Wednesday, April 16, 2008

சித்திரைப் பெருந்திருவிழா பரத்வாஜேஸ்வரம் - 6

ஆறாம் நாள் இரவு யானை வாகன சேவை



தஞ்சை அன்பர் சுப்பு ரத்தினம் அவர்கள் பின்னூட்டத்தை ஒரு கவிதையாகவே அளித்துள்ளார். அவருக்கு நன்றி.
sury has left a new comment on your post
//கோபுர வாசல் தரிசனம் //
இதைக் காண்போம் நாமும் தினம் தினம்.//
கார் மேகம் போல் கருணை பொழியும்
//ஊரெலாம் பச்சை பசேலென வாகும் ஊரார் வாழ்வும்
ஊறணியாய் பொங்கும்ஒரு காரணமாய் விளங்கும் //
காரணீஸ்வரப் பெருமான்//
நமக்கெலாம்கண்கண்ட தெய்வம்.//
வெள்ளி ரிஷ்ப வாகன சேவை//
நள்ளிரவில் ஓர் வெள்ளி நிலா அதைக்களித்தவர் மனமே இந்திர விழா.//
தங்க ரிஷப வாகனத்தில் சேவை //
தந்து எமை உய்விக்க வந்தாள் ஒரு பாவை.//
பத்மராகம் சூடும்//
பார்வதியே ! இமயவானருகில் அமையும் உமையே ! என்//
சிவசொர்ணாம்பிகை அம்மனே //
நீ//
தங்க முலாம் பெரிய மயில் வாகனத்தில்
எழில் குமரன் தேவியருடன்//
என்றும் என் மனதில் வீற்றிருக்க‌
இன்றெனக்கு அருள் புரிவாய்.
சுப்பு ரத்தினம்.தஞ்சை.
Thanks Suppu Rathinam
* * * * * *



பெருந்திருவிழாவின் ஆறாம் நாள் காலை சந்திரசேகரர் விமான உற்சவம் கண்டருளுகின்றார். இரவு யானை வாகன சேவை. திரிபுவன சக்ரவர்த்தி அம்பாரியில் வெள்ளை யாணையில் பவனி வரும் அழகை எப்படி வர்ணிப்பது அதற்காகத்தான் படமாக தந்துள்ளேன். பார்த்து மகிழுங்கள்

Sixth Day Evening

Elephant Mount


பிரளய காலத்தில் எல்லா உயிர்களும் எம்பெருமான் சிவபெருமான் காலடியில் ஐக்கியமாகின்றனர். அம்மையும் ஐயனும் மட்டுமே ஏகாந்தமாக இருக்கும் போது ஐயன் வீணை வாசிக்கின்றார். இன்றைய யானை வாகன சேவைக்காக வேயுறு தோளி பங்கன், விடமுண்ட கண்டன் மிக நல்ல வீணை தடவும் கோலத்தைக் காணக் கண் கோடி வேண்டுமல்லவா?





யானை வாகன சேவைக்காக அம்பாரியில் பரத்வாஜேஸ்வரப் பெருமானை வைத்து அலங்காரம் செய்திருக்கும் நேர்த்தியை வியக்காமல் இருக்க முடியவில்லை. அடியேன் கண்ட பல பெருவிழாக்களில் இதுவே முதல் தடவை அம்பாரியுடன் அலங்காரம்.





மாவகிடண்ண கண்ணி

ஜக்தஜனனி சொர்ணாம்பிகை







வெள்ளை யானையில் அம்பாரி அம்பாரியில் பார்வதீஸ்வரர்

கொள்ளை போகுதே உள்ளம் ஓம் நமசிவாய! ஓம் நமசிவாய!


No comments: