Friday, October 31, 2008

கந்தன் கருணை -5

வைத்தீஸ்வரன் கோவில் செல்வ முத்துக்குமார சுவாமி


சைதை காரணீஸ்வரம்
காலை தொட்டி உற்சவம்



முருகா என்றழைக்கவா? முத்துக்குமரா என்றழைக்கவா?

கந்தா என்றழைக்கவா? கதிவேலா என்றழைக்கவா?
எப்படி அழைப்பேன் உன்னை எங்கே காண்பேன்.

கந்த கோட்டம் முத்துக்குமார சுவாமியின் அருட்கோலம்


காமதேனு வாகனத்தில் தேவ குஞ்சரி

கந்த கோட்ட இரண்டாம் நாள்
ஈசனுடன் ஞான மொழி பேசும் கோலம்



ஐந்தாம் நாள் நவ வீரர்களுடன் மந்திராலோசனை

சூரபதமன் கொடுமையை அழித்து தேவர்களையும் அனைவரும் காக்க திருவுளம் கொண்ட சிவபெருமான் தன் ஐந்து முகத்டோடு அம்மையின் அம்சமான கீழ் நோக்கிய அதோ முகம் என்னும் முகமும் கொண்ட ஆறு முகங்களின் நெற்றிக்கண்ணில் இருந்தும் ஆறு தீப்பொறிகளை தோற்றுவித்தார். அப்போது வெப்பம் தாங்காமல் அன்னை மலை மகள் கௌரி ஓடிய போது பார்வதி தேவியின் பாதச்சிலம்பிலிருந்து தெறித்த நவரத்தினங்களில் இருந்து நவ வீரர்கள் தோன்றினர். ஐயனின் நெற்றிக்கண்ணில் இருந்த வந்த பொறிகளை அக்னி தாங்கி கங்கையிலே சேர்க்க ஆறும் குழந்தைகளாயின.கார்த்திகைப் பெண்கள் அறுவர் வளர்த்த இக்குழந்தைகளை அன்னை பார்வதி ஒன்றாக்கி ஸ்கந்தனாக்கினார்.

மாணிக்கவல்லி் - வீரபாகு

தரள வல்லி - வீர கேசரி


புஷ்பராக வல்லி - வீர மகேந்திரர்

கோமேதகவல்லி - வீர மகேசர்

வைடூரியவல்லி - வீரபுரந்தரர்

வச்சிரவல்லி - வீரராக்கதர்

மரகதவல்லி - வீர மார்த்தாண்டர்

பவளவல்லி - வீராந்தகர்

நீலவல்லி - வீரதீரர்.

மேலும் நவ சக்திகளின் வியர்வையிலிருந்து லட்சம் வீரர்கள் தோன்றினர் முருகப்பெருமானின் படைவீரர்களாக.



கந்த கோட்டம் விமானம் மற்றும் கோபுர தரிசனம்

அருவமும் உருவமும் ஆகி அநாதியாய் பலவாய் ஒன்றாய்ப்

பிரமமாய் நின்ற சோதிப் பிழம்பதோர் மேனியாகக்

கருணைகூர் முகங்கள் ஆறும் கரங்கள் பன்னிரண்டுங் கொண்டே

ஒருதிருமுருகன் வந்தாங்கு உதித்தனன் உலகம் உய்ய.

வேலும் மயிலும் துணை.

(நாளை சூர சம்ஹாரம்)


கந்தன் கருணை தொடரும்.............

3 comments:

cheena (சீனா) said...

இறைத்தொண்டு செய்து வரும் அன்ப கைலாஷி

அரிய பதிவுகள் - பல தலங்களின் மூலவர், உற்சவர் புகைப்படங்கள் அருமை அருமை.

ஈசனுடன் ஞான மொழி பேசும் முகம் - அழகு. ஆசிரியன் அமர்ந்திருக்க மானவன் நின்றிருக்க - உறவுகளுக்கு அப்பாற்பட்டது ஆசிரிய மாணவர் - குரு வணக்கம்.

நவ வீரரகளின் பெயர்கள் உட்பட்ட வரலாறு - அறிந்து கொள்ள நிறைய செய்திகள் இருக்கிறது தங்களிடம்.

படிக்கப் படிக்க இன்பம்

நன்றி நல்வாழ்த்துகள்

S.Muruganandam said...

//ஈசனுடன் ஞான மொழி பேசும் முகம் - அழகு. ஆசிரியன் அமர்ந்திருக்க மானவன் நின்றிருக்க - உறவுகளுக்கு அப்பாற்பட்டது ஆசிரிய மாணவர் - குரு வணக்கம்//

தகப்பனுக்கு சுவாமியாக மகன் ஆகி நம் அனைவருக்கும் ஒரு உணர்த்திய அற்புத நாடகம் அல்லவா அது.

நன்றி சீனா ஐயா.

Anonymous said...

அருள் நிறை அலங்கர அழகுமுருகனைக
காண கண் கோடி வேண்டும்,

நன்றி.