Sunday, October 15, 2017

நவ துவாரகை யாத்திரை - 26

புஷ்கர்

இத்தொடரின்  மற்ற  பதிவுகள் 

   1   2   3   4    5     6    7    8    9    10    11    12  


13    14   15   16   17   18   19   20    21   22   23   24   25   27   28


கங்ரோலியிலிருந்து அடுத்து அடியோங்கள் புஷ்கர் என்னும் தலத்திற்கு பயணம் செய்தோம். இத்தலத்தின் சிறப்புகளாவன.
“நீர் வானம் மண் எரிகலனாய் நின்ற நெடுமால்“ என்றபடி பெருமாள் அனைத்துமாய் நிற்கின்றார், இத்தலத்தில் அவர் தீர்த்தரூபியாய் அருள் பாலிக்கின்றார்.  அப்புனித புஷ்கரணி இத்தலத்தின் மையத்தில் அமைந்துள்ளது.
புஷ்கரம்  பெருமாள் தானாகவே எழுந்தருளிய  ஸ்வயம்வக்த ஸ்தலங்களுள்   ஒன்றுமற்ற தலங்கள்  ஸ்ரீரங்கம்,  ஸ்ரீமுஷ்ணம்,  திருப்பதி,  வானமாமலை,  சாளக்கிராமம்,  நைமிசாரண்யம்,  பத்ரிகாச்ரமம்   ஆகியவை ஆகும்
புஷ்கர் ஏரி

பிரம்மாவிற்கு தனிக்கோவில் இத்தலத்தில் அமைந்துள்ளது.
கார்த்திகை பௌர்ணமியை ஒட்டி ஐந்து நாட்கள் திருவிழா டைபெறுகின்றது அப்போது டைபெறும் கால்டை சந்தை உலக  பிரசித்தம் பெற்றது.
இராமபிரான் தசதரதருக்கு பித்ரு காரியம் செய்த தலம், காந்தியடிகள், இந்திரா காந்தி ஆகியோர்களின் அஸ்தி கரைக்கப்பட்ட தலம். வாருங்கள்  அன்பர்களே இவ்வளவு சிறப்பு பெற்ற  புஷ்கரில் நீராடி பிரம்மனை தரிசிக்கலாம்.



இராஜஸ்தான் மாநிலத்தில் அஜ்மீர் மாவட்டத்தில்,  அஜ்மீரிலிருருந்து      11 கி.மீதொலைவில் பாலைவனத்தின்  விளிம்பில் உள்ள அமைதியான நகர் புஷ்கர்.   நாகமலை அஜ்மீருக்கும் புஷ்கருக்கும் இடையே இயற்கை எல்லையாக
உள்ளது.


இத்தலத்தின் மையத்தில் உள்ள புஷ்கர் ஏரி உருவானதற்கான ஒரு சுவையான கதை உள்ளது அது என்னவென்று காணலாமா அன்பர்களே.  பூவுலகில் ஒரு  யாகம் செய்வதற்கு உரிய இடம் ஒன்றைத் தேடி பிரம்மா அலைந்தபோதுஓரிடத்தில் சிந்தனையில் மூழ்கியிருந்தாராம் ப்போது அவருடைய கரங்களில் இருந்து ஒரு தாமரை மலர் தரையில் விழுந்ததும்மூன்று இடங்களில் நீரூற்று பீறிட்டது. புஷ்கரம் எனில் தாமரை என்றும் பொருள் உண்டுபூமி பிளந்து மூன்று இடங்களில் ஜேஷ்ட புஷ்கரம்மத்ய புஷ்கரம்கனிஷ்ட புஷ்கரம் என உண்டாகஅவற்றில் பிரம்மாவிஷ்ணுசிவன் உறைவதாகக் கூறப்படுகிறது அவற்றில் ஒன்று தான் பிரம்மா வேள்வி செய்த புஷ்கர். எனவே தாமரை விழுந்த்தால் உருவான  இத்தடாகம் புஷ்கர் என்றழைக்கப்படுகின்றது.


மண்ணார்நீர்எரிகால் மஞ்சுலாவும்ஆகாசமுமாம்
புண்ணாராக்கைதன்னுள் புலம்பித்தளர்ந்து எய்த்தொழிந்தேன்
விண்ணார்நீள்சிகர விரையார்திருவேங்!கடவா
அண்ணா! வந்தடைந்தேன் அடியேனை ஆட்கொண்டருளே. (பெ.தி 1-9-7)

என்றபடி தீர்த்த நாராயணனாக எம்பெருமான் அருள் பாலிக்கும்  இந்த புஷ்கர்  ஏரியில் கார்த்திகை மாதம் சுக்ல பட்சத்தில் மூழ்கிவராக மூர்த்தியை தரிசித்தால் முக்தி நிச்சயம்நூறு வருடங்கள் தவம் செய்த பலன் கிட்டும் என்பது ஐதீகம்.  புனிதமாக‌க் கருத‌ப்படு‌ம் புஷ்க‌ர் ஏரியில் 52 படித்துறைகள் உள்ளனஇங்கு பக்தர்கள் எந்த நேரமும் புனித நீராடுகின்றனர்.




அடியோங்கள் முதலில் புஷ்கர் ஏரிக்குச் சென்றோம். உடனே பண்டாக்கள் எங்களை சூழ்ந்து கொண்டனர். புஷ்கரின்  கரையில் பித்ரு கடன் செய்வது மிகவும் சிறப்பு  என்பதால் அக்கடமையை முதலில் முடித்தோம். பின்பு   புஷ்கரணியில் ஆனந்தமாக நீராடினோம். பின்னர் பிரம்மாவை தரிசிக்க சென்றோம்.    

இவ்வூரில் மட்டும் பிரம்மாவின் ஆலயம் அமைந்திருப்பதற்கான காரணம் என்ன என்பதற்கும் ஒரு கதை உள்ளது அது என்ன என்று காணலாமா அன்பர்களே.  புஷ்கரின் கரையில் யாகம் செய்ய  அமர்ந்த பிரம்ம தேவர் யாகத்தில் உடன் அமர  சாவித்திரியை(சரஸ்வதி) அழைத்து வர நாரதரை அனுப்புகின்றார். நாரதர் செய்த கலகத்தால் குறிப்பிட்ட நேரத்திற்கு சாவித்திரி வராமல் போக பிரம்மன் காயத்ரி என்ற குஜ்ஜர் இனப் (இடைக்குல)பெண்ணை திருமணம் புரிந்து கொண்டு யாகத்தை துவங்குகின்றார். தாமதமாக வந்து சேர்ந்த சாவித்திரி சாபம் கொடுக்க பிரம்மாவிற்கு வேறெங்கும் கோவில் இல்லாமல் போனது. இக்கோவிலிலும் பூஜைகள் கிடையாது.


முப்புறமும் மலைகள் சூழ்ந்த புஷ்கரில் கோயில்கள் ஏராளம்இவற்றில் முக்கியமானது பிரம்மா ஆலயம்நாட்டில் பிரம்மாவுக்குள்ள ஒரே கோயில் இதுதான் என்பது  இதன் ற்றொரு ‌சிறப்பு. இ‌ந்த கோ‌யி‌ல் செந்நிறத்தில் கூரான கோபுர‌த்தை‌க் கொ‌ண்டது. உயரத்தில் அமைந்துள்ளது ஆலயம் பல படிகள் ஏறிச் செல்ல வேண்டும். தலைவாசலில் பிரம்மாவின் வாகனமான அன்னம் அழகிய சிலையாகக் காட்சி தருகிறது. நான்முகன் அருகிலேயே காயத்ரி தேவி வீற்றிருக்கிறாள்ஆலய முன்முக மண்டபம் சலவைக்கல்லால் ஆனதுபிரார்த்தனை செய்து கொண்டு பக்தர்கள் பதித்து வைத்த வெள்ளி நாணயங்களை இம்மண்டபம் முழுவதும் காணலாம்தரையில் பதிக்கப்பட்ட இந்த நாணயங்கள் பக்தர்கள் கால்கள் பட்டு தேய்வது போல தங்களுக்கு ஏற்பட்ட இன்னல்களும் தேய்ந்து விடும் என்பது நம்பிக்கைபிரம்மாவை திவ்யமாக சேவித்தோம்.
பிரம்மாவின் முதல் மனைவி சாவித்திரிக்கு  ஒரு கோயில் இ‌ங்கு‌ள்ளது.  இது பிரம்மனின் கோயிலுக்குப் பின்னால் உள்ள மலையின் மீது அமை‌ந்து‌ள்ளதுகோ‌யிலு‌க்கு ப‌க்த‌ர்க‌ள் எ‌ளிதாக  ஏறிச் செல்லு‌ம் வகை‌யி‌ல் படிகள் அமை‌க்க‌ப்ப‌ட்டு உள்ளனமாபாதகங்களைத்      தீர்க்கும் அருட்சக்தியாக     அன்னை விளங்குகிறாள்கெளதம முனிவரால் சபிக்கப்பட்ட அகலிகை இவ்விடத்தில்தான் ராமபிரானால் சாபவிமோசனம் பெற்றாள்விஸ்வாமித்திரர் தவம் செய்த இந்த இடத்தில் அகத்தியரின் குகையும் உள்ளது.  கோயிலில் இருந்து ஏரியையும் சுற்றியுள்ள பாலைவனப் பரப்பையும் கா‌ண்பது  அனைவரது உ‌ள்ள‌த்தையு‌ம் கொ‌ள்ளை கொ‌ள்ளு‌ம் எழிலான  கா‌ட்‌சியாகு‌ம்.




பிரம்மா மற்றும் சாவித்திரி ஆலயம் மட்டுமல்லாமல் வராஹ மூர்த்தியின் ஆலயமும், தென்னிந்திய இராஜகோபுரம் மற்றும் கட்டிடகலை அமைப்பில் அமை‌ந்த ரங்ஜீ ஆலயம் (அரங்நாதர்) ஆகியவை புஷ்கரில் தரிசிக்க வேண்டிய ஆலயங்கள் ஆகும். அடியோங்களுக்கு வராஹர் ஆலயம் சென்று தரிசிக்கும் பாக்கியம் கிட்டியது.

அமைதி  தவழும் புஷ்கரில், அ‌க்டோப‌ர்-நவ‌ம்ப‌ர்  மாத‌த்‌தி‌ல்  வரு‌ம் கா‌ர்‌த்‌திகைப்  பெள‌ர்ண‌மி ‌உ‌ற்சவ‌ம்  வெகு ‌சிற‌ப்பாக  கொண்டாடப்படுகின்றது. தீபாவளியை அடுத்து பத்து நாட்கள் கழித்து ஐந்து நாட்கள் டக்கும் இ‌ந்  உற்சவ‌த்‌தி‌ன் போது இ‌ந்நகரமே ‌விழா‌க் கோல‌ம் பூணு‌கின்றது.   ஆதி காலத்தில் புஷ்கரில் எப்போது  நீராடினாலும் அவர்கள் சொர்க்கத்தை அடைந்தனராம், எனவே சொர்க்கம் நிறைந்து விட, யமன் வேண்ட  கார்த்திகை மாதம் வளர்பிறை ஐந்து நாட்கள் புஷ்கரில் நீராடுபவர்கள் மட்டுமே சொர்க்கம் அடைவர் என்று பிரம்மா மாற்றினார். எனவே அந்த ஐந்து நாட்கள் உற்சவம் கொண்டாடப்படுகின்றது. அச்சமயம் லட்சக்கணக்கான   ம‌க்க‌ளின் ஆரவாரம் அலைமோதும், பிரம்மாண்டமான கால் நடைசந்தையும் குறிப்பாக ஒட்டக சந்தை அப்போது சிறப்பாக  நடைபெறுகிறது.  இந்தப் புஷ்கர் மேளாவின் போது வண்ண வண்ணக் கடைகள் பு‌திதாக  தோ‌ன்று‌‌கி‌ன்றன. இவைதா‌ன்  உ‌ற்சவ‌த்‌தி‌ன் மு‌க்‌கிய நாயகமாக‌ ‌விள‌ங்கு‌கி‌ன்றன.   இசை ‌நிக‌ழ்‌ச்‌சிகளு‌ம்,  நடன ‌நிக‌ழ்‌ச்‌சிகளு‌ம் க‌ண்களையு‌ம், காதுகளையு‌ம் கு‌ளி‌ர்‌வி‌க்‌கி‌ன்றன. 

உ‌ற்சவ‌த்‌தி‌ன்  ம‌ற்றுமொரு  அ‌ம்சமாக  நாவில் நீர் ஊறச் செய்யும் பாரம்பரியத் திண்பண்டங்களும் விற்கப்படுகின்றன. வண்ண வண்ண உடைகள் அணிந்த கிராம மக்கள் விழாவுக்கு மெருகூட்டுகின்றனர். இந்த அழகான பின்னணியில், கவர்ச்சிகரமான பொம்மலாட்டம் உட்பட ஏராளமான கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. கால்நடைகள் ஏலம் விடப்படுவது, ஒட்டகப் பந்தயங்கள், குதிரை  ஆகியவை கொண்டாட்டங்களுக்குப் பொலிவூட்டுகின்றன. இக்கொண்டாடத்தைக் காண வெளிநாட்டினர் பலர் புஷ்கர் வருகின்றனர்.



இவ்வாறு அவனருளால் தரிசிக்க நினைத்த அனைத்து ஆலயங்களிலும்  அருமையான தரிசனம் பெற்றது மட்டுமல்லாமல் அதிகமான ஆலயங்களையும் தரிசித்த மகிழ்ச்சியில் அகமதாபாத் கிளம்பினோம். யாத்திரை முடித்து இல்லம் திரும்புகிறோம் என்ற மகிழ்ச்சியில் வண்டி ஓட்டுரும் உற்சாகமாக வண்டியை ஓட்டிக்கொண்டு வந்து அகமதாபாத் சேர்த்தார். அகமதாபாதில் இரண்டு நாட்களில் எந்தெந்த இடங்களைச் சுற்றிப் பார்த்தோம் என்று அறிந்து கொள்ள தொடர்ந்து வாருங்கள் அன்பர்களே

                                                                                 
                                                                                   நவ துவாரகை யாத்திரை தொடரும் . . . 

No comments: