Thursday, March 16, 2017

மாசி மக தீர்த்தவாரி - 3

இத்தொடரின் மற்ற பதிவுகள் :   1   2   4   5  


மாசி மாதம் முழுமதியும் மக நட்சத்திரமும் இணைந்து வரும் நன்னாளில் மாசி கடலாட்டு, தீர்த்த வாரி, தீர்த்தம் கொடுத்தல், மாசி மகம் என்றெல்லாம் அழைக்கப்படும் இத்திருவிழா தமிழகமெங்கும் வெகு விமர்சையாக நடைபெறுகின்றது. கன்னியாகுமரி முதல் சென்னை வரை கடற்கரையோரம் அமைந்த திருக்கோவில்களின் அனைத்து உற்சவ மூர்த்திகளும் கடலுக்கு எழுந்தருளி தீர்த்தவாரி கண்டருளுகின்றனர். ஆற்றங்கரையில் அமைந்த திருக்கோவில்களின் மூர்த்திகள் ஆற்றுக்கு எழுந்தருளி தீர்த்தம் கொடுக்கின்றனர். மற்றும் பல் வேறு திருக்குளங்கள் முதலான நீர் நிலைகளில் மாசி மக தீர்த்தம் கொடுத்தல் சிறப்பாக நடைபெறுகின்றது. கும்பகோணத்தில் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு கொண்டாடப்படும் மஹாமகமும் இந்த மாசிமக விழாதான்.



பொற்கொடி அம்பாள் சமேத காரணீஸ்வரர் 


ஸ்வர்ண லதாம்பிகை என்றழைக்கப்படும் பொற்கொடி அம்மன் உடனுறை காரணீஸ்வரர். காரணம்+ஈஸ்வரர் = காரணீஸ்வரர்.  எல்லாவற்றுக்கும் காரணமான ஈஸ்வரர் என்பது. உலகில் நடக்கும் ஒவ்வோர் செயலுக்கும்  ஓர் காரணம் உண்டல்லவா? அத்தனை காரணத்திற்கும்   இறைவன் தான் காரணம் என்பதை உனர்த்தும் ஈஸ்வரன். குடும்ப உறவுகள் பிணி இன்றி நலமாக வாழ இந்த திருத்தலத்தில் தேங்காய் எண்ணை, நல்லெண்ணை மற்றும் விளக்கெண்ணை ஆகியவற்றை சம அளவில் கலந்து 6,12,18,24 ஆகிய அறு வரிசைவில் ஏற்றி இறைவனை வலம் வந்து வழி படுதல் நலம்.



கண்ணாடி தரிசனம் 

அஸ்திர தேவர் 

சுவாமி கடலாடல் 




********************

முத்து மாரியம்மன் 


 தீர்த்தவாரி அம்மன் பாலாபிஷேகம் 


******************


மலர் மங்கை இலக்குமி, பெருமாளை மணம் புரிய இங்கு இறைவனை நோக்கித் தவம் புரிந்ததால் இத்தலத்திற்கு திருவேட்டகம்என்ற திருநாமம். சுவாமிக்கு திருவேட்டீஸ்வரர்என்ற திருநாமம். லிங்க மூர்த்தியின் முடியின் மேற்புறம் ஒரு பிளவு காணப்படுகிறது.

இத்திருக்கோயிலில் தினமும் நடக்கும் முக்கியமானதொரு பூஜை ஸ்படிக லிங்க பூஜையாகும். இதனுடன் சொர்ணவேல், மஹாமேரு, மஹாகணபதி பூஜை, கோமாதா பூஜையும் சேர்ந்து நடைபெறுகிறது. இதனைக் கண்ணுறுவோர் வாழ்வில் உயர்நிலையையும், ஈசனின் பரிபூர்ண அருளையும் பெறுவர் என்பது நம்பிக்கை.

இத்தலம் திருக்காளத்திக்கு ஒப்பானது என்ற அசரீரி வாக்கிற்கு ஏற்ப, இத்தலத்திலும் காளத்தியில் செய்வது போன்றே ஜாதகத்தில் இராகு கேதுவினால் ஏற்படும் தோஷம் நீங்குவதாக நம்பிக்கை உள்ளதால் சிறப்புப் பரிகார பூஜை தினமும் செய்யப்படுகிறது. மகா மண்டபத்தின் மேற்கூரையில் ராகு, கேது, சந்திர, சூரியர்களுடன் புடைப்புச் சிற்பங்களாக உள்ளதே இதற்கு சாட்சி. 




இடப  வாகனத்தில் திருவேட்டீஸ்வரர்  


மாசி மக கடலாட்டு விழா கொண்டாட்டத்திற்காக சில ஐதீகங்கள் உள்ளன அவை என்னவென்று பார்ப்போமா? தில்லை சிற்றம்பலமாம் சிதம்பரத்திற்கு வடகிழக்கே , கிள்ளையில் கடற்கரையில் உள்ளது குய்ய தீர்த்தம். இருளில் வந்த குருவை வருணன் பகைவன் என்று எண்ணி அவர் மீது பாசத்தை விட அதனால் அவர் இறந்தார். வருணனை அக்கொலைக் குற்றம் பற்றியது எனவே ஒரு பிசாசு அவருடைய  காலையும் கையையும் கழுத்துடன் கட்டி கடலில் இட்டது. வருணனும் நீண்ட காலம் அங்கு கிடந்தான். அதானால் பூமியெங்கும் மழை இல்லாமல் போனதால் தேவர்கள் வேண்ட அவ்வாறு கிடந்த வருணனுக்கு விமோசனம் அளிக்க பரம கருணாமூர்த்தி சிவபெருமான் ஒரு மாசி மக நாளில் இத்துறைக்கு எழுந்தருளி அப்பாசக் கட்டு அற்றுப் போகும் படி அருள் புரிந்தார் எனவே இத்துறை "பாசமறுத்ததுறை" என்றும் பெயர் பெற்றது அன்று முதல் மாசி மக நாளன்று அனைத்து தெய்வ மூர்த்தங்களும் கடலுக்கு எழுந்தருளும் கடலாட்டு விழாவும் துவங்கியது.

                                                                                                                            மாசிமக தரிசனம்   தொடரும்  .................

No comments: