Monday, November 14, 2011

அகத்தீஸ்வரர் பிரம்மோற்சவம் -18 (200வது பதிவு)


இப்பதிவு அகத்தீஸ்வரர் பிரம்மோற்சவத்தின் நிறைவுப்பதிவு. அதே சமயம் அடியேனின் சைவ சமய நடராஜர் வலைப்பூவின் 200வது பதிவு. இப்பதிவில் சென்னை நுங்கம்பாக்கம் அகிலாண்டேஸ்வரி உடனாய அகத்தீஸ்வரரின் தக்ஷிணாயண புண்ய கால பிரம்மோற்சவத்தின் நிறைவு நிகழ்ச்சியான அன்னையும் ஐயனும் ஏகாந்தமாக புஷ்ப பல்லக்கில் உலா வரும் அழகைக் காண்கின்றீர்கள். முதலில் பஞ்ச மூர்த்திகளை தரிசனம் செய்து விட்டு வாருங்கள்.




ஐந்து கரத்தன் , ஆனை முகன்


அன்னை அகிலாண்டேஸ்வரி


அகத்தீஸ்வரர் பாகம் பிரியா அம்மையுடன்

வள்ளி தெய்வானை உடனாய திருமுருகன்

சண்டிகேஸ்வரர்


புஷ்ப பல்லக்கின் முகப்பு

புஷ்ப பல்லக்கில் ஏகாந்தமாக அம்மையப்பர்


இத்திருக்கோவிலில் அடியேனுக்கு பிடித்தது அலங்கார மண்டபத்தில் வரையப்பட்டிருக்கும் ஒவியங்கள். பழம் பெரும் கோவில்களில் எல்லாம் பழைய ஒவியங்கள் சரிவர பராமரிப்பில்லாமல் அழிந்து வரும்காலத்தில் புதிதாக இயற்கை வண்ணத்திலே அற்புதமாக வரையப்பட்டிருக்கும் ஓவியங்களை ஒவ்வொரு பதிவிலும் பதிவிட்டிருக்கின்றேன். இன்றைய ஒவியங்கள் பெரியவை இல்லை என்றாலும் மண்டபத்தின் ஒவ்வொரு தூணிலும், குறுக்கு விட்டத்திலும்(beam) கூட ஒரு சிவ திருவிளையாடளை வரைந்திருக்கும் நேர்த்தியைக் கண்டு இரசியுங்கள்.
குறுக்கு விட்டத்தில் வரைந்திருக்கும் பாற்கடலை கடையும் ஓவியம்

மற்றும்

ஐயன் பிக்ஷாடணராக வரும் போது முனி பத்தினிகள் தன்னிலை இழக்கும் ஒவியம்



குறுக்கு விட்டத்தில் பாண்டிய மன்னன் மாணிக்கவாசகரை பிழை பொறுத்து அருளும்படி வேண்டும் ஓவியம் ( தூணில் நாகம் சிவபூஜை செய்யும் காட்சியையும் காண்கின்றீர்கள்)



தூணில் மயில் உருவில் அன்னை
சிவபெருமானை பூஜிக்கும் ஓவியம்


தூணில் கருங்குருவி சிவபெருமானை பூஜிக்கும் கோலம்

**********************

இனி 200வது பதிவில் இதுவரை வந்து தரிசித்த அனைவருக்கும் நன்றிகள். குறிப்பாக Sankar Guruswamy ஐயா அவர்களுக்கு விடாமல் ஒவ்வொரு பதிவையும் வந்து தரிசித்து பின்னூட்டமும் இட்டு உற்சாகப்படுத்தியதற்கு அனந்த கோடி நன்றிகள்.

2006 ஜூன்மாதம் திருக்கயிலாய யாத்திரை பற்றிய பதிவுடன், திரு. சிவமுருகன் அவர்கள் வழிகாட்ட இந்த சேவையை துவக்கினேண், பின்னர் 2007 ஜூலையில் இந்த வலைப்பூவைத்தொடங்கினேன், முதலில் நடராஜரைப் பற்றியும் அவரது ஆருத்ராதரிசனத்தையும் பற்றி எழ்தினேன் பின்னர் மஹா சிவராத்திரி, சென்னை, மேற்கு சைதாபேட்டை காரணீஸ்வரம் பிரம்மோற்சவ பதிவுகள், சென்னை சூளைமேடு பாரத்வாஜேஸ்வரம் பிரம்மோற்சவ பதிவுகள், காரைக்கால் மாங்கனித்திருவிழா, பஞ்ச சபைகள், கந்தன் கருணை என்ற பெயரில் கந்த சஷ்டிப்பதிவுகள், கார்த்திகை சோமவார விரதம் மற்றும் சங்காபிஷேகம் பற்றிய பதிவுகள், எங்கள் குலதெய்வம் அங்காள பரமேஸ்வரியிம் கும்பாபிஷேகப் பதிவுகள், தெப்போற்சவம் , அன்னாபிஷேகம், திருமயிலை கபாலீச்சுரம் பற்றிய பல பதிவுகள், அம்மனின் நவராத்திரி அலங்காரங்கள், சென்னை கந்த கோட்டம் முத்துக்குமார சுவாமி தைப்பூச பிரம்மோற்சவம் பற்றிய பதிவுகள் மற்றும் சென்னை நுங்கம்பாக்கம் அகத்தீஸ்வரர் பிரம்மோற்சவம் பற்றிய பதிவுகள் என்று இன்றி வரை 200 பதிவுகள் நிறைவடைந்து விட்டன.

இவ்வளவு பதிவுகள் இட காரணமாக இருந்த பல்வேறு அன்பர்களுக்கு ஆயிரம் கோடி நன்றிகள். குறிப்பாக, குமரன், கவிநயா, இரவிசங்கர், TRS, முருகனருள் VKS, மதுரையம்பதி, சீனா , expatguru, கீதா சாம்பசிவம், துளசி கோபால், அபி அப்பா, Kalyanji, சுப்பு தாத்தா, ஜீவா, ஜீவி, ஆயில்யன், Logan, கோவி.கண்ணன், Sivanarul, Jayashree, Sundar, Sangkavi, Ramachandran, Sankarguru மற்றும் ananymous ஆக வந்து பின்னூட்டமிட்ட அன்பர்கள் மற்றும் வந்து தரிசித்து சென்ற அன்பர்கள் அனைவருக்கும் நன்றிகள். இனி வரும் காலத்திலும் வந்து தரிசனம் செய்து செல்லுமாறு வேண்டிக்கொள்கிறேன்.

அன்பன்
கைலாஷி

11 comments:

Sankar Gurusamy said...

புஷ்பப்பல்லக்கு தரிசனம் அற்புதம்.. தங்கள் சேவை 2000 த்தைத்தாண்டியும் தொடர வாழ்த்துக்கள்.

பகிர்வுக்கு மிக்க நன்றி..

http://anubhudhi.blogspot.com/

S.Muruganandam said...

//தங்கள் சேவை 2000 த்தைத்தாண்டியும் தொடர வாழ்த்துக்கள்.//

இறைவன் அருளினாலும் தங்களைப் போன்ற அன்பர்களின் ஆசியினாலும் தாங்கள் வாழ்த்தியது போல் வர அவன் தாள் பணிகிறேன்.

cheena (சீனா) said...

அன்பின் முருகானந்தம்

ஆன்மீகச் சேவையில் - இருநூறு பதிவுகள் இட்டமை நன்று. பாராட்டுகள் - நல்வாழ்த்துகள்.

அகத்தீஸ்வரர் பிரம்மோற்சவத்தின் நிறைவுப்பதிவு அருமை. புகைப் படங்களும் அதன் விளக்கங்களும் நன்று. பஞ்சமூர்த்திகள் - புஷ்பப் பல்லக்கில் அம்மையப்பர் ஏகாந்தமாய் எழுந்தருளி வரும் காட்சிகள். காணக் கண் கோடி வேண்டும்.

ஐந்து ஆண்டுகட்கு முன்னர் வழி காட்டிய சிவ முருகனை இன்றும் நினைவு கூர்வது தங்களின் பெருந்தன்மையையும் நல்ல உள்ளத்தையும் காட்டுகிறது. நன்றி கூறுவது நற்றமிழர் பண்பு. அதனை விடாது கடைப்பிடிக்கும் தங்களது செயல் நெஞ்சைத் நெகிழ்விக்கிறது.

நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

cheena (சீனா) said...

மறு மொழிகளைத் தொடர்வதற்காக இம்மறுமொழி

S.Muruganandam said...

நன்றி மறப்பது நன்றல்லவா அல்லவா, சீனா ஐயா அவர்களே.

S.Muruganandam said...

//மறு மொழிகளைத் தொடர்வதற்காக இம்மறுமொழி//

அவனருளால் தொடரட்டும் சீனா ஐயா.
மிக்க நன்றி.

குமரன் (Kumaran) said...

இது மிகப் பெரிய தொண்டு கைலாஷி ஐயா. என்னைப் போன்ற வெளிநாட்டில் வசிப்பவர்களுக்கு வேண்டிய சேவை. தொடர்ந்து செய்து வருவதற்கு நன்றி.

நான் ஒவ்வொரு இடுகையையும் விடாமல் படித்து வருகிறேன்.

S.Muruganandam said...

//நான் ஒவ்வொரு இடுகையையும் விடாமல் படித்து வருகிறேன்.//

மிக்க நன்றி குமரன் ஐயா. மற்றவர்கள் படிக்கின்றார்கள் பலருக்கு உபயோகப்படுகின்றது அறியும் போது இன்னும் உற்சாகம் பிறக்கின்றது.

Test said...

நிறைவு பதிவை அருமையான பதிவாக முடித்துல்லீர்கள் ஐயா.ஆனை முகன் உருவமும் தங்களின் Profile உள்ள உருவமும் ஒருசேர உள்ளது. ஓவியங்களை முன்னிலை படுத்தியத் வெளியிட்டதிற்கு நன்றி. ௨௦௦வது பதிவிற்கு வாழ்த்துக்கள்

S.Muruganandam said...

Profilel உள்ளது வேறு கோவில் பிள்ளையார் ( பரத்வாஜேஸ்வரம்). எல்லா இடங்களிலும் சிறொஅ சாஸ்திரத்தின் படி ஒன்றாகத்தானே சாமி சிலையை வடிக்கின்றார்கள் அதானால் ஒன்றாக தோன்றுகிறதோ?

S.Muruganandam said...

//ஓவியங்களை முன்னிலை படுத்தியத் வெளியிட்டதிற்கு நன்றி//

அநேகமாக பல திருக்கோயில்களில் இந்த ஒவியங்கள் மறைந்து விட்டன எனவே ஒரு கோயிலில் அந்தக் கலையை கொண்டு வந்ததால்தான் அதற்கு முக்கியத்துவம் கொடுத்தேன்.

//௨௦௦வது பதிவிற்கு வாழ்த்துக்கள்//

உங்கள் ஆதரவுதான் மிக்க ஊக்கத்தைக் கொடுத்தது. என்ன கைலாஷி சார் இரண்டு மாதங்களாக ஒரு பதிவும் கானோமே> என்று கேட்டு மிகவும் உற்சாகப்படுத்தினீர்கள்.அனந்த கோடி நன்றிகள் Logan ஐயா.