Thursday, June 20, 2013

.ஹிமாலய சுனாமி


இறைவா! ஏன் இந்த சோதனை?........................


உத்தரக்காண்ட் மற்றும் ஹிமாசல் பிரதேச மாநிலங்களில் காலத்திற்கு முன்னாலேயே பெய்த பெருமழையால் (ஹிமாலய சுனாமி) நதிகளில் வெள்ளப் பெருக்கு, சாலைகள், பாலங்கள், வீடுகள், கிராமங்கள் கூட  அனைத்தும் சேதமடைந்து விட்டன.

 பல இடங்களில் 60000திற்கும் மேற்பட்ட யாத்திரிகள் சிக்கிக்
கொண்டிருக்கிறார்கள்.அவர்களுக்கு, உணவு, தண்ணீர் மருந்து எதுவும் இல்லை.

 எத்தனை உயிர்கள் போயின என்று யாருக்கும் தெரியவில்லை, ஆற்றில் அடித்து செல்லப்பட்டிருக்கிறார்கள், நிலச் சரிவின்  காரணத்தில் ஏற்பட்ட சேற்றில் எத்தனை பேர் புதைபட்டிருக்கின்றனரோ  தெரியவில்லை. 

அநேகர் இதிலே இறைவனை தரிசனம் செய்ய புறப்பட்டு சென்றவர்கள் என்பதுதான் கொடுமை.

மாநில மத்திய அரசுகளால் ஒன்றும் செய்ய முடியவில்லை, மலைப் பிரதேசம், சாலைகள் அனைத்தும் பழுதடைந்து விட்டன, மழையும் பெய்து கொண்டிருக்கின்றது. 

தொலைக்காட்சியில் பார்த்த காட்சிகள் மனத்தை உருக்குகின்றன, ஆற்றின் கரையோரம் கட்டிய அடுக்கி மாடி வீடுகள் எல்லாம் எதோ மண் வீடு போல  வெள்ளத்தினால் அப்படியே சரிந்து விழுகின்றன, வண்டிகள் எல்லாம் தண்ணீரின் பிரவாகத்தில் அடித்து செல்லப்படுகின்றன.கேதார்னாத் கோவிலை சுற்றி ஒன்றுமே இல்லை அனைத்தும் அடித்துச் செல்லபட்டுவிட்டன. சுற்றிலும் எல்லாம் அழிந்து விட கேதார்நாத் கோவில் மட்டும் எஞ்சியுள்ளது. தரிசனம் தொடங்க வருடங்கள் ஆகுமாம்   .


2010 வருடம் நாங்கள் 13 பேர் இவ்வாறுதான் ஒரு பெயர் தெரியாத குக்கிராமத்தில் இரண்டு நாட்கள் மாட்டிக்கொண்டோம், ஆகவே பெயர் தெரியாத அத்துவானக் காட்டில் மாட்ட்க்கொள்வது எவ்வளவு கொடுமையானது என்று தெரியும்.

அது ஒரு பங்கு என்றால் இதுவோ நூறு மடங்கு.

ஆயினும் " இறைவா! உன் பக்தர்களை காக்க ஏன் தவறிவிட்டீர்" என்று கதறுவதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்.  

இப்படித்தான் நடக்கும் என்று முன்னரே  கூறியும் உள்ளனர், ஒரு நாளில் பத்ரிநாத் செல்லும் வழியில் உள்ள இரு மலைகள் கீழே விழுந்து பத்ரிநாத் செல்லும் பாதை முற்றிலுமாக அடைபட்டுவிடும் என்று புராணங்களிலேயே உள்ளது. 

இறந்த ஆத்மாக்கள் அந்த இறைவனடி சேர மோட்ச தீபம் ஏற்றுவோம். தங்கள் உறவினர்களை இழந்தவர்கள் அனைவருக்கும் அந்த இறைவன் அதைத் தாங்கும்  சக்தியை அளிக்கட்டும்.

இனி மேலும் இது போன்று ஒரு சம்பவம் நடக்காதிருக்க வேண்டுவோம் என்று அவனிடம் மன்றாடுவோம்.

படாதபாடு பட்டு மாட்டிக்கொண்டிருப்பவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் இராணுவ, துணை ராணுவ வீரர்கள் அனைவருக்கும் ஆசீர்வாதங்கள், அருமையான பணி செய்து கொண்டிருக்கிறீர்கள்.

கண்ணீருடன்

அன்பன் கைலாஷி,

இதைப் படிப்பவர்கள் இதை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

6 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

வருத்தப்படும் சம்பவம்...

தொடராமல் இருக்க வேண்டும்...

Muruganandam Subramanian said...

//தொடராமல் இருக்க வேண்டும்...//

அப்படியே வேண்டிக் கொள்வோம் ஐயா.

pulipani said...

திருப்பதி பற்றியும் அவ்வாரே ., கூறப்பட்டுள்ளது .., எல்லாவற்றிக்கும் ., நாம் நீர் நிலைககளை அசுத்தம் செய்வதே மிகப்பெரிய காரணம் ,கங்கா முதல் ., காவேரி ..மகா மக குளம் வரை .., அனைத்து கோவில் குளங்களும் ., நீர் நிலைகளையும் ., அசுத்தம் செய்வதே நீர் நிலை தோசங்களை பெருக்கி அழிவிற்கு வித்திடுகிறது .,

தீர்த்த தேவதைகளை வேண்டுவோம் மனிப்புகேட்டு மன்றாடுவோம் ., செய்த வினனையும் , விதியும் ஒருபோதும் மாறுவதில்லை ..,
ஈசன் (மன) இறங்கும் வரை.

Muruganandam Subramanian said...

வாருங்கள் புலிப்பாணி ஐயா.

மிகவும் சரியாக சொன்னீர்கள்.

நீர் தேவதைகளிடமும் ஈசனிடமும் மன்னிப்பு கேட்போம்.

புலிப்பாணி சித்தர் அடிமை said...

வைராக்கிய தீர்த்த விரதம் பற்றி எமது வலைத்தளத்தில் www.pulipani.com பகிர்ந்துளேன் ., [இயற்க்கை சீற்றம் தற்சமையம் நடந்துளமையால்] ., மகாமகத் தீர்த்த வழிபாடு பற்றி அகஸ்திய விஜயம் இதழில் யாம் கண்டதை எமது வலைத்தளத்தில் பகிர்ந்துளேன்

Muruganandam Subramanian said...

தங்கள் வலைத் தலத்தைப் பார்த்தேன், மிகவும் அருமை. தொடரட்டும் தங்கள் பணி.