Friday, October 16, 2015

அன்னையின் நவராத்திரி - 4

                                                  நான்காம்   நாள்  கொலு


முந்தைய பதிவுகள் :    முதல் நாள்,      இரண்டாம் நாள்,    மூன்றாம்நாள்


திருமயிலை வெள்ளீச்சுரம்
காமாக்ஷியம்மன் காமதேனு வாகன கொலு


நவராத்திரியின் நான்காம் நாள் அன்னை ஜகத் ஜனனியை சோடசாக்ஷரி என்னும் சுமங்கலிப் பெண்ணாக, சர்வ மங்கள மாங்கல்யையாக பூஜிப்பதால் கல்வி, ஞானம் பெருகும்.

*********************

முத்து மாரியம்மன் 
சூலினி துர்க்கை அலங்காரம் 

நவராத்திரியின் நான்காம் நாள் அன்னையை ஐந்து வயது குழந்தையாக பாவித்து ரோகிணி என்னும் கன்யாவாக வழிபடுகின்றோம். அன்னையை இவ்வாறு வழிபடுவதால் கல்வி வளர்ச்சி உண்டாகும். இன்றைய ஸ்லோகம்

ரோஹயந்தீச பீஜாநி பிராக்ஜன்ம ஸஞ்சிதாநிவ யாதேவிஸர்வபூதானாம் ரோஹிணீம் பூஜயாம்யஹம் ||

(எல்லா ஜீவரசிகளின் பாவங்களையும் எந்தச் சக்தியினால் நிவர்த்தி செய்கிறாளோ அந்த சக்தியாகிய ரோகிணியை வணங்குகிறேன்.)

*********************


கூஷ்மாண்டா துர்கா

நவராத்திரியின் நான்காம் நாள் அன்னை நவதுர்கைகளில் , சூரிய மண்டலத்தின் நடுவில் அமர்ந்து கொண்டு இந்த புவனம் முழுவதற்கும் வெப்பத்தை வழங்கிக்கொண்டிருக்கும் கூஷ்மாண்டா துர்காவாக வழிபடுகின்றோம். இந்த பிரம்மாண்டம் முழுவதையும் சிருஷ்டிப்பவள் இவளால்தான்.

கமண்டலம், வில், அம்பு, தாமரை, அமிர்தகலசம், சக்கரம், கதை, ஆகியவைகளை ஏழு கரங்களில் ஏந்தியபடி எட்டாவது கரத்தில் எட்டு சித்திகள், ஒன்பது நிதிகள் அடங்கிய ஜப மாலையோடு, சிம்மத்தை வாகனமாகக் கொண்டு திவ்யமாகக் காட்சி கொடுக்கிறாள் அன்னை. தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு நோயற்ற வாழ்க்கையைக் கொடுத்து அருள் புரிகிறாள். எல்லாவற்றிக்கும் ஆதியாக ஊதா வண்ணத்தவளாக விளங்குகின்றாள் இந்த துர்கா.

அன்னை தன் சக்தி முழுவதையும் சூரியனுக்கு அளித்து சிருஷ்டியை துவக்குகிறாள் அன்னை.

ஸுராஸம்பூர்ண கலசம் ருதிராப்லுத மேவசம் |
ததாநா ஹஸ்த பத்மாப்யாம் கூக்ஷ்மாண்டா சுபதாஸ்துமே ||

என்பது கூஷ்மாண்டா துர்காவின் ஸ்லோகம் ஆகும்.

( தனது இரு தாமரைக் கரங்களில் இரத்தம் நிரம்பிய இரு பூரண கலசங்களை ஏந்தி, சிருஷ்டியை ஸ்த்தி சம்ஹாரத்தை தனது கண் இமைப்பில் நடத்தும் கூஷ்மாண்டா தேவி அடியேனுக்கு எல்லா வளங்களையும் வழங்கட்டும். )

