Monday, May 4, 2009

திருக்காரணி பூதவாகன சேவை

மூன்றாம் நாள் மாலை பூத வாகன சேவை

மூஷிக வாகனத்தில் விக்னேஸ்வரர்

மூன்றாம் நாள் காலையில் அதிகார நந்தியில் சேவை சாதித்த திருக்கயிலை நாதர் மாலை பூத வாகனத்தில் சேவை சாதிக்கின்றார். அதிகார நந்தி, பூதம், ரிஷபம், திருக்கயிலாய வாகனம் ஆகியவை எல்லாம் சிவபெருமானுக்கே உரிய சிறப்பு வாகனங்கள். எம்பெருமான் இவ்வாகனங்களில் எழுந்தருளி சேவை சாதிக்கும் போது அவருக்கு மிகவும் சிறப்பு அலங்காரம் செய்யப்படுகின்றது.



சர்வ அலங்காரத்தில் காரணீஸ்வரப் பெருமான்

முழுமுதற் கடவுளாகிய சிவபெருமான் தீயவர்களிடமிருந்து நல்லவர்களை காப்பாற்றவும் அசுர குணமுடையவர்களிடமிருந்து தேவ வகுப்பினரை காக்கவும் முன்னொரு காலத்தே தேவ வகுப்பில் ஒரு பிரிவினரை பூத கணங்களாக படைத்தருளினார் என்று விஷ்ணு புராணம் கூறுகின்றது.




உடன் சொர்ணாம்பிகை அம்பாள்

அன்னையை இன்றைய தினம் பவளம் சூடும் பத்மாசனியாய் துதிப்போமா?

பவளம்
துறவோ ரென்னும் ஞாயிற்றைத்
துணையா யீந்த தேமொழியே

துதிக்குந் திங்கள் அணிக்
துன்பங்களையுங் தூயவளே


பிறவா தென்றும் வாழ்கின்ற
பிடியே செவ்வாய்ச் செம்பவளம்
பிறங்கும் போதப் பொருள் தந்தே
பித்தன் பரவும் அற்புதமோ


மறவேன் ஞானந் தந்தென்றும்
மயல் தீர்த்தாளும் நற்குருவை
மதிக்கும் வாழ்வே விடி வெள்ளி
மாவாய்ச் சனியேன் நின்னருளால்


அறவோர் காஞ்சி காமாட்சி
அறங்கூர்ச் சைதைப் பொற்கொடியே
அடிமை கொண்டாய் அருள்வாமி
அன்னாய் சிவசொர் ணாம்பிகையே. (3)

வாரத்தின் நாட்களான ஞாயிறு முதல் சனி வரை இப்பாடலில் அமைத்து வாரத்தின் அனைத்து நாட்களிலும் நாம் அம்பாளை வணங்க வேண்டும் என்று உணர்த்துகின்ராறோ கவி.




தேவியருடன் சிவசுப்பிரமணிய சுவாமி

காரணீஸ்வரர் ஏகாந்த சேவை


உலகில் தர்மம் தழைக்க செய்வதற்கென படைக்கப்பட்ட இத்தேவ வகுப்பினர் எப்போதும் பரிவாரங்களுடன் சூழ்ந்து காணப்படுவதால் இவர்கள் பூதகணங்கள் என்று அழைக்கப்பதுகின்றனர். இவர்கள் கூர்மையான அறிவு, திறமை மற்றும் ஆற்றல் வாய்ந்தவர்களாக விளங்குகின்றனர். ஆகவே சிவபெருமான் தனது படைவீரர்களாக இவர்களை ஏற்றார். இவர்களின் தலைமைப் பதவியை தானே ஏற்றார். ஆகவே சிவபெருமான் பூதனார், பூதநாதர், பூத நாயகன் என்றழைக்கபப்டுகின்றார். பூத கணங்கள் எப்போதும் "ஹர ஹர" என்று சிவ பெருமானை துதித்த வண்ணம் இருக்கும், கணங்களுக்கு பதி கணபதி. முதன்மையானவர் நந்தியெம்பெருமான்

ஐயனின் வாமபாகம் அமர்ந்த
பிரியாவிடை அம்மை




பூத வாகனத்தில் ஐயனின் அற்புத சேவை

இடைச்சங்க காலத்தில் அகத்தியர் காலத்தில் பூதங்களின் பெருமையை விளக்க பூத புராணம் என்னும் ஒரு தொன்மையான நூல் இருந்துள்ளது.பூதபுரியில் சிவபெருமான் சொடு கொட்டி நடனம் ஆடியுள்ளதாய் காரைக்காலம்மையார் தமது அற்புத திருவந்தாதியில் பாடியுள்ளார்.

எப்படி இ்ருக்கின்றது ஐயனின் பூத வாகன சேவை. கம்பீரமாக கதை ,வாள், கேடயம் தாங்கி கம்பீரமாக ஐயனைத் தாங்கும் கர்வத்துடன் புதுப்பிட்ட பூத வாகன சேவையைக் காணக் கண்கோடி வேண்டும் என்றால் அது் மி்கையில்லை. நேரில் பார்த்தாலே அதை உணர முடியும்.

கோபுரப் பிண்ணனியில் பூத வாகன சேவை

ஐயனின் பின்னழகு

அன்ன வாகனமேறி அருள் சுரக்கும்
அன்னை சொர்ணாம்பிகை

காலை அதிகார நந்தி சேவையைப் போலவே அம்மை அன்ன வாகனத்திலும் முருகர் மயில், விநாயகர் மூஷிக வாகனத்திலும், சண்டிகேஸ்வரர் ரிஷப வாகனத்திலும் எழுந்தருளி அருள் பாலிக்கின்றனர். ஒரே ஒரு வித்தியாசம் காலை சேவைக்கும் மாலை சேவைக்கும் சிறப்பு மலர் அலங்காரம் .


திருக்க்காரணி தங்க முலாம் கம்பீர பூத வாகனம்

மலர் அலஙகாரத்துடன் ரிஷப வாகனத்தில் தனது தந்தையின் காலையே வெட்டிய சண்டிகேஸ்வரர்

இனி மூன்றாம் திருவிவிழாவின் தாத்பரியம்: நமது விணைகள் மூன்று வகைப்படும். அவையாவன் சஞ்சித பாவம், பிராத்துவ பாவம், முதாலவது ஆகாமிய பாவம், அதாவது முன் பிறவியில் செய்த விணைகள், இரண்டாவது சஞ்சித தொகுப்பில் இருந்து இப்பிறவியில் இறைவன் எடுத்து கொடுத்த ஒரு பகுதி, மூன்றாவது இப்பிறவியில் நாம் செய்யும் நல் விணை, தீவிணைகளின் தொகுப்பு ஆகும். நல்வினையால் தேவர் முதலிய நற்பிறப்பு கிட்டும், முக்தி கிடையாது. ஆகவே நாம் நல்வினை மற்றும் தீவிணை இரண்டில் இருந்து விடுபடவேண்டும் அது அவனருளாலே அவன் தாள் வணங்கினாலேயே முடியும்.

மேலும் மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசை என்னும் முண்று பாசங்களும், ஐயம் விபரீதம், மயக்கம் என்ற மூன்று புத்திகளும் மனிதனனுக்கு உண்டு. சந்தேகத்தினால் விபரீதம் உண்டாகும் அதனால் அறிவு மயங்கும் ஆகவே நல்லறிவு வேண்டு்தல் செய்ய வேண்டும் சிவசக்தியிடம்.

முவ்வினைகள் நீங்கி, மூவாசை விடுத்து நல்லறிவு வேண்டுவதே இந்த மூன்றாம் நாள் திருவிழாவின் தாத்பர்யம்.



No comments: