Monday, April 18, 2016

ஒரு இலட்சம் பார்வைகள்


அனந்த கோடி நன்றி

பிரதோஷ நாயகர்
திருமயிலை கபாலீச்சுரம் 

அடியேன் இந்த வலைப்பூவை 2007ம் வருடம் ஜூன் மாதம் துவங்கினேன்.  அவனருளால் இன்று வரை 386 பதிவுகள் இட்டுள்ளேன். இன்றைய தினம் ஒரு இலட்சம் பார்வைகளை ( 100000 Views) என்ற  ஒரு   இலக்கை அடைந்தது.

வேலைப்பளுவினால் அடிக்கடி பதிவிட முடியவில்லை என்றாலும் முடிந்த போது பதிவிட்டு வந்தேன்.

இதுவரை வந்து பார்வையிட்டு, பின்னூட்டங்களும் இட்ட அன்பர்கள் அனைவருக்கும் அனந்த கோடி நன்றி. வரும் காலங்களிலும் இது போலவே வந்து ஆதரவு அளிக்குமாறு வேன்டிக்கொள்கிறேன்.



ஆருத்ரா தரிசனம்(2016) - 8

      நவ  நடராஜர்  சந்திப்பு விழா -3


ஒவ்வொருவராக சுவாமிகளும் அம்பாளும் தம்பு செட்டி தெரு கிருஷ்ணன் கோவில் தெரு சந்திப்புக்கு வந்து சேர்ந்து  பக்கத்திற்கு இருவராக பக்தர்களுக்கு தரிசனம் கொடுத்தனர்.  பக்தர்களும் சாரி சாரியாக வந்து கொண்டிருந்தனர். நாதஸ்வர குழுவினர் ஒரு பக்கம் இன்னிசை இசைத்துக்கொண்டிருக்க மறு பக்கம் எக்காளம் ஊதினர் சிலர் ஒரு அன்பர் தேவாரம் திருவாசகம்  ஓதிக்கொண்டிருந்தார். நேரமாக நேரமாக பக்தர் கூட்டமும் அதிகமாகிக்கொண்டிருந்தது. வடிவுடையம்மன் சங்கநாதக்குழுவினரும் வந்து சங்கம் முழங்கினர் எங்கும் ஒரே கோலாகலமாக இருந்தது. 


ஒரு பக்கம் விநாயகர் ஆலய நடராஜர்கள் 
தரிசனம் அளிக்கின்றனர்



மல்லிகேசுவரர் ஆலய நடராஜர் வருகை 






எவ்வளவு அருமையான அலங்காரம். 
ஒவ்வொரு அலங்காரமும் ஒரு தனி அழகு. 


சுவாமி பின்னழகு 





கிருஷ்ணன் கோவில் கோபுரம் 




வடிவுடை அம்மன் சங்கநாதக்குழுவினர்
 சங்கம் முழங்குகின்றனர் 


 திருமுறைகள் ஓதிய அன்பர் 
                                                                                                 

                                                                                                                                நவ  நடராஜர்  சந்திப்பு தொடரும் . . . . . . . 

Sunday, April 17, 2016

ஆருத்ரா தரிசனம்(2016) - 9

  நவ  நடராஜர்  சந்திப்பு விழா -4




அனைத்து சுவாமிகளும் வந்து சேர்ந்தவுடன். சிவனடியார் சேவா சங்கத்தினர் சுவாமிகளுக்கு பட்டும், பிரசாதமும் சமர்பித்தனர். பட்டு சுவாமிக்கு சார்த்தப்பட்டு , பிரசாதம் நிவேதனம் ஆனபின் ஏக காலத்தில் ஒன்பது நடராஜர்களுக்கும் தீபாராதணை நடந்தது. அன்பர்கள் அனைவரும் ஓம் நமசிவாய என்று ஆனந்த கண்ணீருடன் தரிசனம் கண்டனர். 




ஏக கால தீபாராதனை 



சங்க நாதம் முழங்குகின்றனர் 

திருமுறைகள் ஓதுகின்றனர் 

இந்திரிய வயமயங்கி இறப்பதற்கே காரணமாய்
அந்தரமே திரிந்துபோய் அருநகரில் வீழ்வேற்குச்
சிந்தைதனைத் தெளிவித்துச் சிவமாக்கி எனையாண்ட
அந்தமிலா ஆனந்தம் அணிகொள் தில்லை கண்டேனே

என்று அன்பர் பாட அனைவரும் சேர்ந்து பாடினர். 

தங்கக் கவசத்தில் அம்பாள்

இப்பதிவுடன் ஆருத்ரா தரிசனம் நிறைவு பெற்றது, அடுத்த பதிவில் மாசி மக காட்சிகளைக் காணலாம் அன்பர்களே. 

ஆருத்ரா தரிசனம்(2016) - 7

                                        நவ  நடராஜர்  சந்திப்பு விழா -2



இந்த நவநடராஜர் சந்திப்பை நடத்தும் அன்பர்கள் 



காளிகாம்பாள் ஆலய நடராஜர் 


காளிகாம்பாள் ஆலய சிவகாமி அம்பாள் 


செங்கழுநீர் பிள்ளையார் ஆலய நடராஜர்

ஓம் என்னும் பிரணவத்தின் நடுவே ஆனந்த தாண்டவ நடராஜர்


செல்வ விநாயகர்


சந்திப்பு 




மல்லிகேஸ்வரர் 

 எக்காளம் இசைப்போர் 

நாதஸ்வரம்  மேளம் 


                                                                                                  
நவ  நடராஜர்  சந்திப்பு தொடரும் . . . . . . . 

Saturday, April 16, 2016

ஆருத்ரா தரிசனம்(2016) - 6

நவ  நடராஜர்  சந்திப்பு விழா


சென்னை பாரிமுனைப் பகுதி மண்ணடியில் சில வருடங்களாக இந்த ஒன்பது நடராஜர் தரிசன நிகழ்ச்சி நடைபெறுகின்றது. இந்த வருடம்தான் ஒரே இடத்தில் ஒன்பது நடராஜர்களையும் அம்பாளையும்  ஆருத்ரா தரிசனத்தன்று தரிசிக்கும் அரிய பேறு கிட்டியது.  அந்தக் காட்சிகளை அன்பர்களாகிய தங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன். 

இவ்விழாவில் கலந்து கொள்ளும்  நடராஜர்கள் அருள் பாலிக்கும் ஆலயங்கள்

1.  மண்ணடி  ஸ்ரீ மல்லிகேஸ்வரர்  ஆலயம்.
2.  ஸ்ரீ கச்சாலீஸ்வரர் ஆலயம்.
3.  ஸ்ரீ காளிகாம்பாள் ஆலயம்.
4.  மண்ணடி ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயம்.
5.  மூக்கர் நல்லமுத்து ஸ்ரீ பிரசன்ன விநாயகர் ஆலயம்.
6.  லிங்கி செட்டி தெரு ஸ்ரீ சிதம்பரேஸ்வரர் ஆலயம். 
7.  ஸ்ரீ சண்முக செல்வ விநாயகர் ஆலயம். 
8.  செங்கழுநீர் பிள்ளையார் ஆலயம்.  
9.  நைனியப்பன் தெரு ஸ்ரீ முத்துக்குமாரசுவாமி ஆலயம். 



கச்சாலீஸ்வரர் ஆலய நடராஜர் திருத்தேரில் எழுந்தருளினார்




இவ்விழாவை ஏற்பாடு செய்பவர்கள்  சென்னை சிவனடியார் சங்கத்தினர். இந்த அரிய தரிசனம் சுமார் 10: 35  மணியளவில்  தம்பு செட்டி தெரு கிருஷ்ணன் கோவில் சந்திப்பில் நடைபெற்றது.  அடியேன் சென்ற போது நடராஜப் பெருமான்கள்  அனைவரும் தங்கள் ஆலய தரிசனத்தை முடித்து சந்திப்பு நடைபெறும் இடத்திற்கு வந்து கொண்டிருந்தனர் அந்த காட்சிகள் முதலில் இடம்பெருகின்றது. சந்திப்புக் காட்சிகள் பின்னர் தொடரும். 

சிதம்பரேஸ்வரர் ஆலய நடராஜர் சூரிய பிரபையில் 



சிதம்பரேஸ்வரர்  ஆலய சிவகாமி அம்பாள்


சிதம்பரேஸ்வரர் ஆலய மாணிக்கவாசக சுவாமிகள்



மூக்கர் நல்லமுத்து ஸ்ரீ பிரசன்ன விநாயகர் ஆலய நடராஜர் 


மூக்கர் நல்லமுத்து ஸ்ரீ பிரசன்ன விநாயகர் ஆலய 
சிவானந்தவல்லி அம்பாள் 


எங்கோனும் எம்பிராட்டியும் ஒன்றாய் தரிசனம்  



முத்துக்குமார சுவாமி ஆலய  நடராஜர்

முத்துக்குமார ஆலய  சிவகாமி அம்பாள் 


 சண்முக செல்வ விநாயகர் ஆலய நடராஜர் 


 சண்முக செல்வ விநாயகர் ஆலய சிவகாம சுந்தரி அம்பாள் 

நவ  நடராஜர்  சந்திப்பு தொடரும் . . . . . . . 


Friday, April 15, 2016

அதி அற்புத அதிகார நந்தி சேவை -3


சென்னை சிந்தாதிரிப்பேட்டை ஆதிபுரீஸ்வரர் ஆலயம்
அதிகார நந்தி  சேவை 


மூஷிக வாகனத்தில் விநாயகர்

மூன்று ஆடுக்குகளாக இந்த பொம்மைகளை அமைத்துள்ளனர். முழு முதற்க் கடவுள் விநாயகர், மும்மூர்த்திகளான பிரம்மா, ஸ்ரீ மஹா விஷ்ணு,  சிவபெருமானின் ஆனந்தத் தாண்டவம் கண்டு களித்த  பதஞ்சலி, புலிக்கால் முனிவர் இசைக்கு இலக்கணம் வகுத்த நாரத முனிவர், தும்புரு முனிவர் பொம்மைகளும்,, பிருங்கி முனிவர், சுக முனிவர் பொம்மைகளும் உள்ளன. கயிலாய மலையில் ஒரு காலில் நின்றபடி, யோக பட்டம் காட்டியபடி என, பல்வேறு நிலைகளில் தவம் புரியும் முனிவர்கள் பொம்மைகளும் உள்ளனஅனைத்து பொம்மைகளும் தாமரை பீடத்தில் நின்ற கோலத்தில் உள்ளது ஒரு தனி அழகு.   அதிகார நந்தியின் மேற்பகுதியில் சுவாமியும் அம்மனும் அமரும் பீடத்தின் அடிப் பகுதியின் இரு பக்கத்திலும் பறக்கும் கந்தர்வ பொம்மைகள் வைக்கப்படுகின்றன. இவை அனைத்தையும் சேர்த்துப் பார்த்தால், இசைக் கடலில் மூழ்கியபடி, அந்தப் பேரானந்தத்தில் திளைத்தபடி இறைவனைச் சுமக்கத் தயார் என, நந்தி தேவர் வீறார்ந்த காட்சி அளிப்பது போலவே தோன்றுகிறது.


காமதேனு வாகனத்தில் திரிபுரசுந்தரி அம்பாள்


அம்பாள் உலா வரும் காமதேனு வாகனமும்  அற்புத கலை நயம் கொண்டதாய் விளங்குகின்றது. அப்படியே ஒவ்வொரு பகுதியிலும் அருமையான வேலைப்பாடுகள். அதிகார நந்தி வாகனத்திலும் இதில் பொருத்தப்படும் பொம்மைகளும், காமதேனு வாகனமும் தங்க ரேக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, முலாம் பூசப்பட்டது போல் காட்சியளிக்கின்றன.




பூத வாகனத்தில் முருகர் 


200வது ஆண்டில் காலடி வைத்துள்ள  பூத வாகனம் அதிகார நந்தி வாகனத்தின் புகழுக்குச் சற்றும் குறையாதது. பொன்னுசாமி கிராமணியின் முன்னோர் சுப்பராய கிராமணி என்பவர், 1812ம் ஆண்டில் இந்த வாகனத்தைச் செய்து கொடுத்துள்ளார். இதுவரை இரண்டு முறை மட்டுமே இந்த வாகனம் வண்ணப்பூச்சு கண்டிருக்கிறது. சமீபத்தில் தான் இரண்டாவது முறையாக வண்ணம் பூசப்பட்டுள்ளது.பூத வாகனத்தின் முன்னிரு கைகளும் இறைவனின் திருவடிகளை ஏந்துவது போல் அமைக்கப்பட்டிருக்க, பின்னிரு கரங்களில் கத்தியும், கேடயமும் உள்ளன. மொத்தம், ஏழு அடி உயரம் உள்ள இந்த வாகனத்தின் ஒவ்வொரு பாகத்திலும் ஸ்தபதி புகுந்து விளையாடியிருக்கிறார். இவருடைய தலை முடி போர்த்துக்கீசியர்களின் அமைப்பில் உள்ளது இதன் தொன்மையை பறை சாற்றுகின்றது.  உருட்டும் விழிகளுடனும், மிரட்டும் வெட்டரிவாள் மீசையுடனும், கட்டுமஸ்தான தேகத்துடனும், ஒரு காலை மடித்து ஒரு காலை நீட்டி எழுந்திருக்கத் தயார் நிலையில் உள்ளது கடந்த, 200 ஆண்டுகளாக இந்தப் பூத வாகனம் தொடர்ந்து, வீதியுலா வந்து கொண்டிருக்கிறது என்பதை நினைக்கும் போது, நமக்கு புளகாங்கிதம் ஏற்படுகிறது. இரவு முருகர் இந்த பூத வாகனத்தில் எழுந்தருளி அருள் பாலிக்கின்றார். 





ஆதிபுரீஸ்வரர் அதிகார நந்தி சேவை 









ரிஷப வாகனத்தில் சண்டிகேஸ்வரர்

****************

இப்பதிவுடன் இணைந்த மற்ற பதிவுகள்