Tuesday, May 21, 2013

இமயமலையில் ஒரு இனிய யாத்திரை -39


பனி விழும் மலர்வனம்(பூக்களின் சமவெளி)

 அலங்கார நுழைவு வாயில்

வரைபடம்

மறு நாள் அதாவது 04-09-2012 அன்று காலை எழுந்து உலக பாரம்பரிய சின்னமான பூக்களின் சமவெளியைக் காண சென்றோம்அன்றே பத்ரி நாத்திற்கு செல்ல திட்டமிட்டிருந்த்தால் நாங்கள் காலைமணிக்கே சென்றோம் ஆனால்  8 மணிக்குப் பின்னரே  மலர் வனத்திற்குள் பயணிகள்  செல்ல அனுமதிக்கின்றனர்எனவே சிறிது நேரம் அங்கேயே நின்றிருந்து வெளியில் வைத்துள்ள தகவல் பலகையில் உள்ள தகவல்களைப் பார்த்துக்கொண்டு  இருந்தோம். அவற்றில் எந்தப் பகுதியில் எந்த மலர்கள் எந்த காலத்தில் மலர்கின்றன என்று விவரங்களை அளித்துள்ளனர்காட்டு இலாகா சிப்பந்திகளிடம் பேச்சுக் கொடுத்த போது பனி  உருக ஆரம்பித்தவுடன்  மலர்ச்செடிகள் துளிக்க ஆரம்பித்து விடுகின்றன பின்னர் சுமார் ஒரு மாதம் கழித்து மலர்கள்கள் மலரத் துவங்குகின்றன. நல்ல மழை பெய்தால் அதிக பூக்கள் பூக்கின்ரன என்று கூறினர்.  எனவே ஜூன் , ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்கள்  பூக்களின் சமவெளியைக் காண ஏற்ற சமயம் என்று கூறினார்கள். நுழைவுக்கட்டணமாக ரூ150/- வசூலித்தனர்



எங்கும் மலர்கள்



காட்டு இலாகா சிப்பந்திகள் யாரும் பார்வையாளர்களுடன் கூட வருவதில்லை.  மலர் வனத்தின் நடுவே ஒரே ஒற்றைபடிப் பாதைதான் உள்து அதில் ம்மால்  முடிந்த வரை நடந்து சென்று விட்டு மாலை 5 மணிக்குள் திரும்பி வந்து விட வேண்டும்குதிரைகள் மற்றும் எந்தவிதமான வாகனங்களுக்கும் அனுமதியில்லைபுகைப்படக்கருவிக்கு அனுமதி கட்டணம்  இல்லை ஆனால் சலனப்பட கருவிக்கு அனுமதி கட்டணம் வசூலிக்கின்றனர்அன்றைய  தினம் மேக மூட்டமாக இருந்ததாலும் நாங்கள் சீக்கிரமே சென்று விட்டதாலும்  நாங்கள் மட்டுமே பூக்களின் சமவெளியில் இருந்தோம்,  மழை பெய்யாமல் இருக்க வேண்டுமே என்று வேண்டிக்கொண்டே மலர் வனத்திற்குள் நுழைந்தோம்.









சுமார் 90  சதுர கி.மீ பரப்பளவில் உலகப்பாரம்பரிய சின்னங்களில் ஒன்றான இந்த பூக்களின் சமவெளி அமைந்துள்ளதுபல அரிய ஆல்பைன் மலர்களைக் கொண்டுள்ள இந்த மலர் வனம் பல இமயமலைக்குரிய மிருகங்களுக்கும் தாயகமாக விளங்குகிறதுஅவற்றுள் சில பனி சிறுத்தைகரடிகள்வரை ஆடுகள் ஆகியவை ஆகும்.    நான்கு பக்கங்களிலும் மலை சரிவுகள் நடுவில் சமவெளி அதன்  மத்தியில் ஓடி வரும் புஷ்பவதி ஆறு என்று அருமையான சூழ்நிலைகாணக் கண்கோடி வேண்டும் என்பர்களே அது போல முகர்க்க ஆயிரம் நாசி வேண்டும்,  எண்ணற்ற மலர்களின் கலவையான வாசனை அப்படியே நம்மை கிறங்க வைக்கின்றது.  இரவில் இம்மலர் வனத்தில் தங்கினால் பல தேவதைகளை காணலாம் என்பது இப்பகுதிய மக்களின் நம்பிகைஎனவே இரவில் யாரும் அங்கு தங்குவதில்லை.(அது இந்த நறுமணம் நமக்கு ஒத்துக்கொள்ளது என்பதாலும் இருக்கலாம்.) நடுவில் நாம் நடந்து  செல்லும் பாதை விடுத்து ஒரு அங்குலம் இடம் கூட இல்லாமல் முழுதுமாக பல் வகைப் பட்ட மலர் செடிகளால் நிறைந்து அற்புதமாக காட்சி தருகின்றது மலர் வனம் முதல் சிறிது தூரம் கற்கள் போடப்பட்டுள்ளன. மேலே செல்ல செல்ல பாதை வெறும் நடந்து செல்லும் பாதைதான்.  இனி இம்மலர்வனத்தின் சுவையான வரலாற்றைப் பற்றி காணலாமா அன்பர்களே?


   
இராமாயணப் போரில் மூர்ச்சையடைந்த இலக்குவனுக்காக சஞ்சீவினி மூலிகையை இங்கிருந்துதான் அனுமன் கொண்டு சென்றார் என்பது ஐதீகம்கர்வால் ஹிமாலயத்தில் புயான்டார் கங்கையின் மேற்பகுதியில் சுமார் 3600 மீ உயரம் முதல் 3900 அடி உயரத்தில் இந்த பூக்களின் சமவெளி அமைந்துள்ளதுநர பர்வதம் மற்றும் ரதபன் பர்வதங்கள் இதன் அரணாக  விளங்குகின்றன. 1931ம் ஆண்டு பிரான்க் ஸ்மித்எரிக் ஷிப்டன் மற்றும் ஹோல்ஸ்வொர்த் ( Frank S Smythe, Eric Shipton and R.L. Holdsworth) என்னும் மூன்று ஆங்கில மலையேறும் குழுவினர் காமேத் மலையேற்றம் செய்து விட்டு திரும்பி வரும் போது அதிர்ஷ்டவசமாக   இந்த பூக்களின் சமவெளியை கண்டு உலகுக்கு வெளிப்படுத்தினர்பின்னர் 1939ல் மார்க்கரெட் லெக்கி ( Margaret Leggie) என்னும் ஆங்கில தாவரவியல் விஞ்ஞானி இங்கிலாந்தின் எடின்பர்க் நகரிலிருந்து வந்து  இந்த பூக்களின் சமவெளியில் உள்ள மலர்களை ஆராய்ந்து கட்டுரைகள் எழுதினார்அவர் இங்கேயே வழுக்கி விழுந்து இங்குள்ள  தேவதைகளில் ஒருவராகி விட்டார்பின்னர் இவரது நினைவாக இவரது சகோதரி ஒரு நினைவிடம் அமைத்தார் அது இன்னும் இந்த பூக்களின் சமவெளியில் உள்ளது.

 பிரம்ம கமல் மலர்கள்

 புஷ்பவதி கங்கா நதி

Ranunculus, Pedicularis, MarshMarigold, Rhododendrons, Brahmakamal, Corydalis, Bistorta, Epilobium, Nomocharis, Oxypetala, Daisy, Sibbaldia, Anaphalis, Cypripedium Strawberry, Arisaema Costatum, Himalayan blue Poppy, Dianthus, Calendula, Yellow Anemones, Lilium என்னும் பல் வண்ண,  பல் வடிவபல மணம் உடைய  பூக்கள் இங்கு மலர்கின்றனபிரம்ம கமல்கள் மலர்கின்ற புண்ணிய பூமி இதுபூக்கள் மட்டும் அல்லாமல் பல அரிய மூலிகைகளின் தாயகமும் ஆகும் இந்த பூக்களின் சமவெளி.



பலவித மலர்கள்






மலர்களை சுமந்து வருவதால் புஷ்பவதி கங்கா என்று அழைக்கப்படும் ஆற்றின் கரையோரமாகவே செல்லும் ஒற்றையடிப்பாதையில் மெல்ல மெல்ல மேலேறி சென்றோம்சிறிதாக மழையும் பெய்யத் தொடங்கியதுவழியில் பல்வேறு இடங்களில் நீரின் தாரைகள் ஓடிய வடுக்கள் உள்ளனபெரிய மழை பெய்தால் பாறைகள் உருண்டு கீழே விழும் அபாயமும் உள்ளது ஒருவர் பின் ஒருவராக நான்கு பேரும் இயறகையழகை இரசித்துக்கொன்டே மலை  ஏறினோம்முதலில் நெடிதுயர்ந்த மரங்கள் அவற்றின் வேர்களில்  பாசி படிந்திருந்தது. அவற்றின் நடுவே பல வகை காளான்கள்கொஞ்சம்  மேலே சென்றால் புதர்கள்பின் மலர் செடிகள் என்று மாறும் அழகை இரசித்தோம்மேலே செல்ல செல்ல மாறி வரும் பூக்களை கண்டு களித்துக்கொண்டே  இவ்வளவு அழகை இங்கே யாரும் எளிதில்  வர முடியாத பிரதேசத்தில் ஓளித்து வைத்திருக்கின்ற இயற்கையன்னையின் திருவிளையாடலை வியந்து கொண்டே  சென்றோம்ஒரு இடத்தில் ஒரு ஊதாப் பூ கண் சிமிட்டுகின்றதுசற்று மேலே சென்றால் ரோஜா நிறப் பூக்கள் எங்களையும் சிறிது கவனியுங்களேன் என்று கெஞ்சுகின்றனஇன்னும் சிறிது மேலே சென்றால் மஞ்சள் பூக்கள் நாங்கள் ஒன்றும் அழகிலும் மணத்திலும் குறைந்தவர்கள் அல்ல  என்று பறை சாற்றுகின்றனஇவ்வாறு இயற்கையன்னையின் அற்புத மலர்களை இரசித்துக்கொண்டே  மலையேறினோம்நடுவில் ஒரு வால் இல்லாத சிறு முயல் பூக்களை சாப்பிடும் அழகை படம் பிடித்தோம்பனியால் பல இடத்தில்  இன்னும் மூடப்பட்டு சலசலத்து ஓடும் புஷ்பவதி ஆற்றின்  பிரவாகத்தை இரசித்தோம்சுமார் 2  கிமீ ஏறிய பிறகு பாதை புஷ்பவதி ஆற்றை கடந்து பூக்களின் சமவெளிக்குள் நுழைந்தோம்அந்த அற்புத காட்சியை எப்படி வர்ணனை செய்வதுவார்த்தைகளே போதாது

பூவையும் காயாவும் நீலமும் பூக்கின்ற
காவி மலர் என்றும் காணும்தோறும் – பாவியேன்
மெல் ஆவிமெய் மிகவே பூரிக்கும் அவ் அவை
எல்லாம் பிரான் உருவே என்று.

எத்தனை வித மலர்கள்


திரும்பி வரும் போது  வழியில் சில யாத்திரிகள்

வாலில்லாத சிறு முயல்

கங்காரியா கிராமம்


கங்காரியா குருத்வாரா

பூவைப் பூவையும்கரு நிற காயாம் பூவையும்கருநெய்தல்  பூவையும்பூக்கின்ற செங்கழுநீர் பூவையும் காணும் போது அவை எம் பெருமானின் திருஉருவத்தை நினைவுபடுத்துகின்றனஅவற்றை அவன் வடிவமாகவே எண்ணிப் பாவியேன் மகிழ்ந்து போகின்றேன்.அடியேனுடைய மென்மையான உயிரும் உடம்பும் இந்த மகிழ்ச்சியால் பூரித்துப்போகின்றன என்று நம்மாழ்வார் பாடிய பாடல்தான்  இந்த பூக்களின் சமவெளியில்  நின்ற போது மனத்தில் தோன்றியது

No comments: