Sunday, May 12, 2013

இமயமலையில் ஒரு இனிய யாத்திரை -37

  கோவிந்த காட்டிலிருந்து  கங்காரியா பயணம்

மறு நாள் அதிகாலை  எழுந்து காலைக்கடன்களை  முடித்து  கொண்டு வெளியே வந்த. போது  மழை சோ என்று கொட்டிக்கொண்டிருந்ததுஅதிகாலையிலேயே அர்தாஸ் நடந்து கொண்டிருந்தது. சுமார் 6.30  மணி வரை காத்திருந்தோம்  மழை நின்றபாடில்லை. மழையை பொருட்படுத்தாது மழைக்கோட்டை மாட்டிக்கொண்டு  கோவிந்தாம் எனப்படும் கங்காரியாவிற்கு  14 கி. மீ நடைப்பயணத்தை இருள் பிரிந்தும் பிரியாத வேளையில் துவக்கினோம் சுமார் அரை மணி நேரம் நடந்தும் கூட மழை விடவில்லை தண்ணீர் கீழே ஓடி வருவதால் பாதை மிகவும் வழுக்க தொடங்கியது, இப்படியே செல்வது மிகவும் கடினம் என்பதால் சுமார்கி.மீ தூரம் நடந்தபின்  பூல்னாமா(Pulnama) என்னும் கிராமத்தின் அருகில்  குதிரைகளை வாடகைக்கு அமர்த்திக்கொண்டோம்நாங்கள் குதிரைகளை அமர்த்திகொண்ட சுமார் கால் மணி நேரத்தில்  மழை நின்று நல்ல வெயில் வந்து விட்டது. குதிரைக்காரர் தனது செல்பேசியில் பாட்டுக்கேட்டுக்கொண்டே குதிரையை நடத்திக்கொண்டு  வந்தார்.   செல்லும் வழியில் மஞ்சு கொஞ்சும் மலை முகடுகள்இரு பக்கமும் நெடிதுயர்ந்த மரங்கள் நிழல் கொடுத்துக்கொண்டிருந்தன. புதர்களில் அருமையான பல வண்ண மலர்கள் பூத்துக் குலுங்க வலப்புறம் லக்ஷ்மண் கங்கா ஆறு துணைக்கு வந்து கொண்டிருந்ததுபல வித பறவைகள் கூவிக்கொண்டு பறந்து கொண்டிருந்தன. வண்டுகளின் அருமையான ரீங்காரம் என்று மிகவும் அற்புதமான சூழல்.

கங்காரியா செல்லும் வழியில் லக்ஷ்மண் கங்கா
 நதிக்கரையில் ஒரு உணவகம்

யமுனோத்ரி, கேதார்நாத் பாதைகளை நோக்கும் போது இவ்விடம் இன்னும் பசுமையாகவே உள்ளது. பல சீக்கியர்கள்  சரியான பாதை  அமைக்க அனுமதி வேண்டியும் அரசு அதை அனுமதிக்காமல் நடை பாதையாகவே வைத்துள்ளது நல்லதாகவே பட்டது. எனவே நிலச்சரிவுகள் மிகவும் குறைவுவழியில் வரும் கிராமங்களில் சிற்றுண்டி உண்ணவும்  மற்றும் தேநீர்  அருந்தவும்  கடைகள் உள்ளனநடுவில் ஒரு கிராமத்தில் சிறிது நேரம் அமர்ந்து இளப்பாறிக்கொண்டு குதிரைகளுக்கு சிறிது ஓய்வளித்துவிட்டு  காலை சிற்றுண்டியை முடித்துக்கொண்டு பின்னர் பயணத்தைத் துவக்கினோம். வழியில் ஜங்கில் சட்டி, (Jungle chatti) புயாண்டர்(Bhyundar), கிராமங்களை கடந்தோம்பல வண்ண மலர்களின் வாசனையும் அருமையாக இருந்தது தேனிக்கள்  ஆர்க்கிட் மலர்களில் இனிமையான தேனை சேகரித்துக்கொண்டிருந்தனவழியெங்கிலும் குப்பைகளைப்போட குழிகளை தோண்டி வைத்துள்ளனர். குறிப்பாக பிளாஸ்டிக் பொருட்களை உபயோகப்படுத்த வேண்டாம் இயற்கையை பேணுங்கள் என்னும் வாசகங்கள் வழியெங்கும் உள்ளன. இந்த குப்பைகளை சேகரித்து அப்புறப்படுத்துவதற்கென்றே  பலரை நியமித்துள்ளனர்அவர்கள் இப்பாதையை சுத்தமாக வைத்திருப்பதில் உதவுகின்றனர்பாதை முதலில் நன்றாக இருந்ததுபோக போக நிலச்சரிவுகள், நெடிய  ஏற்றம் என்று பாதை சிறிது கடினமானதாகவே உள்ளது ஆயினும் வயதான சீக்கியர்களும் கூட இந்த்  சிரமங்களை பொருட்படுத்தாமல் சிரத்தையுடன் மலை ஏறிக்கொண்டிருந்தனர்.


பொங்கும் நுரையுடன் ஓடி வரும் லக்ஷ்மண் கங்கா ஆறு

மெல்ல மெல்ல குதிரையில் அமர்ந்து மலையேறிக் கொண்டிருந்தோம், எதிரே பல சீக்கிய குடும்பங்கள் வயதானவர் முதல் குழந்தைகள் வரை குழு குழுவாக  ஹேம்குண்ட் சாஹிப் தரிசனம் செய்து கொண்டு வாஹே குரு வாஹே குருஎன்று  அனைவருக்கும் முகமன் கூறிக்கொண்டு  இறங்கி வந்து கொண்டிருந்தனர்  குரு கோவிந்சிங் அவர்களின்  நினைவாக கோவிந்தாம் என அழைக்கப்படும்  கங்காரியாவை அடைய இன்னும் பாதி தூரம் இருக்கின்றது இதற்கும் சீக்கிய மார்க்கத்தை பற்றி  சிறிது காணலாமா அன்பர்களே.

 நமது பாரதத் திருநாட்டின் ஐந்து ஆறுகள் பாய்ந்து வளம் கொழிக்கும் பஞ்சாப் பிரதேசத்தில்  15ம் நூற்றாண்டில்  ஸ்ரீ குருநானக் அவர்களால் இம்மார்க்கம் ஆரம்பிக்கப்பட்டது. நம் கார்த்திகைத் தீபத்திருநாள்தான்   இவர் அவதரித்த நாள்.  இவருக்குப்பின் பத்து குருக்கள் இம்மத்தை வளர்த்துள்ளனர். இவர்களின் பத்தாவது குருவான ஸ்ரீ குரு கோவிந்த் சிங் என்பவர் தனது முற்பிறவில் தவம் செய்த தலம்தான்   நாம் இப்போது தரிசனம் செய்ய செல்லும் ஹேம்குண்ட்சாஹிப். இவர் இனி மேல் மனித குரு கிடையாது குருக்களின் பொன்மொழிகள் அடங்கிய குரு கிரந்த் சாஹிப் என்னும் நூல்தான் இனி உங்களுக்கு வாழும்  குரு, அந்த நூலையே  இனி குருவாக  வழிபட்டு வாருங்கள் என்று வழி காட்டி சென்றார்.  தனுஷ்கோடி மற்றும் தினேஷ்

"சீக்கியம்" என்ற இந்த சொல் அதனுடைய மூலப்பொருளை சமஸ்கிருத சொல்லிலிருந்து பெறுகிறது Sisya , இதன் பொருள் "சீடர், கற்பவர்" அல்லது "அறிவுரை" என்ற பொருள் தரும்  Sikhsa என்பதைக் குறிக்கிறது. "ரேஹத் மர்யாதா" நூலின் (சீக்கிய நடத்தை வழிகாட்டுதல்கள் மற்றும் நம்பிக்கைகள்) முதல் சட்டத்தின்படி, ஒரு சீக்கியர் என்பவர், "ஒரே முடிவற்ற இறைவனையும், ஸ்ரீ குருநானக் தேவ் முதல் ஸ்ரீ குரு கோவிந்த் சிங் வரையிலான பத்து குருக்களையும்; ஸ்ரீ குரு கிரந்த சாஹிப்பையும், பத்து குருக்களின் சொற்களையும் போதனைகளையும், பத்தாவது குரு விட்டுச்சென்ற ஞானத்தையும் முழுமனதாக நம்பும் ஒரு மனிதனாவான்" என்று கூறுகின்றது. வழியெங்கும் ஆர்க்கிட் மலர்கள்

எல்லா சீக்கியர்களிடையேயும் காணப்படும் பொதுவான அடையாளம், கத்தரிக்கப்படாத முடி(ஆண்களுக்கு தாடியும் அடங்கும்) மற்றும் அவர்களுடைய தலைப்பாகை. இந்த மார்க்கத்தைத் தோற்றுவித்த குருநானக், மூன்று அத்தியாவசிய கடமைகளில் சீக்கிய வாழ்க்கை முறையைச் சுருக்கமாக  இவ்வாறு கூறுகின்றார்: நாம் ஜபோ, கிராத் கர்னி மற்றும் வாண்ட் கே ஷாக்கோ, இவற்றின் பொருளாவது தெய்வீக பெயரை (வாஹேகுரு) தியானம் செய்க, கண்ணியமாகவும் நேர்மையாகவும் பணி செய்யுங்கள் மற்றும் ஒருவர் பெற்ற பலன்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள் ஆகியவையே ஆகும். நாய்க்கு பிஸ்கட் அளிக்கும் தேஷ்பாண்டே அவர்கள்


ஐந்து Kக்கள், அல்லது பஞ்ச காக்கர்/காக்கி  என்பது, எல்லா தீட்சை பெற்ற  சீக்கியர்களுக்குமான  நம்பிக்கையின் அடையாளமான ஐந்து பொருட்களாகும், இவற்றை பொதுவாக எல்லா நேரங்களிலும் சீக்கியர் அணிந்திருக்க வேண்டும் அவையாவன 1.கேசம் (வெட்டப்படாத முடி, பொதுவாக கட்டப்பட்டு, சுருட்டி சீக்கிய தலைப்பாகை, டாஸ்டர் என்பதன் கீழ் வைக்கப்படும்.) 2. கங்கா (மரத்தாலான சீப்பு, பொதுவாக டாஸ்டாரின் கீழ் அணியப்படும்.) 3.கச்சாஹெரா (பொதுவான இடுப்பிலிருந்து முட்டிவரை இருக்கும் ஆடை, வெள்ளை நிறத்திலிருப்பது.) 4.கடா (இரும்பாலானா கையணி, இது வெண்கல கைவாளாக போரில் பயன்படக்கூடியது, பெரியவை டாஸ்டரில் அணியப்பட்டு தூக்கியெறியக்கூடிய ஆயுதமாக பயன்படுத்தப்படும்.) 5.கிர்ப்பான் (வளைந்த கத்தி, பல அளவுகளில் வருகிறது).அவர்கள் எப்போதும் ஜெபம் செய்வது  வாஹே குரு ”  என்னும் நாமம் அதாவது அற்புதமான குரு.  . இவர்கள் ஒருவரை ஒருருவர் சந்திக்கும் போது ஒருவருக்கொருவர் வாஹே குரு என்று முகமன் கூறுகின்றனர்.

இவர்களது முக்கிய வழிபாட்டுத்தலம் அமிர்தசரஸில் உள்ள பொற் கோவிலாகும். இவர்களைப் போல் நாட்டிற்காகத் தியாகம் செய்வர்கள் மிகவும் குறைவுதான். நம் நாட்டில் சீக்கியர்கள் தான் அதிகமாகப் போர் வீரர்களாகச் சேருகின்றனர். தேசப்பற்று மிகவும் அதிகமானதால்  நாட்டிற்காகப் பல குருமார்கள் தங்களையே அர்ப்பணம் செய்திருக்கின்றனர். தற்போது உலகமெங்கும் இவர்கள் பரவியுள்ளனர் ஆயினும் அவர்களின் மார்க்கத்தை அப்படியே பின்பற்றி வருகின்றனர்.


வழியோர கடையில் சிவன் மற்றும் சாயிபாபா சன்னதி
அப்போதைய காலத்தில் இந்து மதத்தில் இருந்த சில கோட்பாடுகளான  பல தெய்வ வழிபாடு, சாதி வேறுபாடுகள், கர்மம்தான் முக்கியம் என்னும் கொள்கை , தீர்த்த யாத்திரை செய்வதுஒருவர் எவ்வளவு கொடிய  பாவம் செய்தாலும்  பரவாயில்லை அவர்  வழிபாடு செய்வதால் மன்னிக்கப்படுவார் என்பதை எதிர்த்து ஆரம்பிக்கப்பட்ட மார்க்கமே சீக்கிய மதம் என்றே தோன்றுகிறது. எனவே இரண்டு மார்க்கங்களுக்கும் நிறைய ஒற்றுமை உள்ளது. ஆனால்  சீக்கியர்களிடையில் எந்த விதத்திலும் எந்த விதமான உயர்வு தாழ்வும் இல்லை  அனைவரும் சமம்சாதி வேறுபாடுகள் கிடையாதுகுரு ஒருவரையே அதுவும் புத்தக வடிவில் வணங்குகின்றனர்இனி ஹேம் குண்ட சாஹிப் தலத்தின் மகிமையைப் பற்றி பார்க்கலாமா அன்பர்களே?

No comments: