Friday, December 29, 2017

சுவாமியே சரணம் ஐயப்பா -17

பெரியானை வட்டம் 


இப்பதிவுகளையும்  காணலாமே   : 

       4  5  6  7  8  9  10  11  12  13  14  15  16  18   19   20   21





கரிமலை இறக்கம் கண்டவுடனே
திருநதி பம்பை அடைந்திடுவார்.

கங்கை நதிபோல் புண்ணிய நதியாம் 
பம்பையில் நீராடி 
சங்கரன் மகனைக் கும்பிடுவார் 
சங்கடம் இன்றி ஏறிடுவார் 

ஐயனின் சன்னிதானம் அமைந்துள்ள சபரிமலை ஏறுவதற்கு முன்னர் தங்கும் தாவளம் பம்பா பள்ளத்தாக்கில் உள்ள பெரியானை வட்டம் அல்லது சிறியானை வட்டம் ஆகும். கங்கை தி போல் புண்ணிய தியாம் பம்பையில் முதலில் நீராடுகின்றனர். பம்பை தி ஐயப்ப பக்தர்களுக்கு மிகவும் புண்ணிய தியாகும். ஐயப்பன் பாலனாக பந்தளராஜவிற்கு கிடைத்தது பம்பையின் கரையில்தான். மகிஷியை வதம் செய்ய ஐயன் காட்டிற்குள் வந்த போது தேவர்கள் அனைவரும் பொன்னம்பல மேட்டில் ஐயனுக்கு பொன் சிம்மாசனம் அமைத்து அதில் மணிகண்டனை அமர்த்தி அபிஷேகம் செய்வித்து பூசை செய்தனர் அந்த அபிஷேக தீர்த்தம் பம்பையில் ஓடியது. இன்றும் பம்பை பொன்னம்பல மேட்டில்தான் உருவாகின்றது.




இராமபிரான் பம்பையாற்றின் கரையில் தசரதருக்கு பித்ரு காரியம் செய்தார் என்பதால்  பல பக்தர்கள் தங்கள் முன்னோர்களுக்கு  தர்ப்பணம் அளித்து அஞ்சலி செலுத்துகின்றனர்.



பம்பா விளக்கு 

பம்பையின் கரையில் சக்தி பூசை செய்கின்றனர். அன்னதானப் பிரபுவான ஐயப்பன் அன்னதானத்தில் இந் பம்பா சதய விருந்தில் ஏதோ ஒரு ரூபத்தில் வந்து கலந்து கொள்கிறார் என்பது ஐதீகம். எனவே பல பக்தர் குழாங்கள் பம்பையின் கரையில் தங்கி  அன்னதானம் செய்கின்றனர். கன்னி சாமிகளுக்கு ஒரு அருமையான பாடம் இங்கு கிடைக்கின்றது. ஐயப்பன் தன் வலதிருக்கரத்தினால் காட்டும் முத்திரை அன்று சனகாதியர்களுக்கு மௌன குருவாக சிவபெருமான் தக்ஷிணாமூர்த்தியாக காட்டிய சின்முத்திரை ஆகும். ஜீவான்மாகிய நாம் பரமாத்வாகிய இறைவனுடன் ஒன்ற வேண்டுமென்றால்  விட வேண்டியவை மூன்று மலங்கள், ஆணவம், கன்மம், மாயை என்ற மூன்றையும் விட வேண்டும். எனவே அடியார்கள் உண்ட இலையில் படுத்து உருளும் வழக்கம் முன்பு இருந்தது, இன்று இலைகளை தலையில் சுமந்து சென்று பம்பையில் விட்டுவிட்டு வருகின்றனர். இதனால் தான் என்ற அகங்காரத்தையும், தனது என்ற மமகாரத்தையும் விட்டொழிக்கின்றனர். மேலும் ஸ்தூல,  சூஷ்ம, காரண தேகாபிமானத்தையும் ஒழித்துக் கட்டுகின்றனர்.


பம்பையில் புனித நீராடல்



இத்தாவளத்தில் தங்குவதற்கேற்ற பல விரிகள் உள்ளன. குளிப்பதற்கும்,  மல ஜலம் கழிப்பதற்கேற்ற  வசதி மற்றும் மூலிகை குடிநீர் வசதி, மற்றும் அன்னதானம் ந்து கொண்டிருப்பதால் உணவிற்கும் பஞ்சமில்லை எனவே பெருவழியில் வரும் அனைத்து பக்தர்களும் இங்கு தங்கிச் செல்கின்றனர்.

பெரியானை வட்டத்தில் தங்கி இருக்கும் போது கன்னி சாமிகள் 108  அடுப்புகளில் சாம்பல் எடுத்து வருகின்றனர். பின்னர் அதை வஸ்திரகாயம் செய்து  அதை பம்பா பஸ்மம் என்று பயன்படுத்துகின்றனர். 

பம்பையின் கரையில் தங்கி இருக்கும் போது கன்னி சுவாமிகள் பம்பா விளக்கும் ஏற்றுகின்றனர். மூங்கில் அல்லது குருத்தோலைகளால் ஒரு மிதக்கும் தேர் போன்ற அமைப்பில் ஒரு சிறு தோணி செய்து அதை வண்ண வண்ண  காகிதங்களைக் கொண்டு அலங்கரித்து அதில் விளக்கேற்றி இரவில் பம்பையில் மிதக்க விடுகின்றனர். மகர ஜோதிக்கு முதல் நாள்  சிறப்பாக நூற்றுக்கணக்கான பம்பா விளக்குகள்  ஏற்றப்படுகின்றன. அதைக் காண்பதே  ஒரு பெரிய பாக்கியம்.




சிறப்பு தரிசன  சீட்டு  வழங்கும் இட்ம் 



பம்பைக் கரையில் 



பெரியானை வட்டத்தில் தங்கும் போது அடுத்து மலையேறுவதற்கான ஓய்வும் கிடைக்கின்றது அடுத்து ஐயனை தரிசனம் செய்வதற்கு முன் பம்பா கண்பதியை தரிசிக்கலாம் அன்பர்களே. 
குருசாமி திருவடிகளே சரணம் 

சுவாமியே சரணம் பொன் ஐயப்பா


ஐயப்ப தரிசனம் தொடரும் . . . . . . . .

Wednesday, December 27, 2017

சுவாமியே சரணம் ஐயப்பா -16

கரிமலை ஏற்றம் கடினம்!  கடினம்! . . . 

கரிமலை ஏற்றம் கடினம் கடினம் 
கருணைக் கடலும் துணை வருவான்
கரிமலை இறக்கம் கண்டவுடனே
திருநதி பம்பை அடைந்திடுவார்.

சுவாமியே ஐயப்போ ஐயப்போ சுவாமியே

இப்பதிவுகளையும்  காணலாமே   :        4  5  6  7  8  9  10  11  12  13  14  15  17   18   19   20   21 


கரிமலை ஏற்றம் கடினம் கடினம் என்று ஏன் பாடினார்கள் தெரியுமா? . பெருவழிப்பாதையில் உயரமான மலை மட்டுமல்ல மிகவும்  செங்குத்தாகவும் இம்மலை அமைந்துள்ளது.   எனவே மலையேற்றம் மிகவும் கடினமாகவே உள்ளது. மெல்ல மெல்லத்தான் ஏற வேண்தும். கருணைக்கடவுளான ஐயப்பனும் உடன் வருகின்றார். கரி மலை ஏற்றம் ஐந்து கி.மீ தூரம் இறக்கமும் அதே தூரம்தான்.


அலகு குத்திக்கொண்டு வரும் ஒரு பக்தர் 

இங்குள்ள மலையின் மண் கருப்பு நிறத்தில் இருக்கும். இதனால், இந்த மலைக்கு "கருமலை' என்ற பெயர் இருந்து "கரிமலை' என மாறிவிட்டது என்பர். இம்மலையில் மூலிகைச் செடிகள் அதிகம் இருப்பதால், இம்மலையைக் கடந்தவுடனேயே தீராத நோய்களும் தீர்ந்து விடும் என்பது ஐதீகம்




                                                                                  பிரம்மாண்ட மரங்கள்   



நமது பிரம்மச்சரிய விரதத்தை சோதிக்கின்ற மலை கரிமலையாகும். கரிமலையில் ஏறும் போது நாம் செய்த தவறுகள் எல்லாம் தானாகவே வெளி வரும் ஐயனின் அருளினால் மட்டுமே கடினமான் இம்மலையை ஏற மற்றும் இறங்க முடியும். எந்த விக்னங்களும் வராமல் இருக்க கணபதியை வேண்டிக்கொண்டு மலையேற வேண்டும். கரிமலையில் சரண கோஷத்தைத் தவிர மற்ற எந்த தேவையில்லாத பேச்சுக்களையும் பேசக்கூடாது.  


அடர்ந்த கானகம் 


அடர்ந்த கானகம் இடையே ஒற்றை வழிப்பாதைமுப்புரி நூல் போல மூன்று பிரிவாக உள்ளது பாதைஉயர் பகுதி பாறைகள் அதிகம்  குதித்து குதித்து செல்லும் வகையில் உள்ளது. அதில் இளைஞர்கள் செல்ல ஏற்றது.  கீழ்ப்பகுதியில் நடக்கும் போது சிறிது தவறினால்  கரணம் தப்பினால் மரணம் என்பது போல கிடு கிடு பள்ளத்தில் மரங்களுக்குக்கிடையில் விழ வேண்டியதான் எனவே அதில் செல்லாமல்  நடுவில் செல்வது உத்தமம்.  இம்மலையில் பாறைகளில் அதிகம் ஏறிச்செல்லவேண்டும் மேலும் பல சுவாமிகள் தங்களை முந்திச் செல்ல முயல்வார்கள்அவர்களுக்கு பாதை விட்டு விலகி நிற்கும் போதும் மலையின் பக்கம் நிற்பது நல்லதுகரிமலையேற்றத்திற்கு சுமார் 3 மணி நேரம்  ஆகும்.


              
                                                   வழியிலெல்லாம் வேர்கள் தடுக்குகின்றன... 

உச்சியை நெருங்கும் சமயத்தில் பல பக்தர்கள் மலை ஏறி வரும் சுவாமிகளுக்கு விசிறி வீசுகின்றனர், குளுகோஸ் அளிக்கின்றனர். கரி மலை உச்சியில்  கரிமலை நாதர் மற்றும் கரிமலை பகவதி எழுந்து அருள் பாலிக்கின்றனர். சுவாமி தனது திவ்ய அஸ்திரத்தினால் உருவாக்கிய கிணறும் உள்ளது.. ஐயப்பன் இங்குதான் உதயணன் என்ற கொள்ளைக்காரனை வென்றதாகவும் சொல்லப்ப்படுகின்றது.  அகில பாரத சேவா சங்கத்தினர் கரிமலை உச்சியிலும் அன்னதானம் செய்கின்றனர்அதிகமான விரிகள் உச்சியில் இல்லை என்பதால் சிறிது ஓய்வெடுத்துக் கொண்டு இறக்கத்தைத் தொடங்க வேண்டும் என்பதால் கரிவிலாந்தோடிலிருந்து இருள் நேரத்தில் புறப்படாமல் இருப்பது நல்லது. ஏனென்றால் கரிமலை இறக்கமும், ஏற்றம் போலவே அவ்வளவு கடினமானது.



