Saturday, November 1, 2008

கந்தன் கருணை -6

சூர சம்ஹாரம்

ஏறுமயிலேறி விளை யாடு் முகம் ஒன்றே
ஈசருடன் ஞானமொழி பேசும் முகம் ஒன்றே

கூறுமடியார்கள் விணை தீர்க்கு்முகம் ஒன்றே
குன்றுருவ வேல்வாங்கி நின்ற முகம் ஒன்றே

மாறுபடு சூரரை வதைத்த முகம் ஒன்றே
வள்ளியை மணம்புணர வந்தமுகம் ஒன்றே


ஆறுமுக மான பொருள் நீயருள வேண்டும்
ஆதியரு ணாசலம் அமர்ந்த பெருமாளே.
-----------------

சூரர் குலம் கருவறுக்க புறப்படுகின்றார்
சிவ சுப்பிரமணிய சுவாமி ( செங்குந்தக் கோட்டம்)

(ஐயனுக்கு செய்யப்பட்டுள்ள அலங்காரம் எவ்வளவு அருமை பாருங்கள்
அப்படியே அம்பு எய்வது போல் உள்ளது அல்லவா?)



அஞ்ஞானத்தை அழிக்கப்புறப்பட்ட
சிவ சுப்பிரமணியர் - காரணீஸ்வரம்



கந்த கோட்டம் கந்தசுவாமி போர்க்கோலம்

திருமுருகன் உடையும் சிவப்பு, செங்கடம்பு மாலையும் சிவப்பு, அவரது வேலும் சிவப்பு பகைவரை கொல்வதால் இரத்தம் தோய்ந்து, அவர் மேனியும் சிவப்பு செந்தமிழில் தோன்றியதால், அவரது திருமுகமோ விரியும் செங்கதிர் இளஞாயிறு போன்ற சிவப்பு என்றவாறு கந்த கோட்ட கந்தன் தங்கக்குதிரை வாகனத்தில் சிவப்பு உடை அணிந்து சூரசம்ஹாரம் செய்ய வரும் அற்புத கோலம்.


வில்லுடன் போருக்கு செல்கின்றார் ....


வெற்றி வேலாயுதப்பெருமாளாய்
திரும்பி வருகின்றார்.
சூரனை வதம் செய்யவில்லை அவனை சேவலாகவும் மயிலாகவும் மாற்றி ஆட்கொண்டார் கருணைக்கடலாம் கந்தன்.


தேவ சேனாபதி



இசைத்த ஏறுங் கரியுரி போர்வையும்
எழிழ்நீறும்
இலங்குநூலும் புலியதன் ஆடையும்
மழுமானும்


அசைத்த தோடுஞ் சிரமணி மாலையும்

முடிமீதே
அணிந்தஈசன் பரிவுடன் மேவிய
குருநாதா

உசத்தசூரன் கிளையுடன் வேரற
முனிவோனே

உகந்த பாசங் கயிறொடு தூதுவர் தனியாதே

அசந்த போதென் துயர்கெட மாமயில்


வரவேணும்
அமைத்த வேலும் புயமிசை மேவிய
பெருமாளே.



சூரனை வென்ற ஜெயந்தி நாதர்
துய்யதோர் மறைகளாலும் துதித்திடற்கு
அரிய செவ்வேள்
செய்ய பேரடிகள் வாழ்க!
சேவலும் மயிலும் வாழ்க!

வெய்ய சூர் மார்பு கீண்ட
வேல் படை வாழ்க! அன்னான்
பொய்யில் சீர் அடியார் வாழ்க!
வாழ்க இப்புவனம் எல்லாம்.



வேலும் மயிலும் துணை.

(நாளை தேவசேனை திருக்கல்யாணம்)


கந்தன் கருணை தொடரும்.............

4 comments:

Test said...

புகைபடங்களுக்கும் பதிவிற்கும் முதலில் நன்றி..

திருபோருரில் நடக்கும் சூர சம்ஹாரம் சற்று வித்யாசமாய் இருக்கும், அங்கு பல பக்தர்கள் தங்களுடைய வேண்டுதலை நிறைவேற்றும் பொருட்டு முருகன் வேடமிட்டு நீண்ட வேல் ஏந்தி இருப்பர், சம்ஹாரம் நடக்கும் பொழுது அவர்களும் தங்களை முருகப்படைகள் போலவே பாவித்து சூரனின் குடும்பத்தை சம்ஹாரம் செய்வர். எங்குஎங்கு நோக்கினும் முருகனே வேலுடன் காட்சி தருவர். முருகன் கிழக்கு நோக்கி சென்று சம்ஹாரம் முடிந்து அந்த திசை நோக்கிய திரும்ப வருவார். காண கண் கோடி வேண்டும்.

cheena (சீனா) said...

நண்ப கைலாஷி

அருமையான தரிசனம் - பல்வேறு அலங்காரத்தில் அழகு முருகன் சூர சம்ஹாரம் செய்வதற்குப் போர்க்கோலம் பூண்டு செல்வது நல்ல முறையில் படமாக்கப்பட்டிருக்கிறது.

நன்று நன்று நல்வாழ்த்துகள்

S.Muruganandam said...

சென்ற வருடம் நாலாம் திருநாள் அன்றும், இந்த வருடம் ஐந்தாம் திருநாளன்றும் அழகு முருகன் தரிசனம் கிடைத்தது அன்றே மயில் தோகை விரித்து ஆடும் அழகையும் காணும் பாக்கியம் கிடைத்தது.

தங்கள் வர்ணணையை படித்த பின் சூரசம்ஹாரத்தன்று அடுத்த வருடம் திருப்போரூர் செல்ல முருகரிடன் பிரார்த்தனை வைக்கின்றேன்.

S.Muruganandam said...

மிக்க நன்றி சீனா ஐயா முருகன் தரிசனம் கண்டு சென்றதற்கு.