Tuesday, October 12, 2010

நவராத்திரி அலங்காரங்கள் - 6

நவராத்திரி ஆறாம் நாள்

அசோக்நகர் கருமாரியம்மன்
லக்ஷ்மி அலங்காரம்


நவராத்திரியின் ஆறாம் நாள் அன்னையை ஏழு வயது குழந்தையாக பாவித்து சண்டிகா என்னும் கன்யாவாக வழிபடுகின்றோம். அன்னையை இவ்வாறு வழிபடுவதால் துன்பம் நீங்கும். இன்றைய ஸ்லோகம்

சண்டிகாம் சண்ட ரூபாஞ்ச சண்டமுண்ட விநாசினீம் தாம்
சண்ட பாபஹரிணீம் சண்டிகாம் பூஜயாம்யஹம் ||

(சண்ட முண்டர்களை அழித்து மகா பாதகங்களை எந்த சக்தி நிவர்த்தி செய்கிறதோ அந்த சண்டிகையாகிய சக்தியை வணங்குகிறேன்.)



காத்யாயினி துர்க்கா

நவராத்திரியின் ஆறாம் நாள் அன்னை நவதுர்கைகளில் அன்னையை காத்யாயன முனிவரின் தவத்திற்கு இணங்கி அவரின் மகளாக அவதரித்த காத்யாயினியாக வழிபடுகின்றோம். அன்னை மும்மூர்த்திகள் மற்றும் சகல தேவர்களின் காந்தியால் உருவானாள். கோகுலத்து கோபியர்கள் கண்ணனை அடைய இவளையே தெய்வமாய் வழிபட்டு விரதம் இருந்தனர் என்பார்கள். கன்னியர் மனம் மகிழும்படியாக கணவனை அளித்துக் கல்யாணப் பேறு அளிப்பாள் இவள் என்று கூறுவார்கள்.


சந்த்ர ஹாஸோஜ்வலகரா சார்துல வர வாஹநா |

காத்யாயநீ சுபம் தத்யாத் தேவீ தாநவ காதிநீ ||


(திருக்கரத்தில் சந்திரஹாச வாளை ஏந்தி சிம்மவாகனத்தில் பவனி வந்து தேவர்களைக் காக்கும் காத்யாயினி அடியேனுக்கு எல்லா சுபங்களையும் வழங்கட்டும்.)

அசோக்நகர் சொர்ணாம்பாள்
மீனாக்ஷி அலங்காரம்

சொர்ணாம்பாள் துர்க்கை அலங்காரம்


பிரகத் சுந்தர குஜாம்பாள்
இராஜராஜேஸ்வரி அலங்காரம்


கருமாரி திரிபுரசுந்தரி லக்ஷ்மி அலங்காரம்


முப்பாத்தன் கோவிலில் தேரோட்டம் மற்றும்
கருட சேவை பொம்மைக்கொலு


மலைக்கோவில் பொம்மைக்கொலு


ரோக நிவாரணி அஷ்டகம்

நாதமும் நீயே நாற்றிசை நீயே

நாணமும் நீயே நாயகியே ||

மாதமும் நீயே மாதவம் நீயே

மானமும் நீயே மாயவளே

ரோக நிவாரணி சோகநிவாரணி

தாபநி வாரணி ஜெய துர்க்கா || (6)



அம்மன் அருள் வளரும்

No comments: