Monday, September 12, 2011

அகத்தீஸ்வரர் பிரம்மோற்சவம் -6

சென்னை நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள அகிலாண்டேஸ்வரி உடனுறை அகத்தீஸ்வரர் திருக்கோவிலின் பிரம்மோற்சவ நிகழ்ச்சிகளை கண்டு இன்புற இருகரம் கூப்பி அழைக்கின்றேன் வாருங்கள். இந்தப்பதிவிலும் மூன்றாம் திருநாள் மாலை பூத வாகன சேவையின் அற்புத காட்சிகளை காணலாம் அன்பர்களே.



விக்னங்களை போக்கும் விநாயகர்




பூத வாகனத்தில் அகத்தீஸ்வரர்



உள் பிரகாரமும், வெளிப்பிரகாரமும் வலம் வந்து விட்டோம் இனி இக்கோவிலில் நடைபெறும் சிறப்பு வழிபாடுகளைப் பற்றிக் காண்போமா?

தினசரி நான்கு கால பூஜை சிறப்பாக நடைபெறுகின்றது .

தேய்பிறை அஷ்டமியில் பைரவருக்கு சிறப்பு அபிஷேகம் , வடை மாலை சாற்றப்படுகின்றது.

சங்கட ஹர சதுர்த்தியன்று வன்னிமர விநாயகருக்கு மஹா கணபதி ஹோமமும் சிறப்பு அபிஷேகமும் நடைபெறுகின்றது .

மாத சிவராத்திரி நாளில் காசி விஸ்வநாதருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறுகின்றது.





2009




2010


பூத வாகனத்தில் உள்ள ருத்திராக்ஷ மாலையின் அழகைக் காண படத்தை பெரிதாக கிளிக்கிப்பார்க்கவும்.






சுக்லபக்ஷ சஷ்டியன்று முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறுகின்றது.

பிரதோஷ மஹா அபிஷேகம் 30 வருடங்களாக சிறப்பாக நடைபெற்று வருகின்றது.

மாத பூச நட்த்திரத்தன்று வள்ளலாருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றது. தைப்பூச விழாவும் வெகு சிறப்பாக நடைபெறுகின்றது.

ஒவ்வொரு மாத இரண்டாம் வியாழனன்று சாய் பஜன் வெகு சிறப்பாக நடைபெறுகின்றது.



அன்ன வாகனத்தில் அன்னை அகிலாண்டேஸ்வரி







எழில் குமரன்




சண்டிகேஸ்வரர்





பஞ்ச மூர்த்திகளில் மும்மூர்த்திகள்





முன் மண்டபத்தில் உள்ள பிக்ஷாடணர் சிற்பம்



கால்களில் பாதுகைகளும், ஒய்யாரமாக ஒரு கையில் திரிசூலத்தை தாங்கியிருக்கும் லாகவகுமும், மானுக்கு புல் உறுத்தும் அழகும் கண்ணை விட்டு அகல மறுக்கின்றது.


அகத்தீஸ்வரரின் பிரம்மோற்சவம் தொடரும்…..


2 comments:

Sankar Gurusamy said...

ஓம் அகத்தீசாய நமஹ.... பூத வாகன தரிசனம் அற்புதம்..

பகிர்வுக்கு நன்றி..

http://anubhudhi.blogspot.com/

S.Muruganandam said...

ஓம் நமசிவாய ஓம் நமசிவாய