Tuesday, October 8, 2013

ஆனந்த நவராத்திரி -5

அம்மன் கொலு தர்பார்


அசோக்நகர் சொர்ணாம்பாள் 
கருமாரி அம்மன் அலங்காரம்தாயே கருமாரி! எங்கள் தாயே கருமாரி!
தேவி கருமாரி! துணை நீயே மகமாயி!

 மேற்கு மாம்பலம் 
விசாலாக்ஷி அம்பாள் கொலு


மேற்கு மாம்பலம் விஸ்வநாதர் ஆலய
 நவராத்திரி கலை நிகழ்ச்சியில் பரத நாட்டியம்
மகாலிங்கபுரம் பிரஹத் சுந்தர குஜாம்பாள்
 கன்னியாகுமரி அலங்காரம்


 நீலதிரைக் கடல் ஓரத்திலே நின்று
 நித்தம்  தவம் செய்யும் குமரி அன்னை தாள் போற்றிபிரஹத் சுந்தர குஜாம்பாள்
மஹா லக்ஷ்மி அலங்காரம்


திருமகளே  திருப்பாற் கடலூடன்று தேவர் தொழ
வரு மகளே  உலகமெல்லாமும் என்றென்றும் வாழ வைக்கும்
ஒரு மகளே திருமால் உரத்தே உற்று உரம் பெரிது
தரு மகளே தமியேன் தலை மீது நின் தாளை வையே!ஸ்ரீ மந்தர மாத்ருகா புஷ்ப மாலா ஸ்தவம் (ஸ்ரீ ஆதி சங்கர பகவத் பாதர் அருளியது)

14-17 ஸ்லோகங்கள்


 குடை- சாமரம் முதலியவற்றால்  உமையம்மைக்கு  உபசாரங்கள் செய்வித்து மரியாதை செய்வதை இந்த பதினான்காவது ஸ்லோகத்தில் ஜகத்குரு சங்கரர் அருளுகின்றார்.
லக்ஷ்மீர்-மௌக்திக லக்ஷ-கல்பித-
 ஸிதச்சத்ரம் து தத்தே ரஸாத்
இந்த்ராணீ ரதிச்ச சாமரவரே
 தத்தே ஸ்வயம் பாரதீ  I
வீணா-மேண-விலோசனா:ஸுமனஸாம்
  ந்ருத்யந்தி தத்ராகவத்-
பாவைராங்கிக-ஸாத்விகை:ஸ்புடரஸம்
  மாதஸ்-ததா லோக்யதாம்  ||
க்ஷ்மீ: மௌக்திக-லக்ஷ-கல்பித-
 ஸித:-சத்ரம் து தத்தே ரஸாத்
இந்த்ராணீ ரதி: ச சாமர-வரே
 தத்தே ஸ்வயம் பாரதீ  I
வீணாம்-ஏண-விலோசனா:ஸுமனஸாம்
 ந்ருத்யந்தி தத் ராகவத்-
பாவை: ஆங்கிக-ஸாத்விகை:
 ஸ்புட-ரஸம் மாத:! தத் ஆலோக்யதாம்  || 14

ஹே அன்னையே! லக்ஷ்மிதேவி, பல முத்து மணிகளால் ஆகிய வெண்பட்டுக்குடையை ஆர்வமாக தாங்கி தலைமேல் பிடிக்கிறாள்.  பிரேமையால் இந்த்ராணியும், ரதியும் இரு வெண் சாமரங்களை வீசுகின்றனர். ஸரஸ்வதி தேவியும் வீணை வாசிக்கிறாள்.  மான் விழி படைத்த மற்ற தேவ மங்கையர் ராக பாவங்களையொட்டி கை கால் அசைவுகளாலும், ஸாத்விக பாவங்களாலும் ரஸம் ததும்ப நடனம் புரிகின்றனர்.  அன்னையே இவை எல்லாம் கேட்டு மகிழலாமே!
ஸிதச்சத்ரம்-வெண்குடை, ரஸாத்-பிரேமையால், ஏண விலோசனா ஸுமனசாம்: மான்விழி படைத்த  தேவ கன்னிகைகள் ஸ்புடரஸம்- உள்ளத்தின் உணார்ச்சிகளை வெளிப்படுத்தும்.

மானசீக பூஜையின் நிறைவாக, பிரதக்ஷிண நமஸ்காரம் செய்து  மலையரையன் பொற்பாவையை வணங்குவதை இந்த பதினைந்தாவது ஸ்லோகத்தில் குரு புங்கவர் சங்கர தேசிகர் அருளுகின்றார். 
ஹ்ரீங்காரத்ரய-ஸம்புடேன
 மனுனோபாஸ்யே த்ரயீ-மௌலிபி:
வாக்யைர்-லக்ஷ்யதனோ தவ ஸ்துதிவிதௌ
 கோ வா க்ஷமேதாம்பிகே I
ஸல்லாபா: ஸ்துதய: ப்ரதக்ஷிண-சதம்
 ஸஞ்சார ஏவாஸ்து தே
ஸம்வேசோ மனஸ: ஸமாதி-ரகிலம்
 த்வத்ப்ரீதயே கல்பதாம் II
ஹ்ரீம்கார-த்ரய-ஸம்புடேன
 மனுனா உபாஸ்யே த்ரயீ-மௌலிபி:
வாக்யை:-லக்ஷ்ய-தனோ!  தவ ஸ்துதி-விதௌ
 கோ வா க்ஷமேத அம்பிகே  I
ஸல்லாபா: ஸ்துதய: ப்ரதக்ஷிண-சதம்
 ஸஞ்சார: ஏவ-Sஸ்து தே
ஸம்வேசோ மனஸ: ஸமாதி: அகிலம்
 த்வத்-ப்ரீதயே கல்பதாம் II 15
ஹே அம்பிகே! மூன்று ஹ்ரீங்காரங்களின் கூட்டால் அறிய வேண்டியவள் நீ. உபநிஷத்துக்களால் அறியத்தக்கவளும் கூட. உன்னை ஸ்தோத்திரம் செய்ய எவர்தான் சக்தியுடையவர்?ஆகவே, நான் பேசுவதெல்லாம் உன் ஸ்தோத்ரங்களாகவும், நான் இங்கும் அங்கும் சஞ்சரிப்பதே உன்னை பிரதக்ஷிணம் செய்வதாகவும், நான் படுத்து உறங்குவதே உன்னை நமஸ்கரிப்பதாகவும் பரிணமித்து, உனக்கு மகிழ்ச்சியை தரவல்லதாக அமையட்டும்.
த்ரயீ – மூன்று வேதங்கள், ஸம்வேச – ஓய்வு, நித்திரை

இனி வரும் இரு ஸ்லோகங்களும் பலச்ருதியாக அமைந்தவை. அதாவது இந்த ஸ்லோகத்தை பக்தி சிரத்தையுடன் பாராயணம் செய்து தேவியை பூஜிப்பதால் உண்டாகும் பலன்களை குறிப்பிடுகின்றன.
ஸ்ரீமந்த்ராக்ஷர-மாலயா கிரிஸுதாம்
 ய: பூஜயேத்-சேதஸா
ஸந்த்யாஸு ப்ரதிவாஸரம் ஸுநியதஸ்-
 தஸ்யாமலம் ஸ்யான்மன:
சித்தாம்போருஹ-மண்டபே கிரிஸுதா
 ந்ருத்தம் விதத்தே ரஸாத்
வாணீ வக்த்ர-ஸரோருஹே ஜலதிஜா
 கேஹே ஜகன்மங்கலா II 
ஸ்ரீமந்த்ராக்ஷர-மாலயா கிரிஸுதாம்
 ய: பூஜயேத்-சேதஸா
ஸந்த்யாஸு ப்ரதிவாஸரம் ஸுநியத:
 தஸ்ய அமலம் ஸ்யான்-மன:
சித்த அம்போருஹ-மண்டபே கிரிஸுதா
 ந்ருத்தம் விதத்தே ரஸாத்
வாணீ வக்த்ர-ஸரோருஹே ஜலதி-ஜா
 கேஹே ஜகத்-மங்கலா II  16.

எவரொருவர், தினந்தோரும் காலையிலும் மாலையிலும் மந்த்ரபீஜாக்ஷரம் பொதிந்த இந்த ஸ்தோரத்தை மனம் வைத்து பாராயணம் செய்து தேவியை பூஜிக்கிறாரோ, அவர் மனம் அமைதி கொள்வது மட்டுமின்றி, அவர் ஹ்ருதயத் தாமரையில் ஸ்ரீதேவி மகிழ்ச்சியுடன் களிநடனம் புரிவாள், பேச்சில் ஸரஸ்வதீ நடனம் புரிவாள், வீட்டில் உலகுக்கெல்லாம் மங்கல நாயகியான லக்ஷ்மீ வாஸம் செய்வாள்.

இதிகிரிவர புத்ரீ பாத ராஜீவ பூஷா
புவன-மமலயந்தீ ஸூக்தி ஸெளரப்ய-ஸாரை: I
சிவபத மகரந்த ஸ்யந்தினீயம் நிபத்தா
மதயது கவிப்ருங்கான் மாத்ருகா-புஷ்பமாலா ||
இதிகிரிவரபுத்ரீ- பாத- ராஜீவ பூஷா
புவனம்- அமலயந்தீ ஸூக்தி- ஸெளரப்ய-ஸாரை: I
சிவபத- மகரந்த ஸ்யந்தினீ- இயம் நிபத்தாமதயது
கவிப்ருங்கான் மாத்ருகா-புஷ்பமாலா || 17
 கிரி ராஜா தனயை என்றறிந்த அன்னையின் மந்த்ராக்ஷரம் பொதிந்த புஷ்பமாலை, நறுமணத்தால் உலகை தூய்மை பெறச் செய்து, அன்னையின் திருவடிகளுக்கு அணிகலனாக அமைந்துள்ளது. சிவனின் திருப்பாதங்களின் மகரந்தத்தையும் பெருக்குவதாக அமைக்கப்பட்டுள்ளது. ஆகவே கவிகளாகிய தேன் வண்டுகளையும் எக்களிப்படையச் செய்யட்டும்.
 ஸ்ரீ மந்த்ர மாத்ருகா புஷ்ப மாலா ஸ்தவம் முற்றிற்று .

No comments: