Sunday, July 2, 2017

நவ துவாரகை யாத்திரை -9

 பேட் துவாரகை-1


இத்தொடரின்  மற்ற  பதிவுகள்  

   1   2   3    4    5    6    7    8   10   11   12   13 


  14   15   16   17   18   19   20    21   22  23  24    25    26   27   28



துவாரகாவிலிருந்து சற்று தூரத்தில் துவாரகா தீவு உள்ளது. படகில்தான் அங்கு செல்ல வேண்டும். முதலில் ஸ்ரீகிருஷ்ணன் ஆட்சி செய்த துவாரகா கடலில் மூழ்கிய சமயம் அவர் விருப்பப்படி கடலில் மூழ்காமல் எஞ்சியிருந்த பகுதிதான் இது. இங்கே அவரது அரண்மனை அப்படியே உள்ளது. துவாரகையில் ராஜ தர்பாரும் பேட்துவாரகையில் அந்தப்புரமும் இருந்ததாக ஐதீகம். இத்தீவில் குளிர்ச்சியாக ஸ்ரீகிருஷ்ணர் ருக்மணியுடன் தங்கி இருந்தாராம்.  முக்கிய துவாரகையும், பேட் துவாரகை இரண்டையும் சேர்ந்து துவாகாபுரி என்றழைக்கின்றனர். த்தீவுதுவாரகைக்கு அக்காலத்தில் சங்கோதரா மற்றும் ஸ்ரீதீர்த்தா என்றும் பெயர் இருந்தது.
படகுத்துறை ஓகா(Okha) என்ற இடத்தில் உள்ளது. துவாரகாவில் இருந்து அங்கு செல்ல ஆட்டோக்கள் உள்ளன.  தினமும் காலை 8:00 மணிக்கும்,  மதியமும் 2:00 மணிக்கும்  ஒரு பேருந்து துவாரகையிலிருந்து கிளம்பி  நாகேஸ்வர், கோபி தலாவ், பெட் துவாரகா, ருக்மணி துவாரகா அழைத்து செல்கின்றது, தனி வண்டி இல்லாதவர்கள் இவ்வசதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.


ஓகா படகுத்துறை 

ஓகா செல்லும் வழியில் பல தொழிற்சாலைகளைப் பார்த்தோம். ஓகாவில் கப்பல் படை மற்றும் கடலோரக் காவல் படையினரின் தளங்கள் உள. பாகிஸ்தான் எல்லை அருகில் என்பதால் கப்பற்படை தளங்களை பல இடங்களில் காணலாம். 1965 போரின் போது பாகிஸ்தான் இவ்வாலயத்தை அழிக்க முயன்றது. அவனருளால் அது முறியடிக்கப்பட்டது.  வழி நெடுக கொக்குகள், நாரைகள், நீர்ப்பறவைகள், வெளி நாட்டுப் பறவைகள் கூட்டம் கூட்டமாக நீர் நிறைந்  வயல்களில் அமர்ந்திருந்தன. குளிர் காலம் என்பதால் புலம் பெயர்ந்த பறவைகள் அதிகமாக இருந்தன. சைபீரியன் கொக்கு, வாத்துக்கள், நீர்க் காக்கைகள் என்று பல வித வர்ணங்களில் பறவைக் கூட்டங்கள் கண்ணுக்கு விருந்து. ஆங்காங்கே நீல்காய் (Nilgai) என்றழைக்கப்படும்  கடம்ப மான் கூட்டங்களையும் கண்ணுற்றோம்..
ஓகா படகுத்துறையிலிருந்து இயந்திரப் படகுகளில் தீவு துவாரகைக்கு பக்தர்களை அழைத்துச் செல்கின்றனர். செல்வதற்கு மட்டும் கட்டணம் வசூலிக்கின்றனர். வரும் போது எந்தப் படகில் வேண்டுமென்றாலும் திரும்பி வரலாம். அதிகமாக பயணிகளை ஏற்றிச் செல்கின்றனர். உயிர் பாதுகாப்பு கவசம் யாரும் அணிவதில்லை. ஓகாவிலிருந்து தீவு துவாரகை 32  கி.மீ தூரம் சுமார் அரை மணி நேரம் ஆகின்றது.