கரி மலையேற்றம் கடினம் கடினம் சற்று ஓய்வெடுங்கள் என்று கூறும் கடைக்காரர் 


இறக்கத்தில் விரிகள் கிடையாது. இடை இடையே நீர் வாய்வதால் பல இடங்களில் வழுக்கும் பாறைகள்தடுக்கும் மர வேர்கள்பெரிய பெரிய பாறைகள் அனைத்தையும் கவனித்துக்கொண்ட செங்குத்தான  மலையில் இறங்க வேண்டும்மேலும் இரவு நேரத்தில் பாதை மாறி விட்டால் கானகத்திற்குள் மாட்டிக்கொள்ள வேண்டியிருக்கும்.  ஆகவே இரவு நேரங்களில் மலையேற வேண்டும் அதுவும் குறிப்பாக கரிமலை ஏற வேண்டாம்.



கரிமலை மஞ்சள் பொடி  கோட்டை நாயகி
வனதுர்க்கை 


கரிமலை இறக்கம் 


இவ்வனம் விலங்குகளுக்கு உரியது. அவைகளுக்கு துன்பம் தரக்கூடாது என்பதற்காகவும் இரவில் பயணம் செய்யாதிருப்பது ல்லது.  இது வரை பெரிய பாதையில் பக்தர்களுக்கு வன விலங்குகளால் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாமல் இருக்க காரணம், பெரிய பாதையை திறப்பதற்கு முன்னால் செய்யப்படும் பூசையாகும். அது போலவே வனதேவதைகளுக்கும் பூசை டைபெறுகின்றது.  மகரஜோதிக்குப்பின் மாளிகைப்புரத்தம்மனின் சன்னதியில்  வன தேவதைகளுக்காஅ சிறப்பு குருதி பூசையும்  டைபெறுகின்றது.  இங்குள்ளவர்கள் யானைகளை ஐயப்பன் வாகனமாக கருதி, அவைகள் பக்தர்கள் வரும் காலத்தில் வந்து துன்பம் தராமல் இருந்ததற்காக  விரியை காலி செய்து கொண்டு செல்லும் போது தர்பூசணிப்பழம், வாழைப்பழ சீப்புகள் ஆகியவற்றை யானைகளுக்காக விட்டு செல்கின்றனர்


கரிமலையின் அடிவாரத்தை அடைந்தவுடன் பம்பா சமவெளியை அடைகின்றோம். சிறிய யானை வட்டமும், பெரியானை வட்டமும் அடுத்தடுத்து அமைந்துள்ளன. பெருவழியில் செல்லும் சுவாமிகள் இங்கு தங்கியே பின்னர் சபரி மலை செல்கின்றனர். பம்பா நதியின் பெருமையை அடுத்த பதிவில் காணலாம் அன்பர்களே. 

குருசாமி திருவடிகளே சரணம் 

சுவாமியே சரணம் பொன் ஐயப்பா


ஐயப்ப தரிசனம் தொடரும் . . . . . . . .


Sunday, December 24, 2017

சுவாமியே சரணம் ஐயப்பா -15

இஞ்சிப்பாறைக் கோட்டை  முதல்  கரிவிலாந்தோடு  வரை 


இப்பதிவுகளையும்  காணலாமே: 

         4   5   6   7   8   9   10  11   12   13   14   16   17   18   19   20   21



முக்குழி வரை இறக்கம்

இஞ்சிப்பாறைக் கோட்டையிலிருந்து  முக்குழி வரைக்கும் இறக்கம், அதற்குப்பின் கரிவலாந்தோடு வரை நீண்ட சமவெளி. இரு பக்கமும் விரிகள் உள்ளன.  நடந்து கொண்டே இருப்பதால்  வியர்க்கும் என்பதால் இடை இடையே  தண்ணீர், எலுமிச்சை சாறு, தர்ப்பூசணி, கப்ப கஞ்சி, மூலிகை நீர்  என்று சிறிது சிறிதாக அருந்திக்கொண்டு செல்வது நல்லது. 


வேர்கள் 

வழியெங்கும் வேர்கள் பாதங்களை பதம் பார்க்கின்றன. "சுவாமியே ஐயப்பா,  ஐயப்பா சுவாமியே,  பாத  பலம் தா தேக பலம் தா என்று சரண கோஷமிட்டுக்கொண்டே ஐயனை நெருங்குகிறோம்  மெல்ல மெல்ல மலை இறங்குகிறோம்,. முக்குழியை அடைய சுமார் பத்து செங்குத்தான படிகளில் இறங்க வேண்டும். 


முக்குழி 




முக்குழி மாரியம்மன் சன்னதி

இஞ்சிப்பாறைக்கோட்டையில் இருந்து இறங்கியவுடன் நாம் முக்குழி தீர்த்தத்தை அடைகின்றோம். இங்கு மாரியம்மன் சன்னதி அமைந்துள்ளது. அம்மனை அருமையான மஞ்சள் காப்பு அலங்காரத்தில் காக்கும் திரிச்சூலத்துடன் அம்மனை  சேவித்தோம், பொதுவாக பக்தர்கள் இங்கு சிறிது நேரம் தங்கி ஓய்வெடுத்துக்கொண்டு செல்கின்றார். இங்கு பக்தர்கள் தங்குவதற்கு ஏதுவாக தகர கூரைகள் அமைத்துள்ளனர். மூலிகைத் தண்ணீர் வழங்குகின்றனர்.

எருமேலி வழியாக வராமல், அரியக்குடி வழியாக வரும் பக்தர்கள் பெரிய பாதையில் வந்து சேருகின்ற இடம் முக்குழி ஆகும். 


முக்குழியில்  சிறிது நேரம் ஒய்வெடுத்துக்கொண்டு கிளம்பினால் அடுத்த தாவளம் கரிவிலாம்தோடு.  தூரம்  சுமார் 8 கி.மீ, அதிகமான தூரம்  என்பதால்  பாதை நீண்டு கொண்டே செல்கின்றது. அதுவும் இவ்வளவு தூரம் நடந்து அழுதை ஏறி  இறங்கிய பின் நடப்பதால் தூரம் அதிகமாக தோன்றுகிறது. அடர்ந்த காடு இரு பக்கமும் விரிகள் உள்ளன.  வேண்டுமென்றால் ஓய்வெடுத்துக்கொண்டு நடக்கலாம்.  கானகம் என்பதால் பறவைகளின் சத்தம், வண்டுகளின் ரீங்காரம், மணிகண்டன்மார்கள்  அணிந்திருக்கும் மணிகளின் விதவிதமான மணிகளின் ஓசை, சுவாமிகளின் சரண கோஷம் ஆகிய ஒரு கலவை ஒலியினை இரசித்துக்கொண்டே  மெல்ல மெல்ல நடக்கிறோம்.  இடை இடையே  பல சிறு ஒடைகளைக் கடந்து செல்கின்றோம். 


வெள்ளைச் சேட்டன் சத்திரம், புதுச்சேரி   தாவளம் என்று பல இடங்கள்,  நான்கைந்து ஏற்ற இறக்கங்களுக்குப்பின் கரிவிலாந்தோட்டை அடைகின்றோம். ஏற்றத்தில் மூச்சிரைக்கும், இறக்கத்தில் முழங்கால் வலிக்கும், மெல்ல மெல்ல பார்த்து பார்த்துதான் இறங்க  வேண்டும். கரி என்றால் யானை, கரி மலை என்பது  யானைகள் நிறைந்த மலை என்பது பொருள் இம்மலையின் ஒரு புறம் பம்பையாறு மறுபுறம் கரிவிலாந்தோடு என்னும் இவ்வாய்க்கால் அமைந்துள்ளது. யானைகள் வந்து நீர் அருந்தும் வாய்க்கால் என்பதால் இப்பெயர். இந்நீரில் நீராடுவது சிறப்பு.மேலும் கரி மலை ஏற்றத்திற்கு முன் ஓய்வும் தேவை என்பதால்  பக்தர்கள் இங்கு தங்கிச் செல்கின்றனர்.  இத்தோட்டின் குறுக்கே பாலம் எதுவும் இல்லை  கற்களை போட்டு வைத்துள்ளனர். கவனமாகத்தான் ஆற்றைக் கடக்கவேண்டும்.  வாய்க்காலின் இரு புறமும், குளிக்க மற்றும் மல ஜலம் கழிக்க வசதிகள் செய்துள்ளனர். 

இரவில் கானகத்தில் செல்வது ஆபத்து என்றாலும் பல பக்தர்கள் சென்று கொண்டுதான் இருக்கின்றனர். அடுத்து கரிமலையேற்றம் கடினம் கடினம் என்பதால்  சற்று கரிவிலாந்தோட்டில் ஓய்வெடுத்துகொண்டு செல்லலாம் அன்பர்களே. 

குருசாமி திருவடிகளே சரணம் 

சுவாமியே சரணம் பொன் ஐயப்பா



ஐயப்ப தரிசனம் தொடரும் . . . . . . . .

சுவாமியே சரணம் ஐயப்பா -14

அழுதையிலிருந்து   இஞ்சிப்பாறைக்  கோட்டை வரை 

அழுதை ஏற்றம் ஏறும் போது
ஹரிஹரன் மகனைத் துதித்து செல்வார்
வழிகாட்டிடவே வந்திடுவார்
ஐயன் வன்புலி ஏறி வந்திடுவார்


இப்பதிவுகளையும்  காணலாமே:  

       4   5   6   7   8   9   10  11   12   13   15   16   17   18   19   20   21



அழுதையின் மறுகரை

அழுதையில் நீராடி கல் எடுத்துக்கொண்டு அழுதை மலையை ஏறத்தொடங்குகிறோம்.  காட்டு வழியில் ஒற்றைப் பாதை, செம்மண் பூமி புழுதி கிளம்புகின்றது.  ஏற்றம் செங்குத்து அதிகம் இல்லை மலை உயரமும் அதிகமில்லை, ஆயினும் ஹரிஹர சுதன் நம்முடன் வந்து கொண்டிருக்கிறேன் என்பதை உணர்கிறோம்..





இடையில் சிறிது நேரம் ஓய்வு


வழிநடை சரணங்கள்
ஸ்வாமியே ஐயப்பா      ஐயப்பா  ஸ்வாமியே
ஸ்வாமியப்பா ஐயப்பா         சரணமய்யா ஐயப்பா
சரணமய்யா ஐயப்பா       ஸ்வாமியப்பா ஐயப்பா
ஸ்வாமி சரணம் ஐயப்ப சரணம்       ஐயப்ப சரணம் ஸ்வாமி சரணம்
ஸ்வாமியே ஐயப்பா        ஐயப்பா ஸ்வாமியே
பகவான் சரணம் பகவதி சரணம்       பகவதி சரணம் பகவான் சரணம்
பகவானே பகவதியே       பகவதியே பகவானே
தேவன்  சரணம்  தேவி சரணம்      தேவி சரணம் தேவன்  சரணம்
தேவனே தேவியே          தேவியே தேவனே 
ஈஸ்வரன்  சரணம் ஈஸ்வரி சரணம்     ஈஸ்வரி சரணம் ஈஸ்வரன்  சரணம்
ஈஸ்வரனே ஈஸ்வரியே       ஈஸ்வரியே ஈஸ்வரனே 
ஸ்வாமி பாதம் ஐயப்ப பாதம்      ஐயப்ப பாதம் ஸ்வாமி பாதம்
பகவான் பாதம் பகவதி பாதம்     பகவதி பாதம் பகவான் பாதம்
தேவன் பாதம்  தேவி பாதம்     தேவி பாதம் தேவன் பாதம்
பாத பலம் தா தேக பலம் தா      தேக பலம் தா  பாத பலம் தா
கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை       காலுக்கு மெத்தை கல்லும் முள்ளும்
குண்டும் குழியும் கண்ணுக்கு வெளிச்சம்    கண்ணுக்கு வெளிச்சம்குண்டும் குழியும்
ஏற்றி விடப்பா தூக்கி விடப்பா        தூக்கி விடப்பா  ஏற்றி விடப்பா
பள்ளிக் கட்டு சபரிமலைக்கு      சபரிமலைக்கு பள்ளிக் கட்டு
முத்திரைத் தேங்காய் ஸ்வாமிக்கு    ஸ்வாமிக்கு முத்திரைத்தேங்காய் 
நெய்யபிஷேகம் ஸ்வாமிக்கு     ஸ்வாமிக்கு நெய்யபிஷேகம்
கற்பூர தீபம் ஸ்வாமிக்கு      ஸ்வாமிக்கு   கற்பூர தீபம்
காணிப்பொன்னும் ஸ்வாமிக்கு   ஸ்வாமிக்கு  காணிப்பொன்னும்
யாரைக்காண                 ஸ்வாமியைக் காண 
ஸ்வாமியைக் கண்டால்            மோட்சம் கிட்டும்
எப்போ கிட்டும்                      இப்போ கிட்டும்
ஸத்குரு நாதா ஐயப்பா       ஐயப்பா ஸத்குரு நாதா
கலியுக வரதா ஐயப்பா      ஐயப்பா  கலியுக வரதா
ஸ்வாமியே ஐயப்பா        ஐயப்பா  ஸ்வாமியே



வழி நடை சரணங்களைக்கூறிக்கொண்டே மலையேறுகிறோம். அவ்வாறு செய்யும் போது மூலிகைக் காற்றை நாம் முழுவதுமாக  சுவாசிக்கின்றோம். நமது உடலும் புத்துணர்ச்சி பெறுகின்றது  என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். 


கல்லிடும்  குன்னு 

கல் - இடும் - குன்னு அதாவது கல்லை இடும் குன்று. அழுதை நதியில் எடுத்த கல்லை விடுக்கும் இடம் இதுதான். மகிஷி இறந்த பின்னும் அவளது உடலின் மேல் சூரிய ஒளி விழுந்த போது அவ்வுடல் வளர ஆரம்பித்ததாம், அப்போது பிரம்மன் தோன்றி தன்னுடைய வரத்தின் காரணமாக அவ்வாறு நடக்கின்றது. எனவே அவ்வுடலின் மேல் கல்லைப் போட்டு மூடுமாறு கூறுகின்றார். அது இன்றும் தொடர்கின்றது. நன்மைக்கும் தீமைக்குமான நெடும் போராட்டத்தில் நம்மாலான  பங்காக  தீமையை அழிக்க ஒரு முயற்சியாக இது கருதப்படுகின்றது. 



பாதையின் நடுநடுவே பிரம்மாண்ட மரங்கள் உள்ளன அதன் வேர்கள் வெளியே வ்ந்து பகதர்கள் நடந்து செல்வதால் மொழு மொழுவென்று இருக்கின்றது. அதனால் வழுக்கும் என்பதால் பார்த்து பார்த்துத்தான் செல்ல வேண்டி உள்ளது.  பல வித பக்தர்கள், ஓடுபவர்கள், பாடுபவர்கள், உருகி நிற்பவர்கள், எழை, பணக்காரர், சாதி என்ற எந்தவித பாகுபாடும் இல்லாமல் சரண கோஷத்துடன் ஐயனை மனதில் நினைத்துக்கொண்டு ஒரு யோக நெறியாக மலை ஏறுகின்றனர்.  பல் வேறு மொழிகள், பல் வேறு பேச்சுக்கள் நம் காதில் பாய்கின்றன.  அவர்களுடன் நாமும் மலையேறுகிறோம். அழுதை மலையேற்றத்திற்கு சுமார் 3 மணி நேரம் ஆகும்.  


கல்லிடுங்குன்றிலிருந்து  இறங்கி ஒரு வாய்க்காலைக் கடந்து  பின் மலையேற்றம். பாறைகள் எல்லாம் வழுக்குகின்றது பார்த்துப் பார்த்துப் பார்த்து  ஏற வேண்டியுள்ளது.  மரங்களின் வேர்கள் பல இடங்களில் தடுக்கின. அங்கங்கே கால் விரல் நகங்கள் விரல் நுனிகள் அடி வாங்கின. ‘அழ வைக்கும் அழுதா’ என்று சொல்வதுண்டு. இந்த மலையில் ஏறுபவர்களுக்குத் தெரியும் இது எத்தனை உண்மை என்று. இவ்வாறு மலையேறி இஞ்சிப்பாறை கோட்டையை அடைந்தோம். 




அழுதை மலையின்  ஒரு உச்சி  இஞ்சிப்பாறைக் கோட்டையாகும். உடும்புப்பாறை கோட்டை என்றும் அழைக்கின்றனர்.  இது ஒரு தாவளம். இம்மலைக்கு அதிஷ்டான தேவன் இஞ்சிப்பாறை வில்லன் ஆவார். இவர் மலையேறி வரும் பக்தர்களுக்கு தரிசனம் அளித்தவாறு எழுந்தருளியுள்ளார். இவரை வணங்கி அனுமதி பெற்று அடுத்து யாத்திரையை தொடர  வேண்டும்.  புதிதாக ஐயப்பன் சன்னதியும் அமைத்துள்ளனர். இச்சன்னதியில் "தேவன் வியாக்ரபாதன்' என்ற பெயரில் ஐயப்பசுவாமி அருளுகிறார். "வியாக்ரம்' என்றால் "புலி'. ஐயப்பன் புலிகளை தன் கட்டுக்குள் வைத்துக் கொண்டு, தன்னைக் காணச்செல்லும் பக்தர்களைப் பாதுகாக்கும் காவலராக விளங்குகிறார். ஆன்மிக ரீதியாக, இதை வேறு மாதிரியாக பொருள் காணலாம். மனிதன், இந்த உலக இன்பத்தை பெரிதென நினைக்கிறான். மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை ஆகிய இன்பங்களை அடைய ஆசை கொண்டு, பாதகங்களைச் செய்யக் கூட தயாராகி விடுகிறான். இந்த பாதகங்களே மனதை ஆட்டிப்படைக்கும் புலிகளுக்கு ஒப்பிடப்படுகிறது. இந்த கொடிய புலிகளை கட்டிப்போட்டு விட்டால் மனதில் நல்ல சிந்தனைகள் மட்டுமே தங்கும். பக்தி மார்க்கத்திற்குள் மனிதன் வருவான். வெடி வழிபாடு நடைபெறுகின்றது. வெடி வழிபாடும் ஒரு வகை நாத வழிபாடு என்று கொள்ளலாம். இவ்வழிபாடு கேரளாவிற்கே உரித்தானது. பிரம்ம ராக்ஷசன், யக்ஷிகளின் சன்னதியும் உள்ளது.  இனி இறக்கம்தான் என்பதால் பக்தர்கள் அதிகம் இங்கு தங்குவதில்லை. 





இஞ்சிப்பாறைக் கோட்டை 


இம்மலையின் அதிஷ்டான தேவதை ஐயனின் பிரதான காவல் தெய்வம் பூதநாதன் என்பாரும் உளார்.  இஞ்சிப்பாறைக் கோட்டைக்குப்பின் யாத்திரை எவ்வாறு இருந்தது என்பதை அறிந்து கொள்ள தொடர்ந்து வாருங்கள் அன்பர்களே. 


குருசாமி திருவடிகளே சரணம் 

சுவாமியே சரணம் பொன் ஐயப்பா



ஐயப்ப தரிசனம் தொடரும் . . . . . . . .