Wednesday, July 15, 2015

முக்தியளிக்கும் முக்திநாதர் தரிசனம் - 17

ஜனக்பூர் தரிசனம் 


இவர்கள் குழுவில் இருந்து சிலர் விமானம் மூலமாக டெல்லி வந்து பின்னர் சென்னை வந்தடைந்தனர்.  இன்னொரு குழுவினர் காத்மாண்டுவிலிருந்து பேருந்து மூலமாக மஹேந்திர நெடுஞ்சாலை வழியாக  ஜனக்பூருக்கு புறப்பட்டு சென்றனர். ஜனக்பூர் நேபாளத்தில்தான் அமைந்துள்ளது. காத்மாண்டில் இருந்து 135 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது.  பேருந்தில் சுமார் 7 மணி நேரம் பயணம். இப்பகுதி சமவெளி என்பதால் பசுமையான வயல்களைக் காணலாம். காத்மாண்டுவிலிருந்து சிறு விமானம் மூலமும் ஜனக்பூரை அடைய முடியும். ஜனக்பூரில் இருந்து சிறு புகைவண்டி பாதை (Nattow Gauge)  இந்திய  எல்லையான ஜயநகர் வரை உள்ளது.  


ஜானகி மந்திர்

சீதா சுயம்வரத்தில்  சிவ   தனுசை முறித்து  சீதையை இராமர் திருமணம் செய்து கொண்ட இடம் ஜனக்பூர், எனவே  கார்த்திகை  சுக்லபக்ஷ பஞ்சமி விவாக பஞ்சமி என்று இந்த ஜனக்புரி ஆலயத்தில் சிறப்பாக கொண்டாடப்படுகின்றது, மேலும் இராமநவமியும் மிக சிறப்பாக கொண்டாடப்படுகின்றது. ஹோலி, சாத் பண்டிகை, தீபாவளியும் மிகவும் விசேஷம். 




ஜனக்பூர் மற்றும் சீதாமார்ஹி  தரிசனம் செய்து விட்டு அப்படியே அங்கிருந்து கல்கத்தா சென்று பின்னர் இரயில் மூலமாக சென்னை வந்து சேர்ந்தனர்.  

விவாஹ மந்திர்

ஜனக்பூர் ஜனக மஹாராஜாவின் தலை நகரம், சீதா இராமர் திருக்கல்யாணம் நடந்த இடம். மேலே உள்ளது கல்யாண மண்டபம்.  சீதா மார்ஹி  ஜனகருக்கு சீதா தேவி கிடைத்த இடம். அதாவது சீதா தேவியின் பிறந்த இடம்.  இது பீகார் மாநிலத்தில் தற்போது அமைந்துள்ளது. 

சீதா இராமர் திருக்கல்யாணக் கோலம் 


ஜனக்புரிலிருந்து சீதாமார்ஹி 60 கி. மீ தூரம் சுமார் 2 மணி நேரத்தில் எல்லையைக் கடந்து வந்து சேரலாம். சீதாமார்ஹியில் இருந்து 4  தொடர்வண்டிகள் கல்கத்தாவிற்கு உள்ளது. இக்குழுவினர்  கொல்கத்தா வந்து பின்னர் அங்கிருந்து விமானம் மூலம் சென்னை திரும்பினர்.  இவர்கள்  முக்திநாத் யாத்திரைப் பதிவுகள்  இத்துடன்,  சீதா ராமர் தரிசனத்துடன் நிறைவு பெறுகின்றன  வந்து தரிசனம் பெற்ற அனைவருக்கும் நன்றி.   

2 comments:

ப.கந்தசாமி said...

அருமையான தொடர். உங்கள் அனுபவங்களைப் பகிர்ந்ததற்கு மிக்க நன்றியும் பாராட்டுகளும். அடுத்த தொடரை எதிர் நோக்கிக் காத்திருக்கிறோம்.

S.Muruganandam said...

அவனருளால் அடுத்த வாய்ப்புக் கிட்டும் போது அவசியம் பகிர்ந்து கொள்கின்றேன் ஐயா.