Thursday, October 15, 2015

அன்னையின் நவராத்திரி - 3

                                                             மூன்றாம்  நாள்  கொலு

முந்தைய பதிவுகள் :   முதல் நாள்,      இரண்டாம் நாள்

திருமயிலை கற்பகாம்பாள் 
அன்னவாகன கொலு

அம்மனுக்கு நட்சத்திர ஜடை அலங்காரம் 




நவராத்திரியின் மூன்றாம் நாள் நாம் ஆத்தாளை , அபிராம வல்லியை, அண்டமெல்லாம் பூத்தாளை, பதினைந்து வயது குமாரியாக, வழிபடுகின்றோம். இவ்வாறு அம்பிகையை வழிபட பகை அச்சம் விலகும்.

                                                                               **************************


ஸிந்தூராரண விக்ரஹாம் த்ரிநயனாம் மாணிக்ய மௌலிஸ் புரத்
தாரா நாயக ஸேகராம் ஸ்மித முகீம் ஆபீந வக்ஷோருஹாம்
பாணிப்யாம் அளி பூர்ண ரத்ன சஷகம் ரக்தோத்பலம்
ஸௌம்யாம் ரத்ன கடஸ்த்த ரக்த பிப்ரதீம்
சரணாம் த்யாயேத் வந்தே பராம் அம்பிகாம்.


சிந்தூரம் போன்ற சிவந்த உடலை உடையவளும், முக்கண்ணியும், மாணிக்கக் கற்களால் செய்யப்பட்ட கிரீடத்தில் பிரகாசிக்கும் சந்திரனை சூடியவளும், புன்சிரிப்பு தவழும் முகம் உடையவளும் தேன் போன்ற அமிர்தம் நிறைந்த ரத்தின கோப்பையை ஒரு கரத்திலும் மற்றொரு கரத்தில் செங்குவளை மலரை ஏந்தியவளும், நவநிதிகள் அடங்கிய ரத்ன கடம் கீழே இருக்க அதன் மேல் தனது சிவந்த இரண்டு திருவடிகளை ஊன்றிய நிலையில் அழகிய தோற்றம் தருபவளான அம்பிகையை தியானம் செய்ய வேண்டும்.



*************


நவராத்திரியின் மூன்றாம் நாள் அன்னையை நான்கு வயது குழந்தையாக பாவித்து கல்யாணி என்னும் கன்யாவாக வழிபடுவதால் பகை ஒழியும்.

இன்றைய ஸ்லோகம்

கல்யாண காரிணீநத்யம் பக்தானாம் பூஜிதாம் பூஜயாமி |
சதாம் பக்த்யா கல்யாணீம் ஸர்வகாதமாம் ||

(பக்தர்களால் எப்போதும் பூஜிக்கப்பட்டு அவர்களுக்கு எந்தச் சக்தி மங்களத்தைச் செய்கின்றதோ, அந்தக் கல்யாணியாகிய சக்தியை வணங்குகிறேன்.)


************* 


சந்த்ரகாந்தா துர்கா

நவராத்திரியின் மூன்றாம் நாள் அன்னை நவதுர்க்கைகளில் , முக்கண்களுடன் பிறைச்சந்திரனை தலையில் சூடியவளாக, புலி வாகனத்தில் பவனி வருபவளாக , சிவபெருமானை தவம் செய்து கைபிடித்த பின் அவரது ஆபரணமான சந்திரனை சிரசில் சூடிய சிவபத்னியாக சந்த்ரகாந்தா துர்காவாக வணங்கப்படுகின்றாள். அன்னை அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகி. அன்னையில் சிரசில் சூடிய இந்த அர்த்த சந்திரன் அவள் முடியில் மணி போல விளங்குவதால் அன்னைக்கு இந்த திருநாமம். மஹா திரிபுரசுந்தரியாக பழுப்பு வண்ணத்தவளாக விளங்குகின்றாள் இந்த துர்கா.

சந்திரகாந்தக் கல் எப்படி சந்திரனின் குளுமையைத் தன்னுள் வாங்கிக் கொண்டு நீரைப் பொழிகின்றதோ அப்படியே அம்பாள் நம் வெம்மையைத் தன்னுள் வாங்கிக் கொண்டு குளுமையான கருணை நீரைப் பொழிகின்றாள். இங்கே வெம்மை என்பது நம் வினைகளைக் குறிக்கின்றது.


பிண்டஜப்ரவராரூடா சண்ட கோபாஸ்த்ரகைர் யுதா |
ப்ரஸாதம் தநுதே மஹ்யம் சந்த்ர கண்டேதி விஸ்ருதா ||

என்பது சந்த்ரகாந்தா துர்காவின் ஸ்லோகம் ஆகும்.

( ஆக்ரோஷமான புலி வாகனத்தில் பவனி வரும் சந்த்ரகாந்தா துர்கா அடியேனை காக்கட்டும். )


***********



நேற்றைய தினம் திருமயிலையில் முருக நாயனார் சரிதம் விளக்கப்பட்டிருந்தது  சில காட்சிகள் இதோ.

முருக நாயனார் வரலாறு 

**********************


ரோக நிவாரண அஷ்டகம்

காளினி நீயே காமினி நீயே
கார்த்திகை நீயே துர்க் கையளே |

நீலினி நீயே நீதினி நீயே
நீர் நிதி நீயே நீர் ஒளியே ||

மாலினி நீயே மாதினி நீயே
மாதவி நீயே மான் விழியே |

ரோக நிவாரணி சோக நிவாரணி

தாபநி வாரணி ஜெய துர்க்கா || (3)

***********




முருக நாயனார்  மலர்  தோட்டம் அமைத்து மலர் கொய்து 


மாலை தொடுத்து சிவ பெருமானுக்கு சமர்பித்து வந்தார் 
முக்தியும் பெற்றார்.


துக்க நிவாரணி அஷ்டகம்

சங்கரி சௌந்தரி சதுர்முகன் போற்றிடச்
சபையினில் வந்தவளே
பொங்கரி மாவினில் பொன்னடி வைத்துப்
பொருந்திட வந்தவளே
எங்குலந் தழைத்திட எழில் வடிவுடனே
எழுந்த நல் துர்க்கையளே
ஜெய ஜெய சங்கரி கௌரி க்ருபாகரி
துக்க நிவாரணி காமாக்ஷி (3)

***********

முண்டகக்கண்ணி அம்மன் 
அன்னவாகன கொலு 

ஸ்ரீ மந்தர மாத்ருகா புஷ்ப மாலா ஸ்தவம் 

(ஸ்ரீ ஆதி சங்கர பகவத் பாதர் அருளியது)

ஆதி சங்கரரால் இயற்றப்பட்ட இந்த ஸ்தோத்திரதை பாராயணம்  செய்வது அம்பாளுக்கு நாம்  புரியும் மானசீகமாக பூஜை செய்வதாகும்.  இந்த ஸ்தோத்திரத்தில் மூன்று சிறப்புகள் உள்ளன. முதலாவது ஸ்ரீவித்யா உபாசகர்களுக்கு மிகவும் இன்றியமையாத ஸ்ரீ லலிதா மஹா த்ரிபுரஸுந்தரியின் பஞ்ச தசாக்ஷரி  மந்திரத்தின் பதினைந்து எழுத்துக்களை முதல் எழுத்தாகக் கொண்டு ஒவ்வொரு ஸ்லோகமும் அமைந்துள்ளது. ஆகவே இந்த ஸ்தோத்திரத்தை அம்மன் முன்னர் பாராயணம் செய்யும் போது மந்திரப்பூர்வமாக அன்னையை துதித்த பரிபூரண பலன் கிட்டுகின்றது. இரண்டாவது  சோடசோபசாரம் என்னும் பதினாறு உபசார முறைகளை அருமையாக ஆச்சார்யர் இந்த  ஸ்தோத்திரத்தில் விளக்கியுள்ளார். மூன்றாவது விஸ்தாரமாக பூஜை செய்ய முடியாதவர்களும் இந்த ஸ்தோத்திரத்தை படிப்பதன் மூலம் அவ்வாறு பூஜை செய்த பலனைப்  அன்னையின் அருளால் நிச்சயம் பெறுவர்.

இப்பதிவில் ஏழாவது ஸ்லோகம் முதல் பத்தாவது ஸ்லோகம் வரை காணலாம் அன்பர்களே.

இந்த ஏழாவது ஸ்லோகம் அன்னைக்கு சந்தனம் குங்குமம் - கண்மை   முதலியவற்றால் அலங்கரிப்பதை  விளக்குகின்றது
ஸர்வாங்கே கனஸார-குங்கும-கன-
 ஸ்ரீகந்த-பங்காங்கிதம்
கஸ்தூரீ-திலகஞ்ச பாலபலகே
கோரோசனாபத்ரகம்  |
கண்டாதர்சன-மண்டலே நயனயோர்-
 திவ்யாஞ்ஜனம் தேSஞ்சிதம்
கண்டாப்ஜே ம்ருகநாபி-பங்க மமலம்
 த்வத்-ப்ரீதயே கல்பதாம்   ||
ர்வ-அங்கே கனஸார குங்கும-கன
 ஸ்ரீகந்த- பங்க-அங்கதிதம்
கஸ்தூரீ திலகம்  பால-பலகே
 கோரோசநா பத்ரகம்  |
கண்ட ஆதர்சன மண்டலே நயநயோ:
 திவ்ய-அஞ்ஜநம் தேsஞ்சிதம்
கண்ட-அப்ஜே ம்ருகநாபி-பங்கம்- அமலம்
 த்வத்-ப்ரீதயே கல்பதாம் || 7.
ஹேதேவி!உனது  திருமேனி  முழுவதும் பூசுவதற்கு கெட்டியான குங்குமப்பூபச்சை கற்பூரம் கலந்த சந்தனக் கலவையும்பளபளப்பான  பலகை போன்ற நெற்றியில் கஸ்தூரீ திலகமும்கண்ணாடி போன்று வளவளப்பும்பிரகாசமும் கொண்ட கன்னத்தில் கோரோசனைக் கோடும்கண்களில் திவ்யமான மையும்கழுத்து பாகத்தில் கஸ்தூரியுமான தொப்புள் விழுது ஆகியவற்றால் உனக்கு அலங்காரம் செய்கின்றோம்,  அது உனது மகிழ்ச்சியை கூட்டுவிப்பதாக இருக்கட்டும்.
கனஸார – கற்பூரம், குங்குமகன- குங்குமப்பூ, பாலபலகே- பலகை போன்ற நெற்றியில், கண்டாதர்சன மண்டலே- கண்ணாடி போன்ற கன்னப்பிரதேசத்தில், ம்ருகநாபி-பங்க – கஸ்தூரிக் குழம்பு.

இந்த எட்டாவது ஸ்லோகம்  அம்பாளுக்கு மலர் மாலை சார்த்தி அலங்கரிப்பதை விளக்குகின்றது.


 திருமயிலை ஐதீகம் 
( ஆடும் மயிலாய் உருவெடுத்து அன்னை சிவபூஜை செய்யும் கோலம்)
ல்ஹார-உத்பல மல்லிகா மருவகை:
 ஸெளவர்ண பங்கேருஹை:
ஜாதீ சம்பக மாலதீ வகுலகை:
 மந்தார  குந்த ஆதிபி:  |
கேதக்யா கரவீரகைபஹுவிதை:
 க்லுப்தாஸ்ரஜோ மாலிகா:
ஸங்கல்பேன ஸமர்ப்பயாமி வரதே
 ஸந்துஷ்டயே  க்ருஹ்யதாம்   || 8.
ஹே தேவி! வரங்களை கொடுத்தருள்பவளேசெங்கழுநீர் மலர்,  கருங்குவளைமல்லிகைமருக்கொழுந்து,  மஞ்சள் தாமரைஜாதிப்பூ, சண்பகம்,  மகிழம்பூ,  தும்பைப்பூ, தாழம்பூ,  அலரிப்பூ ஆகிய மலர்களால் தொடுக்கப்பட்ட மாலைகள்சரங்கள் மனதளவில் ஸமர்பிக்கின்றேன்இவை உனக்கு மகிழ்ச்சியளிக்கட்டும்.
கல்ஹாரம் – செங்கழுநீர் மலர், உத்பலம்- குவளைப்பூ, மகுவக – மருக்கொழுந்து, வகுல- மகிழம்பூ, குந்த-தும்பைப்பூ, கேதகீ- தாழம்பூ, கரவீர- அலரிப்பூ, ஸ்ரஜ - மாலை
இந்த ஒன்பதாவது ஸ்லோகம்  அம்பிகைக்கு  தூபம்  காண்பித்து  வாசனை புகையூட்டி சுற்றுச்சூழலை  நறுமணம் கமழச் செய்வதை விளக்குகின்றது.

ந்தாரம் மதனஸ்ய நந்தயஸி யை:
 அங்கை: அனங்க- உஜ்ஜ்வலை:
யை: ப்ருங்க- ஆவலி நீல- குந்தல-பரை:
  பத்னாஸி தஸ்ய- ஆசயம் I
தானீ- இமானீ தவ அம்ப! கோமலதராணி-
 ஆமோத-லீலா க்ருஹாணி-
ஆமோதாய தசாங்க குக்குலு-க்ருதை:
 தூபை: அஹம் தூபயே || 9.
ஹே அன்னையேஉனது மிக மிருதுவான வாசனை மிக்க கேலீக்ருஹங்களை தசாங்கம்குங்கிலியம்பசுநெய் முதலியவற்றால் புகைத்து மணம் கமழ வைக்கிறேன்முதலாவதாகமன்மதனையடக்கிய பரமேச்வரனுக்கே காம விகாரத்தையுண்டு பண்ணும் சில உடற்பாகங்கள்இரண்டாவதாக பரமேச்வரனின் புத்தியை ஸ்தம்பிக்கச்செய்யும் நீலமான கேசம் - மொய்க்கும் வண்டுக்கூட்டமென விளங்குமவற்றையும் புகை போட்டு மணக்கவைக்கிறேன்.
ஆயசம் – உள்ளம், குக்குலு – குங்கிலியம்
இந்த பத்தாவது ஸ்லோகம்  தீபம்  ஏற்றி அன்னையின் ஸந்நிதானத்தை  கண்டு வணங்குவதற்கு ஏதுவாக  பிரகாசமாக்குவதை விளக்குகின்றது.

க்ஷ்மீம்- உஜ்வலயாமி ரத்ன-நிவஹ- உத்
பாஸ்வத்தரே மந்திரே
மாலா-ரூப விலம்பிதை:மணிமய
ஸ்தம்பேஷு ஸம்பாவிதை:  I
சித்ரை: ஹாடக-புத்ரிகா-கர-த்ருதை:
 கவ்யை: க்ருதைவர்த்திதை:
திவ்யை: தீபகணை: தியா கிரிஸுதே!
ஸந்துஷ்டயே கல்பதாம் II   10.
இரத்தின கற்கள் இழைத்த உனது திருக்கோவிலில் மாலை போல் தொங்குகின்றவையும்இரத்தினமயத் தூண்களில் நிழலாகத் தெரிகின்றனவையும்பலவித தங்கப் பெண் பதுமைகளால் கையில் ஏந்திய வண்ணம் என்னும் பலவித   பசுநெய் விளக்குகளால் மனதளவில் அழகை கூட்டுவிக்கிறேன்.  மலை மகளே அது உன்னை மகிழ்விக்கட்டும்.
லக்ஷ்மீம்- பிரகாசத்தை, ஹாடக புத்ரிகா_ தங்கப் பதுமை


*********************


கற்பகாம்பாள் சரஸ்வதி அலங்காரம்


திருமயிலையில் நவராத்திரியின் மூன்றாம் நாள் கற்பகாம்பாள் வெள்ளைக் கலை உடுத்தி திருக்கரங்களில்  புத்தகம், அக்ஷமாலை வீணை தாங்கி கலைமகளாக கொலு தரிசனம் தருகின்றாள். முன் தினம் காமதேனுவில் கற்பகமாக உடலை ஆதாரமான உண்டி தருபவளாக   தரிசனம் தந்த அம்மன் இன்று ஆத்மாவிற்கு ஆதாரமான  கல்வி என்னும் ஞானத்திற்கு தேவியான சரஸ்வதி தேவியாய் அருள் பாலிக்கின்றாள்.

திருமயிலை கொலுவில் மாப்பிள்ளை விநாயகர்


அழகன் முருகன் 

*************************
அபிராமி அம்மை பதிகம்

வாடாமல் உயிர் எனும் பயிர் தழைத்து ஓங்கி வர 
அருள் மழை பொழிந்தும் இன்ப

வாரிதியிலே நின்ன(து) அன்பெனுஞ் சிறகால்
வருந்தாமலே அணைத்துக்

கோடாமல் வளர்குஞ்சரம்  தொட்டுஎறும்பு கடை
கொண்டகரு ஆன சீவ

கோடிகள் தமக்கு புசிக்கும் புசிப்பினைல் 
குறையாமலே கொடுத்து 

நீடாழி உலகங்கள்யாவையும் திருஉந்தி
நெட்டு தனிலே தரிக்கும் 

நின்னை அகிலங்களுக்கு அன்னை என்று ஓதாமல்
நீலி என்று ஒதுவாரோ?

ஆடாய நான் மறையின்  வேள்வியால் ஓங்கு புகழ் 
ஆதி கடவூரின் வாழ்வே!

அமுதீசர் ஒரு பாகம் அகலாத சுகபாணி!
அருள்வாமி! அபிராமியே!   (5)

பொருள்: சீவராசிகள் என்னும் உயிர்களை படைப்பவள் அன்னை. அந்த்ப்பப்யிர்கள் வாடாமல் என்றும் தழைத்து ஓங்கி உயர்ந்து  வளர, தன்  அருள் மழை பொழிந்து  அப்பயிர்களை இன்பக்கடலிலே ஆழ்த்தி தன் அன்பென்னும் சிறகால் அணைத்துக் கொள்பவளும் அவளே. வேதங்களின் வாக்குப்படி ந்தைபேரும்  யாகங்களால் புகழ் பெற்ற புண்ணிய ஸ்தலமான திருக்கடவூரில் உறைபவளே! அமுதீசரின் இட பாகத்தை விட்டு ஒரு போதும் அகலாதவளே! கிளியை தன் திருக்கரத்தில் ஏந்தியவளே!அனைவருக்கும் அருள் புரிபவளே! அபிராமியே என்று அன்னையின் கருணையை வியந்து பாடுகின்றார் அபிராமி பட்டர்.

பல்குஞ்சரம் தொட்டு எறும்புகடை ஆனது ஒரு 
பல் உயிர்க்கும் கல் இடைப்

 பட்ட தேரைக்கும் அன்றுப்பவித்திடு கருப்
பையுறு ஜீவனுக்கும்

மல்கும் சராசரப் பொருளுக்கும் இமையாத
வானவர் குழாத்தினுக்கும்

மற்றும்  ஓரு மூவருக்கும் யாவர்க்கும் அவரவர்
மனசலிப்பு இல்லாமலே

நல்கும் தொழிற்பெருமை உண்டாய் இருத்தும்மிகு
நவநிதி உனக்கு இருந்தும்

நான் ஒருவன் வறுமைய்யால் சிறியன் ஆனால்அந்
நகைப்பு உனக்கே அல்லவோ?

அல்கலந்து உம்பர்நாடு அளவெடுக்கும் சோலை
                                                    ஆதி கடவூரின் வாழ்வே!
 
                              அமுதீசர் ஒரு பாகம் அகலாத சுகபாணி!
                                                  அருள்வாமி! அபிராமியே!   (6)

பொருள்: யானை முதல் எறும்பு வரை உள்ள பல்விதமான உயிர்களுக்கும், கல்லுக்குள் இருக்கும் தேரைக்கும், கருவில் உள்ள ஜீவனுக்கும் மற்றும் அசையும், அசையா பொருள்களுக்கும், தேவர் கூட்டத்திற்கும், மும்மூர்த்திகளுக்கும், மற்றும் அகிலத்தி; உள்ள அனைவருக்கும் அவரவர் மனம் சோர்வடையாதபடி அவர்கள் செய்ய வேண்டிய தொழில்களை தந்தருளும் பெருமைஉனக்கு உண்டு. அடர்ந்து இருள் செறிந்து வானுலகை அளப்பது போல் வளர்ந்துள்ள சோலைகள் சூழ்ந்த திருக்கடவூரின் வாழ்வே! அமுதீசர் இடப்பாகம் ஒரு போதும் அகலாத அன்னையே! கிளியை திருக்கரத்தில் ஏந்தியவளே! அனைவருக்கும் அளவிலாது அருள்புரிபவளே! அபிராமவல்லியே! நவநிதியும் உன்னிடம் இருந்தும் உன் பகதனாகிய நான் வறுமையில் வாடினால் அதனால் உண்டாகும் இகழ்ச்சி உனக்கல்லவோ? என்று அன்னையிடம் வினவுகிறார் அபிராமி பட்டர்.   


(அபிராமி அம்மன் பதிகப் பாடல்களுக்கு இன்னும் விரிவான  உரையை காண  அபிராமிதாசன் மீனாட்சி சுந்தரம் மோகன் அவர்களின் "அபிராமி அம்மனின் பதிகங்கள்"   புத்தகத்தைக் காணலாம்)
*************************   

                                                                                                                                                  அம்மன் அருள் தொடரும். . . . 

2 comments:

Nagendra Bharathi said...

அருமை. நன்றி

S.Muruganandam said...

மிக்க நன்றி நாகேந்திர பாரதி