**********************

ரோக நிவாரண அஷ்டகம்

நாரணி நீயே நான்முகன் தாயே
நாகினி யாயே துர்க் கையளே |

ஊரணி மாயே ஊற்று தாயே
ஊற்றுவ யாயே ஊர் ஒளியே ||

காரணி மாயே காருணி தாயே
காளக யாயே காசினியே |

ரோக நிவாரணி சோக நிவாரணி
தாபநி வாரணி ஜெய துர்க்கா || (4)


***********************


துக்க நிவாரணி அஷ்டகம்

தண தண தந்தண தவிலொலி முழங்கிடத்
தண்மணி நீ வருவாய்

கண கண கங்கண கதிரொளி வீசிடக்
கண்மணி நீ வருவாய்

பண பண பம்பண பறையொலி கூ
விடப்
பெண்மணி நீ வருவாய்

ஜெய ஜெய சங்கரி கௌரி க்ருபாகரி
துக்க நிவாரணி காமாக்ஷி (4)

**************************

அன்னபூரணி அலங்காரம்


அன்ன பூர்ணே ஸதா பூர்ணே சங்கர பிராண வல்லபே
ஞான வைராக்ய ஸித்யர்த்தம் பிக்ஷாம் தேஹி ச பார்வதி
மாதா ச பார்வதி தேவி பிதா தேவோ மஹேஸ்வர:
பாந்தவா சிவ பக்தாச்சா ஸ்வதேசோ புவனத்ரயம்

அன்னம் நிறைந்தவளே, முழுமையானவளே, சங்கரன் மங்கலமே, அன்னை பார்வதியே, ஞானம் வைராக்யம் உண்டாக பிக்ஷையைக் கொடு அம்மா.

என் தாய் பார்வதி தேவி, தந்தையோ மஹேஸ்வரன், உறவினர்களோ சிவ பக்தர்கள், எனது தேசம் மூவுலகம்

*******************


கற்பகவல்லி பத்மாசனி கோலம் 

நாகம் குடை பிடிக்க வீற்றிருக்கும் அம்பிகைக்கு நாகங்களினால் ஆன மாலை ( வெளி கருப்பு நிற மாலை) சார்த்தியிருந்தது அற்புதமாக இருந்தது 


நவராத்திரியின் இந்த நான்காம் நாள் இரவு கற்பகாம்பாள் நாக வாகனத்தில் பத்மாசனியாக கொலு வீற்றிருந்து அருள் பாலிக்கின்றாள். ஆதி சேஷன் அன்னையின் சுண்டு விரல் மோதிரம் ஆவான். இன்று அவனே அம்மனுக்கு ஆசனமாக இருக்கின்றான். குடையாகவும் சேவை செய்கின்றான்.  புற்று வடிவில் இந்த புவனத்தில் அருள் சுரக்கும் அம்மன் தன் தாமரை மலர்ப் பாதங்கள்  ஜோதி எழில் கொண்டு மின்ன பத்மாசனியாய் கொலு வீற்றிருந்து அருளுகின்றாள். 


காமாக்ஷியுடன் கொலுவிருக்கும் அலைமகள்


வெள்ளீச்சரம்  ஐதீகம் 
சுக்கிரன் வழிபட்டு கண் பெற்ற தலம் 

ஸ்ரீ மந்தர மாத்ருகா புஷ்ப மாலா ஸ்தவம் 

(ஸ்ரீ ஆதி சங்கர பகவத் பாதர் அருளியது)

ஆதி சங்கரரால் இயற்றப்பட்ட இந்த ஸ்தோத்திரதை பாராயணம்  செய்வது அம்பாளுக்கு நாம்  புரியும் மானசீகமாக பூஜை செய்வதாகும்.  இந்த ஸ்தோத்திரத்தில் மூன்று சிறப்புகள் உள்ளன. முதலாவது ஸ்ரீவித்யா உபாசகர்களுக்கு மிகவும் இன்றியமையாத ஸ்ரீ லலிதா மஹா த்ரிபுரஸுந்தரியின் பஞ்ச தசாக்ஷரி  மந்திரத்தின் பதினைந்து எழுத்துக்களை முதல் எழுத்தாகக் கொண்டு ஒவ்வொரு ஸ்லோகமும் அமைந்துள்ளது. ஆகவே இந்த ஸ்தோத்திரத்தை அம்மன் முன்னர் பாராயணம் செய்யும் போது மந்திரப்பூர்வமாக அன்னையை துதித்த பரிபூரண பலன் கிட்டுகின்றது. இரண்டாவது  சோடசோபசாரம் என்னும் பதினாறு உபசார முறைகளை அருமையாக ஆச்சார்யர் இந்த  ஸ்தோத்திரத்தில் விளக்கியுள்ளார். மூன்றாவது விஸ்தாரமாக பூஜை செய்ய முடியாதவர்களும் இந்த ஸ்தோத்திரத்தை படிப்பதன் மூலம் அவ்வாறு பூஜை செய்த பலனைப்  அன்னையின் அருளால் நிச்சயம் பெறுவர்.

இப்பதிவில் பதினொன்றாவது ஸ்லோகம் முதல் பதிமூன்றாவது ஸ்லோகம் வரை காணலாம் அன்பர்களே.

சந்தான கௌரி
( ஸ்கந்த மாதா, குகாம்பாள்)
ஸ்கந்தனுக்கு அன்னம் பாலிக்கும் திருக்கோலம் 

இந்த பத்தாவது ஸ்லோகம்  தீபம்  ஏற்றி அன்னையின் ஸந்நிதானத்தை   கண்டு வணங்குவதற்கு ஏதுவாக  பிரகாசமாக்குவதை விளக்குகின்றது.

க்ஷ்மீம்- உஜ்வலயாமி ரத்ன-நிவஹ- உத்
பாஸ்வத்தரே மந்திரே
மாலா-ரூப விலம்பிதை:மணிமய
ஸ்தம்பேஷு ஸம்பாவிதை:  I
சித்ரை: ஹாடக-புத்ரிகா-கர-த்ருதை:
 கவ்யை: க்ருதைவர்த்திதை:
திவ்யை: தீபகணை: தியா கிரிஸுதே!
ஸந்துஷ்டயே கல்பதாம் II   10.

இரத்தின கற்கள் இழைத்த உனது திருக்கோவிலில் மாலை போல் தொங்குகின்றவையும்இரத்தினமயத் தூண்களில் நிழலாகத் தெரிகின்றனவையும்பலவித தங்கப் பெண் பதுமைகளால் கையில் ஏந்திய வண்ணம் என்னும் பலவித   பசுநெய் விளக்குகளால் மனதளவில் அழகை கூட்டுவிக்கிறேன்.  மலை மகளே அது உன்னை மகிழ்விக்கட்டும்.
லக்ஷ்மீம்- பிரகாசத்தை, ஹாடக புத்ரிகா_ தங்கப் பதுமை

.ஆதி பராசக்திக்கு பலவித  சித்ரான்னங்கள் நைவேத்யம் செய்வதை   ஆச்சார்யர்  இந்த பதினொன்றாவது   ஸ்லோகத்தில் அருளுகின்றார்.
ஹ்ரீம்கார ஈச்வரி! தப்த-ஹாடக-க்ருதை:
ஸ்தாலீ- ஸஹஸ்ரைர் ப்ருதம் திவ்ய அன்னம்
க்ருத-ஸூப-சாக-பரிதம் சித்ரான்னபேதம் ததா I
துக்த அன்னம் மது-சர்கரா-ததி-யுதம் மாணிக்ய-
பாத்ரே ஸ்திதம் மாஷ-ஆபூப-ஸஹஸ்ரம் அம்ப!
ஸபலம் நைவேத்யம் -ஆவேதயே II 11.

ஹே ஹ்ரீங்காரேச்வரித் தாயேஉருக்கிய தங்கத்தால் செய்யப்பட்ட பல   கிண்ணங்களில் பரிமாறப்பட்டுள்ள நைவேத்தியம் அனைத்தையும்   நிவேதனம் செய்கிறேன்நெய்யும் பருப்பும் கலந்து தயாரித்த கறி வகைகளும்,  சித்ரான்னங்களும்தயிர்தேன்சர்க்கரை சேர்த்து மாணிக்கம் பதித்த   பாத்திரத்தில் இருக்கும் பாலன்னம்ஆயிரம் வடைகள் இப்படி நைவேத்தியம் இங்கு பாவிக்கப்படுகிறது.
ஸூப-சாக – பருப்பும் காய்கறியும்
அம்மனுக்கு தாம்பூலம் அளித்து மரியாதை செய்வதை  ஜகத் குரு ஆதி சங்கரர் இந்த பன்னிரண்டாவது ஸ்லோகத்தில் அருளுகின்றார்.

 ஸச்சாயை: வர-கேதகீ-தல-ருசா
 தாம்பூல-வல்லீ-தலை:
பூகை: பூரி-குணைஸுகந்தி-மதுரை:
 கர்ப்பூர- கண்ட -உஜ்ஜ்வலை:  I
முக்தா-சூர்ண-விராஜிதை: பஹுவிதை:
 வக்த்ர அம்புஜ ஆமோதிதை:
பூர்ணா ரத்ன-கலாசிகா தவ
 முதேந்யஸ்தா புரஸ்தாத்-உமே II  12

ஹே உமை அன்னையே! உனது எதிரில் இதோ முழுவதும்  ரத்ன கற்கள் பதிந்த வெற்றிலை பெட்டி வைத்துள்ளேன்அது   உன் மகிழ்ச்சிக்காகவே வைக்கப்பட்டுள்ளதுஅந்த பெட்டியில் நல்ல தாழை மடல்கள் போன்ற (நிறமானவெற்றிலைகளும்இனிய மனம் கொண்ட   பாக்குத் துகள்களும்பச்சை கற்பூரம்சுண்ணாம்பு கலந்து திருவாய்க்கு மணம்   உண்டாக்கும் விதத்தில் அனைத்து பொருட்களும் நிரம்பியுள்ளன
வரகேதகீதலருசா- தாழை மடல்கள் போன்ற, பூக- பாக்கு, கலாசிகா- தாம்பூலத் தட்டு.

மலையரையன் பொற்பாவைக்கு கற்பூர ஆரத்தி (தீபாரதனைசெய்வதை இந்த பதிமூன்றாவது ஸ்லோகத்தில் ஆச்சார்யர் அருளுகின்றார்.

கன்யாபிகமனீய-காந்திபி:
அலங்கார- அமல ஆராத்ரிகா-
பாத்ரே மௌக்திக சித்ர-
பங்க்தி-விலஸத் கற்பூர தீபாலிபி:  I
தத்தத்-தால-ம்ருதங்க கீத-ஸஹிதம்
ந்ருத்யத் பதாம்-போருஹம்
மந்த்ராராதன-பூர்வகம் ஸுநிஹிதம்
நீராஜனம் க்ருஹ்யதாம்  ||  13

அழகிய பெண்கள்அலங்கார ஆரத்தி பாத்திரத்தில் வரிசையாக முத்துக் கோர்த்தாற் போல   கற்பூர   தீபங்களை    ஏந்தியவர்களாய்,   மிருதங்கத்தின்  தாள ஒலிக்கு ஏற்றார் போல்   ஸங்கீதமும்,    நாட்டியமும் சேர்ந்து செய்பவர்களாய்மந்திரங்களுடன் காட்டும் கற்பூர நீராஜனத்தை ஏற்றுக் கொள்ளலாமே

*********************


                                                   அபிராமி அம்மை பதிகம்

நீடுலகங்களுக்கு ஆதாரமாய் நின்று 
நித்தமும் மூர்த்தி வடிவாய்

நியமமுடன் முப்பத்திரண்டு அறம் வளர்க்கின்ற
 நீ மனைவியாய் இருந்தும்

வீடு வீடுகள் தோறும் ஓடிப்புகுந்து கால்
வேஸற்று இலச்சையும் போய்

வெண்துகில் அரைக்கணிய விதியற்று நிர்வாண
வேடமும் கொண்டு கைக்கோர்

ஓடு ஏந்தி நாடெங்கும் உள்ளம் தளர்ந்து நின்று
உன்மத்தன் ஆகி அம்மா

உன் கணவன் எங்கெங்கும் ஐயம் புகுந்து ஏங்கி
உழல்கின்றது ஏது சொல்லாய்?

ஆடு கொடி மாடமிசை மாதர் விளையாடி வரும்
                                                       ஆதி கடவூரின் வாழ்வே!
 
                              அமுதீசர் ஒரு பாகம் அகலாத சுகபாணி!
                                                  அருள்வாமி! அபிராமியே!   (7)



பொருள்: அன்னை அபிராமியே அனைத்து  உலங்களுக்கும் ஆதாரமாக இருப்பவள்.  அவளே பல ஸ்தலங்களில் பல் வேறு வடிவங்களில் அன்பர்களுக்கு  அருள் புரிகின்றாள். சிவபெருமான் அளித்த இரு நாழி நெல்லைக் கொண்டு முப்பதிரண்டு அறங்களையும்  முறையாக செய்த தர்ம ஸம்வர்த்தினியும் அவளே . இவ்வளவு  சிறப்புக்களையும்   நீ பெற்ற  இருந்தும் உன் கணவனாகிய சிவபெருமான், வீடு தோறும் சென்று,  கால் நோக  வெட்கத்தையும் விட்டு, இதையில் அணிய ஆடையும் இல்லாமல் திகம்பரராக  கையில் ஓடு ஏந்தி மனம் தளர்ந்து பித்தனாகி பிச்சைக் கேட்டு அலைவது ஏன்? என்று கொடிகள் ஆடி அசைகின்ற மாடங்களில் பெண்கள் விளையாடுகின்ற பெருமை வாய்ந்த திருக்கடவூரின் வாழ்வை ! அமிர்த கடேஸ்வரரின் இடப்பாகம் அகலாத அன்னையை ! கிளியை திருக்கரத்தில் ஏந்தியவளை! அனைவருக்கும் அருள்புரிபவளை! அபிராமி அன்னையை உரிமையுடன் வினவுகின்றார் அபிராமி பட்டர். 

ஞானம் தழைத்து உன் சொரூபத்தை அறிகின்ற
நல்லோர் இடத்தினில் போய்

நடுவினில் இருந்து உவந்து அடிமையும் பூண்டு அவர்
நவிற்றும் உபதேசம் உட்கொண்டு

ஈனம்தன்னைத் தள்ளிஎனது நான் எனும் மானம்
இல்லாமலே துரத்தி

இந்திரிய வாயில்களை இறுகப்புதைத்து நெஞ்சு
இருள் அற விளக்கு ஏற்றியே

வான் அந்தம் ஆனவிழி அன்னமே உன்னை என்
மனத் தாமரைப் போதிலே

வைத்து வேறே கவலை அற்றுமேல் உற்றுபர
வசமாகி அழியாதது ஓர்

ஆனந்த வாரிதியில் ஆழ்கின்றது என்று காண்?
ஆதிகடவூரின் வாழ்வே!

அமுதீசர் ஒரு பாகம் அகலாத சுகபாணி!
அருள்வாமி! அபிராமியே! (8)

பொருள்:  இப்பாடலில் பல அரிய கருத்துக்களை அபிராமிபட்டர் கூறியுள்ளார். சத்சங்கத்தின் மேன்மையும். ஐம்புலன்களையும் அடக்கி, ஆணவத்தை வென்று மனத்தாமரையில் அன்னையை அமரச்செய்வதே ஒரு ஆத்மசாதகன் முக்தி அடைய செய்ய வேண்டும் என்பதை அருமையாக காட்டுகின்றார் அபிராமி பட்டர். 


(அபிராமி அம்மன் பதிகப் பாடல்களுக்கு இன்னும் விரிவான  உரையை காண  அபிராமிதாசன் மீனாட்சி சுந்தரம் மோகன் அவர்களின் "அபிராமி அம்மனின் பதிகங்கள்"   புத்தகத்தைக் காணலாம்)
*************************





                                                                                                                                           அம்மன் அருள் தொடரும். . . . .. ... 


No comments: