்


கரிமலையின் அடிவாரத்தை அடைந்தவுடன் பம்பா சமவெளியை அடைகின்றோம். சிறிய யானை வட்டமும், பெரியானை வட்டமும் அடுத்தடுத்து அமைந்துள்ளன. பெருவழியில் செல்லும் சுவாமிகள் இங்கு தங்கியே பின்னர் சபரி மலை செல்கின்றனர். பம்பா நதியின் பெருமையை அடுத்த பதிவில் காணலாம் அன்பர்களே. 

குருசாமி திருவடிகளே சரணம் 

சுவாமியே சரணம் பொன் ஐயப்பா


ஐயப்ப தரிசனம் தொடரும் . . . . . . . .


2 comments:

தனிமரம் said...

கரிமலை ஏற்றம் என்றும் கடினம் .

S.Muruganandam said...

சுவாமியே சரணம் ஐயப்பா.

ஏற்றம் மட்டுமல்ல இறக்கமும்தான். செங்குத்தான மலை.