படகுகள் தயார் 


வழியில் நீர்ப்பறவைகள் (Sea Gulls) செய்யும் அட்டகாசங்களை இரசித்துக் கொண்டே சென்றோம். பலர் பொரி வாங்கி இப்பறவைகளுக்கு வீசுகின்றனர். அவை அப்படியே ந்தரத்தில் பறந்த வண்ணம் அவற்றை அலகால் கவ்விக்கொண்டு மேலே பறந்து விடுகின்றன.  கப்பல்கள் கட்டும் தொழிலும் இவ்விடம் சிறப்பாக டக்கின்றது என்பதை கவனித்தோம்.
பேட் துவாரகையை நெருங் நெருங்க துவாரகாதீஷனின் விமானத்தில் மேல் பறக்கும் கொடி வாருங்கள் வாருங்கள் என்று அழைப்பதை காண முடிந்தது. அரண்மனை கோட்டைச் சுவரும் கண்ணில் பட்டது.  படகில் இருந்து இறங்கி ஒரு பாலத்தின் மூலம் சுமார் ஒரு கி.மீ தூரம்  ந்து அல்லது ஆட்டோ மூலம் பேட் துவாரகை ஆலயத்தை அடையலாம். வழியெங்கும் மீனவர்கள் தங்களின்   வலைகளை காய வைத்திருக்கின்றனர். பாலம் பக்தர்களின் கூட்டத்தினால்  நிறைந்து வழிந்து கொண்டிருந்தது. கோட்டையினுள்ளே செல்பேசிகள், புகைப்பட கருவிகள்,  முதலிய மின்னணுக் கருவிகளை அனுமதிப்பதில்லை என்பதால் கோயிலைச் சுற்றியுள்ள கடைகளில் அவற்றை பாதுகாக்க கொடுத்துவிட்டு செல்ல வேண்டும்.



அரபிக் கடலில் 
ங்குள்ள துவாரகதீசன் ருக்மணி உருவாக்கிய மூர்த்தி, பக்த மீராபாய் ஸ்ரீகிருஷ்ணருடன் கலந்த மூர்த்தி என்று ஐதீகம். இவரும்  நின்ற நிலையில் சேவை சாதிக்கின்றார்இவருக்கு கேசவ்ராய் ஜீ என்று திருநாமம். மையமாக இவர் சன்னதி இருக்க இரு புறமும் கல்யாணராய் ஜீ மற்றும் புருஷோத்தமன் சன்னதி ஆகிய மூவர் சன்னதிகளும் ஒரு பக்கம் உள்ளன. கேசவ் ராய்ஜீக்கு எதிரே தேவகி சன்னதி. மேலும் ருக்மிணி தவிர வரது மற்ற மனைவியர்களின் சன்னதிகள், திரிவிக்கிரமமூர்த்தி மற்றும் லக்ஷ்மி நாராயணர், ஸ்ரீகிருஷ்ணரின் குலதெய்வம் அம்பாஜி  சன்னதிகள் உள்ளன. அடியோங்கள் சென்ற சமயம் ஆரத்தி சமயம் என்பதால் கூட்டம் அதிகமாக இருந்தது. துவாரகையில் டைபெறுவது போலவே இங்கும் பூசைகள் டைபெறுகின்றன.
ந்தனைந்த மெல் விரலாள் பாவை தன் காரணத்தால்
வெந்திறலேழும் வென்ற வேந்தன் விரி புகழ் சேர்
நந்தன் மகனாக  வரும் ம்பியை . . . ங்கமா கடல் வண்ணனை, அஞ்சன குன்றம் நின்றதொப்பானை   அருமையான அலங்காரத்தில் சேவித்தோம்.
குசேலர் ஸ்ரீகிருஷ்ணரை காண வந்தபோது அமர்ந்த இருக்கை மஹாபிரபுவின் இருக்கை என்றழைக்கப்படுகின்றது. கண்ணனுக்காக குசேலர் அவல் பரிசாக (பேன்ட்) கொண்டு வந்த காரணத்தால் இத்தீவு பேன்ட் துவாரகை என்றழைக்கப்படுகின்றது என்பாரும் உண்டு.



கடற்பறவை
புதிதாக கல்லினால் ஒரு சுற்றுச்சுவர் கட்டியுள்ளனர். அதில் கண்ணனின் லீலைகள் அனைத்தையும் எழில் சிற்பமாக செதுக்கியுள்ளனர். கண்ணன் கேசவன் ம்பி சிறைச்சாலையில் பிறந்தது, சங்கு சக்கரங்களுடன் தேவகி-வசுதேவருக்கு காட்சி கொடுத்தது, ஆதிசேஷன் குடை பிடிக்க யமுனையைக் கடந்தது, கோகுலத்தில்  ஆய்ச்சி பாலையுண்டு, மண்ணையுண்டு பின் பேய்ச்சி பாலையுண்டு மாயம் காட்டியது, தாயே யசோதா உந்தன் மாயன் மணிவண்ணன் செய்யும்  குறும்புகளைக் கேளாய் என்று கோபியர்கள் தீம்பு கூறியது, யசோதை உரலில்   கயிற்றால் கட்ட  அவள் அன்பிற்கு கட்டுப்பட்டு தாமோதரனானது, அவள் பிள்ளை வாயுளே அண்டமேழையும் கண்டது, கள்ளச் சகடம் உதைத்தது,  ஆயர் மகளுக்காக மருதிறுத்தது, புள்ளின் வாய் கீண்டியது, வெண்ணெய் திருடி உண்டது, யசோதை நுணுக்கிய மஞ்சளால் வாய் வழித்து கண்ணனை நீராட்டியது, பரியனாகி வந்த அவணனுடல் கீண்டியது, கோலால் நிரை மேய்த்தது, குன்றால் குளிர் மலை காத்தது, குடக்கூத்தாடியது, வல்லானை கொம்பை முறித்துக் கொன்றது, கோபியர்களின் கூறை கவர்ந்தது, பல்லவம் திகழ் பூங்கடம்பேறி அக்காளியன் பணவரங்கில் ஒல்லை  வந்திறப் பாய்ந்து அருஞ்செய்தது, கோபியருடன் ராச லீலை செய்தது, கன்றதனால் விளவெறிந்து கனியுதிர்த்தது என்று அனைத்து லீலைகளையும் காணலாம். பூதகியின்  ங்கள்,  யசோதை கட்டிய கயிற்றின் தழும்பு,  என்று பார்த்து பார்த்து செதுக்கியிருப்பது வியக்க வைக்கின்றது. ஒவ்வொரு லீலையையும் பெரியாழ்வாரும், ஆண்டாள் நாச்சியாரும் எவ்வாறெல்லாம் பாடியுள்ளனர் என்று அவர்களின்  பாசுரங்களை  நினைவு கூர்ந்தோம். உப்பரிகையில் அமைந்துள்ள ஜன்னல்களில் அருமையான பூ வேலைப்பாடுகள் இவ்வூர் சிற்பிகளின் கை வண்ணத்திற்கு ஒரு சிறந்த உதாரணம். இவ்வாலயத்தில் தினமும் பகல் 11 மணியிலிருந்து மதியம் 2மணி வரை அன்னதானம் டைபெறுகின்றது.



பேட் துவாரகை நோக்கி 

இத்தீவு துவாரகையில்தான் கிருஷ்ணர் தனது 16000 மனைவியருடன் தங்கியிருந்தார். பட்டத்து இராணிகளுக்கு தனித் தனி அரண்மனைகள் இருந்தன. எனவே ருக்மணியின் ஆலயம் தனியாக அவளது அரண்மணையில் துவாரகாதீசனின் ஆலயத்திற்கு அருகில் உள்ளது. சிரித்த முகத்துடன் நின்ற நிலையில் காட்சியளிக்கிறார் ருக்மிணித்தாயார்செல்வத் திருமகளை வணங்கி அனைவருக்கும் ஆரோக்கியமும், ஐஸ்வர்யமும் அளிக்குமாறு வேண்டிக்கொண்டோம்.
கோமதி நதி கடலில் சங்கமிக்கும் இடத்தில் துவாரகா கற்கள் கிடைக்கின்றனஅவற்றின் மேல்பாகம் தேன் அடைபோல் இருக்கும்சில கற்களில் விஷ்ணுவின் சக்கரம் இருக்குமாம்இந்த கற்களில் நாராயண சின்னம் மற்றும் மகாலக்ஷ்மி சின்னம் பிரதீக் இருப்பதாக புராணங்கள் கூறுகின்றனஇந்த கற்களை எடுத்து வந்து பூஜிப்பவர்கள் மோட்சத்தை அடைகிறார்கள் என்பது ஐதீகம்.

வலைகளை காய வைக்கும்  மீனவர்கள்  



இங்கு  ஸ்ரீகிருஷ்ணர் ஆட்சி செய்த தர்ம சபையும் ஒரு மச்சாவதார பகவான் கோவிலும் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. துவாரகாவிலும்,  தீவு துவாரகாவிலும் ஆண்டு முழுவதும் எல்லா விழாக்களும் சிறப்பாக நடக்கின்றன. தினமும் இந்தியா முழுவதிலுமிருந்து ஏராளமான பக்தர்கள் வந்து துவாரகாதீசரையும் ருக்மிணி தாயாரையும் தரிசனம் செய்கின்றனர். சமயமிருந்தால் பேட்துவாரகையின் கடற்கரையின் அழகையும் அன்பர்கள் இரசிக்கலாம்.

                                                                         நவ துவாரகை யாத்திரை தொடரும் . . . .

No comments: